அம்பானி குடும்பம் யூஸ் பண்ணும் காரை வாங்கிய போலீசார்!! ரோந்து பணிக்கு இனி இதில்தான் வருவாங்க!

ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கார்களை போலீஸார் தங்களது ரோந்து பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர் என்றால் நம்ப முடிகிறதா? அட ஆமா உண்மைதாங்க... ஆனால் நம் இந்தியாவில் உள்ள போலீசார் கிடையாது, அமெரிக்காவில் இருக்கும் போலீசார். இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உலகளவில் பொருளாதாரத்தில் முன்னிலையில் இருக்கும் அமெரிக்காவில் லக்சரி கார்களை பயன்படுத்துவோர் மிக அதிகம் என்பதை நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய போவதில்லை. நம்ம நாட்டில் பயன்படுத்தப்படும் மெர்சிடிஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட கார்களை எல்லாம் அமெரிக்கர்கள் விலையுயர்ந்த கார்களாகவே மதிப்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

miami police using rolls-royce car

அவர்களை பொறுத்தவரையில், விலையுயர்ந்த கார்கள் என்றால் ரோல்ஸ்-ராய்ஸ், ஃபெராரி போன்றவை ஆகும். நம் இந்தியாவில் பென்ஸ் கார்களை பயன்படுத்தும் போலீஸாரை காண்பது மிகவும் அரிதானது. ஆனால், அமெரிக்காவில் மியாமி கடற்கரை போலீஸார் ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை பேட்ரோல் வாகனமாக பயன்படுத்துகின்றனர்.

ரீல்ஸ் மோகம் யாரை தான் விட்டது... மியாமி கடற்கரை போலீஸாரும் தங்களிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை கெத்தாக காட்டும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில், மோட்டார்சைக்கிள்கள் இரண்டிற்கு பின்னால் வரும் மியாமி போலீசாரின் ரோல்ஸ்-ராய்ஸ் காரை வீடியோவின் இறுதியில் ஹைலைட்டாக முன்னுறுத்தி காட்டியுள்ளனர்.

miami police using rolls-royce car

மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கார் என அனைத்திலும் சைரன் இருப்பதை வீடியோவில் காணலாம். இந்த வீடியோ மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமனம் ஆகும் சமயத்தில் எடுக்கப்பட்டுள்ளதால், சைரன் வெளிச்சம் பிரகாசமாகவும், பார்வையாளர்களை கவர கூடியதாகவும் உள்ளது. மியாமி பீச் போலீஸாரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவை இப்போது வரையில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

போலீசாரின் இந்த எக்ஸ் பதிவின்படி பார்க்கும்போது, வீடியோவில் காட்டப்படும் ரோல்ஸ்-ராய்ஸ் காரை மியாமி கடற்கரை போலீஸார் சமீபத்தில்தான் வாங்கியுள்ளனர். இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரை பிராமன் மோட்டார்ஸ் என்கிற டீலர்ஷிப் ஷோரூம் மூலமாக மியாமி பீச் போலீசார் வாங்கியுள்ளனர். இதனால், எக்ஸ் பதிவில் பிராமன் மோட்டார்ஸ் உடனான கூட்டணியை பற்றி தெரிவித்துள்ள போலீசார், இந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் சிஎம்பி பாலிசியின்படி வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

miami police using rolls-royce car

இந்த வீடியோவில் காட்சி தருவது ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார் ஆகும். இந்தியாவில் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.6.95 கோடியாக உள்ளது. இந்தியாவில், டைமண்ட் பிளாக், மிட்நைட் நீலம், சாலமன்கா நீலம், டார்க்கெஸ்ட் டங்க்ஸ்டன், போஹேமியன் சிவப்பு, அந்த்ராசைட், ஸ்காலா சிவப்பு, ஜூபிலி சில்வர், சில்வர், இங்கிலிஷ் வெள்ளை, ஆர்டிக் வெள்ளை உள்ளிட்ட பெயிண்ட் ஆப்ஷன்களில் ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார் கிடைக்கிறது.

இத்தகைய காரை மியாமி கடற்கரை போலீஸார் வாங்கியிருப்பது ஒருபக்கம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தினாலும், மறுபக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் தளத்தில் போலீஸார் வெளியிட்டுள்ள இந்த வீடியோவிற்கு கீழ் ஒருவர், "மியாமி நகரம் 6.8 கோடி டாலர் பட்ஜெட் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. ட்ரூத் இன் அக்கவுண்டிங்கின் சமீபத்திய அறிக்கையில் மிகப்பெரிய நிதி பற்றாக்குறையை கொண்ட முதல் 10 அமெரிக்க நகரங்களில் ஒன்றாக மியாமியை பட்டியலிட்டுள்ளது" என மியாமி மாகாண பொருளாதாரத்தின் தற்போதைய நிலைமையை சுட்டி காட்டியுள்ளார்.

miami police using rolls-royce car

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாகாணத்தின் பொருளாதாரம் அவ்வப்போது மாற்றமடைந்து கொண்டுதான் இருக்கும். அதற்காக, போலீஸார் தங்களது பணிகளுக்காக புதிய வாகனங்களை வாங்க கூடாது என சொல்ல முடியாது. இருப்பினும், ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் போன்ற விலையுயர்ந்த காரை வாங்குவது கொஞ்சம் டூ மச் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, May 13, 2024, 19:04 [IST]
English summary
America miami beach police using rolls royce as patrol car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X