அமெரிக்காவின் அதிவேக போலீஸ் கார் - டோட்ஜ் சார்ஜர்!

By Saravana

அமெரிக்க போலீசாரின் அதிவேக செடான் கார் என்ற பெருமையை டோட்ஜ் சார்ஜர் பர்சூட் பெற்றுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது மோதுவதற்காக வந்த கார் சமீபத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், இதுபோன்று பல்வேறு பாதுகாப்பு பிரச்னைகள் அங்கு அதிகரித்து வருகின்றன.

இதையடுத்து, கண்காணிப்பையும், கூடுதல் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு விசேஷ அம்சங்கள் கொண்ட அதிவகே கார்களை அமெரிக்க போலீசார் வாங்குகின்றனர். அதற்காக, அமெரிக்க போலீசாரின் வழிகாட்டுதல்களுடன் வடிவமைக்கப்பட்ட புதிய டோட்ஜ் சார்ஜர் காரை கிறிஸ்லைர் வழங்க உள்ளது. கடந்த மாதம் இந்த கார் ரேஸ் டிராக்கில் வைத்து சோதிக்கப்பட்டது. அப்போது, வேகத்தில் புதிய சாதனையை பதிவு செய்தது.

கனடா தயாரிப்பு

கனடா தயாரிப்பு

அமெரிக்க போலீசாருக்கான கார்கள் கனடாவில் தயாரிக்கப்பட்டு வர இருக்கின்றன. வரும் ஆண்டு துவக்கத்தில் இந்த கார்கள் அமெரிக்க போலீசில் முறைப்படி இணைக்கப்பட்டு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் பயன்படுத்தப்படும்.

சோதனையில் சாதனை

சோதனையில் சாதனை

கடந்த மாதம் 26ந் தேதி மிக்சிகனில் உள்ள கிராட்டன் ரேஸ் வேயில் வைத்து போலீசாரால் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, கிராட்டன் ரேஸ் வேயின் சராசரி வேக அளவான 1:34.75 நிமிடங்களை விட குறைவான நேரத்தில் டோட்ஜ் சார்ஜர் பர்சூட் 1:33.85 நிமிடங்களில் ஒரு லேப்பை நிறைவு செய்து புதிய வேக சாதனையை பதிவு செய்தது.

எஞ்சின்

எஞ்சின்

சோதனை செய்யப்பட்ட கார் 370 எச்பி ஆற்றலை அள்ளி வழங்கும் 5.7 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டது. இந்த கார் 292 எச்பி ஆற்றலை வழங்கும் 3.6 லிட்டர் எஞ்சின் மாடலிலும் கிடைக்கிறது.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

ஆல் வீல் டிரைவ் கொண்ட இந்த செடான் கார் 0- 100 கிமீ வேகத்தை 6.0 வினாடிகளில் எட்டும். அமெரிக்க போலீசாரின் அறிவுறைகளின்படி இந்த காரில் பல கஸ்டமைஸ் வசதிகள் மற்றும் எஞ்சினில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கிறிஸ்லர் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

போலீசார் தவிர பிறர் காரை எடுக்காத விதத்தில் சிறப்பு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதிவேகத்தில் செல்லும்போது சிறப்பான கையாளுமையை வழங்கும் விதத்தில், பிரத்யேக சஸ்பென்ஷன் அமைப்பையும், பிரேக்குகளையும் கொண்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, October 7, 2013, 15:52 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+