அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு தயாரான புதிய 'பீஸ்ட்' கார் பற்றிய தகவல்கள்!

Written By:

உயிருக்கு மிகவும் அச்சுறுத்தல் கொண்ட அமெரிக்க அதிபர்களுக்கு எப்போதுமே மிக உயரிய பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செல்லும்போதுகூட இந்த காரையே அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்துகின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு தயாரான புதிய கார் பற்றிய தகவல்கள்!

அந்த வகையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் டொனால்டு டிரம்பிற்கான புதிய லிமோசின் ரக காரை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் அதிபராக பதவி ஏற்றபோதே, இந்த லிமோசின் கார் டெலிவிரி கொடுக்க முடிவு செய்திருந்தனர். ஆனால், தாமதமாக ஏற்பட்டதால், முன்னாள் அதிபர் ஒபாமா பயன்படுத்திய பழைய கேடில்லாக் ஒன் லிமோசின் காரை டிரம்ப் பயன்படுத்தி வருகிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு தயாரான புதிய கார் பற்றிய தகவல்கள்!

இந்தநிலையில், டிரம்பிற்கான புதிய கார் இந்த மாத இறுதியில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், புதிய கார் குறித்த சில முக்கியத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனை தொடர்ந்து காணலாம்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு தயாரான புதிய கார் பற்றிய தகவல்கள்!

தற்போது பயன்பாட்டில் உள்ள கேடில்லாக் ஒன் காரின் மேம்பட்ட வடிவமாக புதிய கார் டிரம்பிற்கு தயாராகி உள்ளது. புதிய காரில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அமெரிக்க அதிபர் டிரம்பிற்கான புதிய காரின் கதவுகள் போயிங் 757 விமானத்தின் கதவுகளை போன்று மிகவும் உறுதியானது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு தயாரான புதிய கார் பற்றிய தகவல்கள்!

இந்த காரின் முன்புற க்ரில்லுக்கு பின்னால் பல துப்பாக்கிகள் பொருத்தப்பட்டு இருக்கும். இதனை ஓட்டுனர் பக்கத்தில் இருக்கும் பாதுகாவலர் இயக்க முடியும். இந்த காரின் முன்பக்க கண்ணாடி 5 அங்குல தடிமன் கொண்டது. இந்த காரின் மொத்த எடை 8 டன் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு தயாரான புதிய கார் பற்றிய தகவல்கள்!

குண்டு துளைக்காத வசதியுடன் 8 அங்குல தடிமன் கொண்டதாக இருக்கிறது. கதவுகளை மூடிவிட்டால், ரசாயன தாக்குதல்களில் இருந்து 100 சதவீத பாதுகாப்பை உள்ளே இருக்கும் பயணிகளுக்கு வழங்கும். ரசாயனத் தாக்குதல்களிலன்போது உள்ளே இருப்பவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கும் வசதியும் உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு தயாரான புதிய கார் பற்றிய தகவல்கள்!

இந்த காரின் அடிப்பாகம் மிக வலிமையானது. குண்டு வெடிப்புத் தாக்குதலில் கூட சேதமடையாது. அதேபோன்று, இந்த காரின் எரிபொருள் டேங்க் மிகவும் விசேஷ கட்டமைப்பு கொண்டது. குண்டுவெடிப்பு, துப்பாக்கி தாக்குதல்களில் கூட சேதமடையாது என்பதுடன், தீப்பிடிக்காத விசேஷ பூச்சும் உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு தயாரான புதிய கார் பற்றிய தகவல்கள்!

கண்ணாடி ஜன்னல்கள் பாலிகார்பனேட் மற்றும் கண்ணாடி கலவையால் ஆனது. இது ஐந்து அடுக்குகள் கொண்டதாக தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கண்ணாடி ஜன்னல்கள் குண்டு துளைக்காத உறுதி கொண்டவை. ஓட்டுனர் பக்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் கண்ணாடி ஜன்னலை மட்டுமே திறக்க முடியும். இது மூன்று அங்குல தடிமன் கொண்டது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு தயாரான புதிய கார் பற்றிய தகவல்கள்!

டேஷ்போர்டில் ஏராளமான தகவல் தொடர்பு வசதிகள் உள்ளன. மேலும், இந்த காரில் இருக்கும் விசேஷ ஜிபிஎஸ் வசதி மூலமாக, இந்த கார் எங்கு செல்கிறது என்பதை கட்டுப்பாட்டு மையம் மூலமாக கண்காணிக்க முடியும்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு தயாரான புதிய கார் பற்றிய தகவல்கள்!

இந்த காரின் பின்புற கேபினில் 4 பேர் அமர்ந்து செல்ல முடியும். இந்த காரில் டிரம்பிற்கான இருக்கையில் வேறு யாரும் அமர்ந்து செல்ல முடியாது. மேலும், அந்த இருக்கையின் அருகிலேயே ராணுவ தலைமையகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசு அமைப்புகளுடன் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளும் வசதி உள்ளது. இதற்காக சேட்டிலைட் போன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு தயாரான புதிய கார் பற்றிய தகவல்கள்!

பாடி பேனல்கள் 5 அங்குல தடிமன் கொண்டது. அலுமினியம், டைட்டானியம், செராமிக் உள்ளிட்ட பல உலோக கலவையில் தயாரான உறுதிமிக்க பாடி பேனல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ரன் ஃப்ளாட் டயர்கள் பொருத்தப்பட்டு இருப்பதால், பஞ்சரானாலும் தொடர்ந்து இயக்க முடியும்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு தயாரான புதிய கார் பற்றிய தகவல்கள்!

அவசர சமயத்தில் எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக, இந்த காரில் கண்ணீர் புகை குண்டூ வீசும் வசதியும், துப்பாக்கிகளும் பொருத்தப்ப்டடு உள்ளது. மேலும், தாக்குதலில் அதிபர் காயமடைந்து விட்டால், அவருக்கு வழங்குவதற்காக ரத்த பாட்டில்களும் இந்த காரில் எந்நேரமும் இருக்கும்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு தயாரான புதிய கார் பற்றிய தகவல்கள்!

காற்றை சுத்திகரித்து தரும் வசதியும் உள்ளது. இந்த காரில் விசேஷ கண்காணிப்பு வசதிகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. காரை சுற்றிலும் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு இருக்கும்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு தயாரான புதிய கார் பற்றிய தகவல்கள்!

ஓட்டுனர்களுக்கு அமெரிக்க புலனாய்வுத் துறையினரானல் சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு இருக்கிறது. எந்தவொரு அவசர நிலையையும் இவர்கள் எளிதில் கையாளும் திறமை பெற்றவர்கள்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு தயாரான புதிய கார் பற்றிய தகவல்கள்!

உலகிலேயே மிக உயரிய பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார் மாடல் இது என்றால் மிகையாகாது. டிரம்பிற்கு லிமோசின் ரக கார்கள் புதிதல்ல. செல்வ செழிப்புமிக்க டிரம்ப் பல லிமோசின் கார்களை சொந்தமாக பயன்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில், அவருக்காக இப்போது உலகின் மிக உயரிய பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார் தயாராகி உள்ளது.

Spy Images: Auto Week

புதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் படங்கள்!

புதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Read in Tamil: American President Trump's New Beast Car Details.
Story first published: Thursday, March 2, 2017, 12:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark