போயிங் 727 விமானத்தை வீடாக மாற்றி வசிக்கும் அமெரிக்கர்... படங்களும், தகவல்களும்... !!

Written By:

கார், வேன், பஸ், டிரக்குகளை வீடாக மாற்றி பயன்படுத்துவதை அதிகம் பார்த்திருக்கிறோம். ஆனால், அமெரிக்காவை சேர்ந்த புரூஸ் கேம்பல் என்பவர், போயிங் 727 விமானத்தை வீடாக மாற்றி வசித்து வருகிறார்.

பல்வேறு வசதிகளுடன் வீடாக மாற்றப்பட்ட அவரது விமானத்தின் படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

வசிப்பிடம்

வசிப்பிடம்

அமெரிக்காவின் ஒரிகான் நகரில் உள்ள போர்டலேண்ட் என்ற பகுதியில்தான் அவர் தனது விமான வீட்டை நிறுத்தியிருக்கிறார். அவருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் இந்த விமான வீட்டை நிறுத்தி வைத்துள்ளார்.

 நீண்ட காலமாக...

நீண்ட காலமாக...

கடந்த 1999ம் ஆண்டு முதல் இந்த விமான வீட்டில்தான் புரூஸ் கேம்பல் வசித்து வருகிறார். அதற்காக விமானத்தில் பல மாறுதல்களை கொஞ்சம் கொஞ்சமாக செய்துள்ளார்.

இணையதளம்

இணையதளம்

தனது விமான வீட்டை எவ்வாறு மாற்றப்பட்டு வருகிறது என்பதை பிறர் தெரிந்துகொள்வதற்காக airplanehome.com என்ற இணையதளத்தை திறந்து, அதில் அவ்வப்போது என்னென்ன மாற்றங்கள் செய்துள்ளார் என்பதையும் பதிவேற்றி வந்திருக்கிறார்.

 சகல வசதிகள்

சகல வசதிகள்

படுக்கை வசதி, குளியலறை, சமையல் அறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளுடன் இந்த விமானத்தில் மாற்றங்களை செய்துள்ளார். அத்துடன், வீட்டு உபயோக சாதனங்களையும் இடத்தை அடைக்காதவாறு அந்த விமான வீட்டில் வைத்திருக்கிறார்.

சிறிய குடும்பத்தினருக்கு...

சிறிய குடும்பத்தினருக்கு...

இதுபோன்ற போயிங் 727 விமான இல்லத்தில் சிறிய குடும்பத்தினருக்கு ஏற்றதாக இருக்கும் என்றும் பெரிய குடும்பத்தினருக்கு இந்த விமானம் இல்லம் போதாது என்றும் தெரிவித்துள்ளார்.

 போயிங் 727 சிறப்பம்சங்கள்

போயிங் 727 சிறப்பம்சங்கள்

கடந்த 1960ல் போயிங் 727 விமானம் அறிமுகம் செய்யப்பட்டது. மொத்தம் 250 விமானங்களை தயாரிக்கும் திட்டத்துடன் 1963ல் உற்பத்தி துவங்கியது. ஆனால், தேவை காரணமாக 1,832 விமானங்கள் தயாரிக்கப்பட்டன. 1984ல் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த விமானங்களில் பயன்பாட்டில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட விமானத்தையே புரூஸ் கேம்பல் வாங்கி வசிப்பிடமாக பயன்படுத்துகிறார்.

 இருக்கை வசதி

இருக்கை வசதி

தற்போது சிறிய குடும்பத்தினர் பயன்படுத்துவற்கு ஏதுவான இல்லமாக புரூஸ் பயன்படுத்தி வரும், இந்த விமானத்தில் 149 பேர் முதல் 189 பேர் பயணிப்பதற்கான வசதி கொண்டது.

 பறக்கும் தூரம்

பறக்கும் தூரம்

ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால், அதிகபட்சமாக 5,000 கிமீ தூரம் வரை இடைநில்லாமல் பறக்கும். பிராட் அண்ட் ஒயிட்னி ஜேடி8டி எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டன. மணிக்கு 849 கிமீ வேகம் வரை பறக்கும்.

 சேவை

சேவை

உலக அளவில் 34 விமான நிறுவனங்கள் இந்த போயிங் 727 விமானத்தை சேவைக்காக பயன்படுத்தின. குறைந்த தூர ஓடுதளங்களிலும் பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பு.

அடுத்த திட்டம்

அடுத்த திட்டம்

தற்போது வசிக்கும் போயிங் 727 விமானம் மிகவும் பழமையாகிவிட்டதால், அடுத்ததாக ஜப்பானிலுள்ள மியாசகி நகரில் புதிய விமான இல்லம் ஒன்றை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.

போயிங் 747

போயிங் 747

232 அடி நீளம் கொண்ட இந்த விமானத்தில் சாதாரண வகுப்பு இருக்கைகளை அமைத்தால், 660 பேர் பயணிக்க முடியும். எனவே, இந்த விமானத்தை வீடாக மாற்றும்போது அதிக இடவசதி கொண்ட சொகுசு இல்லம் போன்று இருக்கும்.

சிறப்புகள்

சிறப்புகள்

முழுமையாக எரிபொருள் நிரப்பும்பட்சத்தில், அதிகபட்சமாக 13,450 கிமீ தூரம் வரை பயணிக்கும். மணிக்கு 913 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது.

காத்திருப்பு

காத்திருப்பு

அதிக அளவில் பயன்பாட்டில் இருப்பதால், புருஸ் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், விரைவிலேயே அவருக்கு குறைவான விலையில் ஒரு போயிங் 747 விமானம் கிடைக்கும் என நம்பலாம்.

உலகின் காஸ்ட்லி மோட்டார் இல்லம்

உலகின் காஸ்ட்லி மோட்டார் இல்லம்

 

Picture credit: Bruce Campbell/AirplaneHome.com

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
American Man Lives Boeing 727 Plane.
Story first published: Thursday, June 23, 2016, 13:07 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark