சுமார் 26 சக்கரங்களுடன் உலகின் நீளமான கார், அமெரிக்கன் ட்ரீம்!! எத்தனைக்கு பேருக்கு இந்த காரை பற்றி தெரியும்?

ஒரு காரில் என்னென்ன அம்சங்கள் இருக்கும்? ஏசி, படங்களை பார்ப்பதற்கு பெரிய திரை இருக்கும், ஒரு சில கார்களில் மஸாஜ் வசதி கூட இருக்கும். இவை எல்லாம் தற்போதைய மாடர்ன் கார்களில் தான் வழங்கப்படுகின்றன. 20, 30 வருடங்களுக்கு முன்பு இத்தகைய வசதிகள் கூட இருந்தனவா என்றால் இல்லை என்பது தான் பதில்.

சுமார் 26 சக்கரங்களுடன் உலகின் நீளமான கார், அமெரிக்கன் ட்ரீம்!! எத்தனைக்கு பேருக்கு இந்த காரை பற்றி தெரியும்?

ஆனால் 1986-லேயே அமெரிக்காவில், குளியல் தொட்டி, ஹெலிபேட் மற்றும் மினி கோல்ஃப் மைதானம் உள்ளிட்டவற்றுடன் நீளமான கார் ஒன்று உருவாக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறது. சுமார் 100 அடி நீளத்தில் உருவாக்கப்பட்ட இந்த கார் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 26 சக்கரங்களுடன் உலகின் நீளமான கார், அமெரிக்கன் ட்ரீம்!! எத்தனைக்கு பேருக்கு இந்த காரை பற்றி தெரியும்?

இவ்வாறு நீளமான லிமௌசைனாக உருவாக்கப்பட்ட இந்த கார் அமெரிக்கன் ட்ரீம் என பலரால் அறியப்படுகிறது. மேலும் இந்த நீளமான காரினை சிலர் லேமோகின் எனவும் அழைக்கின்றனர். மேற்கூறப்பட்ட வசதிகள் மட்டுமின்றி, ஜக்குஸி, குளிர்சாதன பெட்டி மற்றும் பல தொலைக்காட்சி & தொலைப்பேசிகளும் வழங்கப்பட்டு இருந்தன.

இந்த காரை உருவாக்குவதற்கு நிச்சயமாக தற்போதைய லக்சரி கார்களை காட்டிலும் அதிகம் செலவாகி இருக்கும். இந்த அமெரிக்கன் ட்ரீம் காரில் மொத்தம் 70 நபர்கள் அமர முடியுமாம். இந்த உலக சாதனை படைத்த அமெரிக்கன் ட்ரீம் காரை எந்தவொரு கார் தயாரிப்பு நிறுவனமும் தயாரிக்கவில்லை. இதனை உருவாக்கியவரின் பெயர் ஜே ஓர்பெர்க் ஆகும்.

சுமார் 26 சக்கரங்களுடன் உலகின் நீளமான கார், அமெரிக்கன் ட்ரீம்!! எத்தனைக்கு பேருக்கு இந்த காரை பற்றி தெரியும்?

ஜே ஓர்பெர்க், ஹாலிவுட் படங்களுக்காக வாகனங்களை வடிவமைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். இந்த அமெரிக்கன் ட்ரீம் மட்டுமின்றி, ஏகப்பட்ட கார்களையும் தனது பயன்பாட்டிற்காக இவர் வடிவமைத்துள்ளார். அமெரிக்கன் ட்ரீம்மை இவர் 1980ஆம் ஆண்டில் உருவாக்கினார். அமெரிக்கன் ட்ரீம் அடிப்படையில் 1976 காடிலாக் எல்டோராடோ லிமௌசைனில் இருந்து உருவாக்கப்பட்டதாகும்.

சுமார் 26 சக்கரங்களுடன் உலகின் நீளமான கார், அமெரிக்கன் ட்ரீம்!! எத்தனைக்கு பேருக்கு இந்த காரை பற்றி தெரியும்?

1980களில் உருவாக்க துவங்கப்பட்டப்பட்ட இந்த உலகின் நீளமான காரை வடிவமைக்க எத்தனை ஆண்டுகள் ஆனது என தெரிந்தால் உண்மையில் ஆச்சிரியப்படுவீர்கள். சுமார் 12 ஆண்டுகளாம். 1992இல் தான் இந்த கார் சாலையை வந்தடைந்தது. சுமார் 26 சக்கரங்களுடன் இயங்கும் இந்த காரினை எவ்வாறு திருப்புவது என்கிற கேள்விக்கு உங்களுக்கு எழலாம்.

