இந்தியர் என்று கெத்தா காலரை தூக்கி விடலாம்! அமெரிக்காவே நம்மளை தான் ஃபாலோ பண்ணுது- கார் இறக்குமதிக்கு செக்மேட்
உள்நாட்டில், வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதில் நம் இந்திய அரசாங்கம் கடந்த பல வருடங்களாகவே உறுதியாக உள்ளது. அதாவது, வெளிநாட்டில் இருந்து வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களை இந்தியாவிலேயே தொழிற்சாலை அமைத்து செயல்பட வைக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது. இதன் விளைவாக, இயற்கை வளங்கள் பாதிக்கப்பட கூடும் என்கிற ஒரு பின்னடைவு இருந்தாலும், இவ்வாறு உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை முன்னுறுத்தி காட்டும். நமது இந்திய அரசின் இந்த யுக்தியை அமெரிக்காவும் பின்பற்ற ஆரம்பித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்று இருக்கும் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) பதவியேற்றதில் இருந்து பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சட்ட விரோத அமெரிக்க குடியேற்றங்களை தடுப்பது, விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸை எலான் மஸ்க் (Elon Musk)-இன் உதவியுடன் பூமிக்கு கொண்டுவந்தது என சொல்லிக் கொண்டே போகலாம்.
சமீபத்தில் கூட, அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே அமெரிக்க தேர்தலில் ஓட்டளிக்கும் விதத்தில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளில் சில மாற்றங்களை செய்தார். இதற்கான ஒப்புதலில் கையெழுத்திட்ட பின் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பல விஷயங்களில் அமெரிக்கா அரசாங்கம் இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளின் அரசாங்கங்களை பின்பற்ற உள்ளதாக வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.
அதன்படி நம் இந்திய அரசாங்கத்தை போல், உள்நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் அதிபர் டிரம்ப் ஈடுப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல் வாகனங்களுக்கு அவற்றின் விலையில் 25% இறக்குமதி கட்டணமாக விதிக்கப்படும் என அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து அறிக்கை வெளிவந்துள்ளது.

இதன் மூலமாக அமெரிக்க அரசாங்கத்திற்கு வருடத்திற்கு ஏறக்குறைய 10 ஆயிரம் கோடி டாலர்கள் (தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.8.58 லட்சம் கோடி) வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 3ஆம் தேதியில் இருந்து அமலுக்குவர உள்ள இந்த சட்டத்தினால் அமெரிக்காவில் குறிப்பிட்ட சில வாகனங்களின் விலைகள் அதிரடியாக உயரும் என்றும், இதனால் வாகன விற்பனை பாதிக்கப்பட கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், அமெரிக்க ஆட்டோமொபைல் துறையில் இன்னும் பல மாற்றங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை என்னென்ன என்பதை பற்றியும், இதனால் நம் இந்தியாவிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பதை பற்றியும் இனி விரிவாக பார்க்கலாம். முதலாவதாக, அமெரிக்க அரசாங்கத்திற்கு கிடைக்க போகும் அதிக வருவாயை பற்றி பார்க்கலாம்.

அதிக வருவாய்: ஏற்கனவே கூறியதுபோல், வருடத்திற்கு சராசரியாக 10 ஆயிரம் டாலர்கள் வருவாய் இதன் மூலமாக அமெரிக்க அரசாங்கத்திற்கு கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், இந்த வருவாயின் மூலமாக உள்நாட்டு தொழில்துறைகளை அமெரிக்க அரசு மேம்படுத்தலாம். இதன் மூலம் மக்களின் பொருளாதார நிலை இன்னும் மேம்படும் என தெரிவிக்கப்படுவதால், 25% இறக்குமதி வரி ஆரம்பத்தில் மக்களுக்கு பிரச்சனையாக இருந்தாலும், கூடிய விரைவிலேயே அதனை சமாளிக்கும் அளவிற்கு மக்களின் பொருளாதாரம் மேம்பட்டுவிடும் என கூறப்படுகிறது.
அதிக கார் விலைகள்: அமெரிக்க அரசாங்கம் கொண்டுவந்துள்ள இந்த புதிய நடவடிக்கை ஆனது வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் ஆட்டோமொபைல் வாகனங்களுக்கு மட்டுமே ஆகும். ஆதலால், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படாத விலையுயர்ந்த வாகனங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் செல்வந்தர்கள் தான் இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்கப்படுவர்; பாமர மக்கள் அல்ல.
உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு: அமெரிக்க அரசு கொண்டுவந்துள்ள இந்த நடவடிக்கைக்கு முக்கியமான காரணமே, உள்நாட்டில் ஆட்டோமொபைல் வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பது ஆகும். இந்த விஷயத்தை ஏற்கனவே தெரிந்துக் கொண்டு, தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அமெரிக்காவின் லூயிசியானாவில் 580 கோடி டாலர்கள் மதிப்பீட்டில் இரும்பு உற்பத்தி தொழிற்சாலையை நிறுவி வருவதை சுட்டிக்காட்டி தனது யுக்தி வெற்றி பெற்று வருவதாக டிரம்ப் பெருமிதம் கொண்டுள்ளார்.
குறுகிய காலத்திற்கு நிச்சயமற்ற தன்மை: வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை தடுப்பதன் மூலம் உள்நாட்டு ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்தலாம் என்பது அமெரிக்க அரசாங்கத்தின் திட்டமாக இருந்தாலும், இன்னும் குறுகிய காலத்திற்கு இதன் விளைவாக சில அசவுகரியங்கள் அங்கு ஏற்படலாம். அதாவது, வெளிநாட்டு இறக்குமதி கார்களின் அதிக விலைகள் மற்றும் சில வேலை இழப்புகள் கூட ஆரம்பத்தில் ஏற்படலாம். அதன் பின்னரே நிலைமை சீராகும்.

கார் பாகங்களுக்கும் இறக்குமதி வரி: அமெரிக்காவில் செயல்படும் பெரும்பாலான கார் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பாகங்களை கொண்டுவருகின்றன. குறிப்பாக, மெக்ஸிகோ, கனடா மற்றும் ஆசியாவில் இருந்து பாகங்களாக அமெரிக்காவுக்கு கொண்டுவந்து முழு காராக உருவாக்கி விற்பனை செய்கின்றன. தற்போது இந்த வழியில் கார்களை உருவாக்குவதற்கும் கணிசமான அளவில் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இது கடைசியில் கஸ்டமர்களின் தலையில் வந்துதான் விடியும்.
பங்கு சந்தையில் மாற்றம்: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பை வெளியிட்டதற்கு பிறகு, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பானது 3 சதவீதமும், ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3.6 சதவீதமும் குறைந்துள்ளது. அதேநேரம், ஃபோர்டு நிறுவனத்தின் பங்கு மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அமெரிக்க பங்கு சந்தை நிலவரம் ஆட்டோமொபைல் நிறுவனங்களால் அடுத்த சில மாதங்களுக்கு ஏற்ற, இறக்கமாகவே இருக்கும்.
வரி குறைப்பு திட்டங்கள்: அமெரிக்க அரசாங்கத்தின் இந்த புதிய அறிவிப்பால் கார்களின் விலைகள் அதிகமாக வாய்ப்புள்ளதால், கடனுதவி பெற்று கார் வாங்குபவர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தை வழங்குமாறு டிரம்ப் அரசாங்கம் வங்கிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால், அப்படியிருந்தாலும் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை வாங்குவதற்கான கடனுதவிக்கான வட்டி விகிதம் மட்டுமே குறைத்துக் கொள்ளப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீதான 25% வரி ஆனது அமெரிக்காவில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது மட்டுமின்றி, புது, புது ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் அங்கு உருவாக வழிவகை செய்யும். இதன் மூலமாக, புதிய வேலை வாய்ப்புகளும் அங்கு உருவாகும்.
அமெரிக்காவில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி தொழிற்சாலையை கொண்டுள்ளன. பணக்காரர்கள் மட்டுமே விலையுயர்ந்த கார்களை வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டு வருகின்றனர். ஆதலால், அமெரிக்கா அரசாங்கத்தின் இந்த புதிய நடவடிக்கை ஆனது பணக்காரர்களிடம் இருந்து பணத்தை பெற்று ஏழை, எளியோருக்கு கொடுக்கும் பழமையான டெக்னிக் ஆகும்.


Click it and Unblock the Notifications