சுமார் 26 சக்கரங்களுடன் உலகின் நீளமான கார், அமெரிக்கன் ட்ரீம்!! எத்தனைக்கு பேருக்கு இந்த காரை பற்றி தெரியும்?

இதற்காகவே இரு முனைகளில் இருந்தும் இயக்கும் வசதி இந்த லிமௌசைன் காருக்கு வழங்கப்பட்டது. ஹெலிகாப்டர்களை நிறுத்த தேவையான சமமான பகுதியாக இதன் முன்பக்க & பின்பக்க பொனெட் பயன்படுத்தப்பட்டன. இயக்க ஆற்றலை வழங்க ஏகப்பட்ட வி8 என்ஜின்கள் இந்த அமெரிக்கன் ட்ரீம் காரில் பொருத்தப்பட்டுள்ளன.

சுமார் 26 சக்கரங்களுடன் உலகின் நீளமான கார், அமெரிக்கன் ட்ரீம்!! எத்தனைக்கு பேருக்கு இந்த காரை பற்றி தெரியும்?

இரு முனைகளில் இருந்தும் இயக்கும் வசதி வழங்கப்பட்டாலும், சில திருப்பங்களில் காரை திருப்பவதும், வெளியே கொண்டுவருவதும் சிக்கலான விஷயம் என்பதால், இந்த காரினை பாதியாக பிரித்து கொண்டு, பிறகு இணைத்து கொள்ளலாம் என செய்திகள் கூறுகின்றன. உண்மையில் இந்த கார் வழக்கமான சாலையில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்படவில்லை. ஹாலிவுட் படங்களுக்காகவே உருவாக்கப்பட்டது.

சுமார் 26 சக்கரங்களுடன் உலகின் நீளமான கார், அமெரிக்கன் ட்ரீம்!! எத்தனைக்கு பேருக்கு இந்த காரை பற்றி தெரியும்?

இந்த லிமௌசைன் பல்வேறு நிகழ்ச்சிகளில் இதுவரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் சில பணக்காரர்களுக்கு ஜாலியான பயணத்திற்காக ஒரு மணிநேரத்திற்கு ரூ.14 ஆயிரம் என்ற விலையில் வாடகைக்கும் விடப்பட்டது. 1990களில் முதன்முறையாக பயன்பாட்டிற்கு வந்த போது குறிப்பாக அமெரிக்க மக்களிடையே வேகமாக இது பிரபலமாகியது.

ஆனால் அதன்பின் இந்த காரினை தொடர்ந்து பராமரிப்பதற்கு அதிகளவில் செலவாகியதால் மெல்ல மெல்ல கவனத்தை இழந்தது. அதேபோல் சினிமா பட தயாரிப்பு நிறுவனங்களும் அமெரிக்கன் ட்ரீம்-ஐ கண்டுக்கொள்ளவில்லை. அதிக பராமரிப்பு செலவு என்பது மட்டுமின்றி, சுமார் 100 அடி நீளத்தில் உள்ள இதனை நிறுத்தி வைக்கவும் அதிக இட வசதி தேவைப்பட்டது.

சுமார் 26 சக்கரங்களுடன் உலகின் நீளமான கார், அமெரிக்கன் ட்ரீம்!! எத்தனைக்கு பேருக்கு இந்த காரை பற்றி தெரியும்?

இது நிச்சயம் பட குழுவினருக்கு ஏற்றதாக இருக்காது. ஏறக்குறைய உருவாக்கபட்டு 30 வருடங்கள் நிறைவடைந்ததால் இதன் பெரும்பான்மையான பாகங்கள் துரும்பிடித்ததாகவும், இதுவே இந்த அமெரிக்கன் ட்ரீம் காரின் அழிவிற்கு காரணமாக அமைந்ததாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் துருப்பிடித்த நிலையில் இருந்த இந்த காரினை கார் அருங்காட்சியகம் ஒன்று சமீபத்தில் விலைக்கு வாங்கியுள்ளது. மேலும் காரினை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரவும் தயாராகி வருகிறது. இத்தகைய நீளமான கார் பயன்பாட்டிற்கு ஏற்றதா? இப்படிப்பட்ட கார் ஒன்று உங்களிடம் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? கீழே கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Meet American Dream A Car With Helipad Swimming Pool
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X