ரூ.25 கோடி மதிப்புள்ள பகானி ஹைப்பர்கார்!! விபத்தில் சிக்கி சாலையில் சுக்குநூறாக கிடக்கும் அவலம்!

தந்தையின் 3.4 மில்லியன் டாலர் மதிப்புள்ள பகானி ஹுவேரா என்ற ஹைப்பர் காரை யூட்யுப்பில் சேனல் நடத்திவரும் இளைஞர் விபத்தில் சுக்குநூறாக உடைத்துள்ளார். இதுதொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

ரூ.25 கோடி மதிப்புள்ள பகானி ஹைப்பர்கார்!! விபத்தில் சிக்கி சாலையில் சுக்குநூறாக கிடக்கும் அவலம்!

ஹைப்பர் கார் விபத்துகள் எப்போதுமே நம்மை பயமுறுத்துபவையாகவே இருக்கும். ஏனெனில் அவை ஓட்டுநர், பயணிகள் மற்றும் பாதசாரிகள் என அனைவருக்கும் காயம் ஏற்படக்கூடியவைகளாக நடந்து முடியும்.

ரூ.25 கோடி மதிப்புள்ள பகானி ஹைப்பர்கார்!! விபத்தில் சிக்கி சாலையில் சுக்குநூறாக கிடக்கும் அவலம்!

அதுமட்டுமில்லாமல் கார் துண்டுகள் அடித்து நொறுக்கப்பட்டு, சிறிய விபத்து கூட பெரியதுபோல் தெரியும். இதுபோன்ற ஹைப்பர்கார் விபத்து ஒன்றைதான் இந்த செய்தியில் நாம் இனி பார்க்க போகிறோம். பகானி ஹுவேரா ரோட்ஸ்டர் இந்த காரை பற்றி சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

ரூ.25 கோடி மதிப்புள்ள பகானி ஹைப்பர்கார்!! விபத்தில் சிக்கி சாலையில் சுக்குநூறாக கிடக்கும் அவலம்!

இந்த கார் தான், அமெரிக்கா, டெக்சாஸின் டல்லாஸ் என்ற பகுதியில் காற்றுப்பைகள் விரியப்பட்டு, முன் பாகங்கள் உடைந்த நிலையில் இந்த வீடியோவில் காட்சியளிக்கிறது. இந்த விபத்தில் சிக்கியிருக்கும் ஸ்பெஷல் பகானி ஹுவேரா கார் ஷோரூமில் இருந்து இப்போதுதான் டெலிவிரி எடுக்கப்பட்டிருக்கும் போல் தெரிகிறது.

இந்த வீடியோவில் காரின் ஓட்டுனர் கதவு தனியாக சாலையில் கிடக்கிறது. முன் சக்கரங்கள் முற்றிலுமாக தனியாக சேசிஸில் இருந்து வெளியே வந்துள்ளன. கார்பன்-ஃபைபர் துண்டுகள் சாலையில் கிடப்பதையும் இந்த வீடியோ பார்க்கலாம்.

ரூ.25 கோடி மதிப்புள்ள பகானி ஹைப்பர்கார்!! விபத்தில் சிக்கி சாலையில் சுக்குநூறாக கிடக்கும் அவலம்!

இந்த விபத்து குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகிவரும் பதிவுகளில் இந்த பகானி ஹைப்பர் காரை கேஜ் கில்லியன் என்ற 17 வயது இளைஞர் ஓட்டியுள்ளார். டெக்சாஸில் தனியார் பங்கு நடத்திவரும் டிம் கில்லியன் என்பவரது மகனான கேஜ், யூடியுப்பில் சேனல்களை நடத்தி வருகிறார்.

ரூ.25 கோடி மதிப்புள்ள பகானி ஹைப்பர்கார்!! விபத்தில் சிக்கி சாலையில் சுக்குநூறாக கிடக்கும் அவலம்!

தொழிலதிபரான டிம் கில்லியனிடம் மெக்லாரன் சென்னா, புகாட்டி சிரோன், ஃபெராரி லாஃபெராரி, ரோல்ஸ்-ராய்ஸ் டவ்ன் மற்றும் லம்போர்கினி உருஸ் என ஏகப்பட்ட சொகுசு கார்களும் ஹைப்பர் கார்களும் உள்ளன. இந்த விபத்தில் சிக்கியுள்ள இந்த முற்றிலும் புதிய ரோட்ஸ்டர் காரை 3.4 மில்லியன் டாலர்கள் (இந்திய ரூபாயில் 25 கோடியை தாண்டி செல்கிறது) கொடுத்து வாங்கியுள்ளனர்.

ரூ.25 கோடி மதிப்புள்ள பகானி ஹைப்பர்கார்!! விபத்தில் சிக்கி சாலையில் சுக்குநூறாக கிடக்கும் அவலம்!

சாலையில் கிடக்கும் ஊதா நிறத்திலான கார்பன்-ஃபைபர் துண்டுகளை பார்த்தாலே தெரிகிறது, இதன் விலை இந்த அளவில்தான் இருக்கும் என்று. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது பற்றிய எந்த விபரமும் கிடைக்க பெறவில்லை. வேகம் தான் விபத்திற்கு காரணமா என்பதும் தெரியவில்லை.

ரூ.25 கோடி மதிப்புள்ள பகானி ஹைப்பர்கார்!! விபத்தில் சிக்கி சாலையில் சுக்குநூறாக கிடக்கும் அவலம்!

விபத்தின்போது கேஜ் கில்லியன் உடன் வேறொருவரும் இருந்துள்ளார். விபத்தில் கேஜிற்கு பெரிய அளவில் எந்த காயமும் இல்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேஜ் கில்லியன் இந்த ஹுவேரா காருடன் சில வீடியோகளை தனது யூடியுப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பெரும்பாலானவை காரின் கேஸ் பெடலை பற்றியாக தான் உள்ளன.

ரூ.25 கோடி மதிப்புள்ள பகானி ஹைப்பர்கார்!! விபத்தில் சிக்கி சாலையில் சுக்குநூறாக கிடக்கும் அவலம்!

2018ல் தயாரிக்கப்பட்ட இந்த பகானி ஹைப்பர் கார் அதிகப்பட்சமாக 754 பிஎச்பி என்ஜின் ஆற்றலில் இயங்கக்கூடியதாகும். கடந்த ஜூன் மாதத்தில்தான் டிம் கில்லியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டிற்கு புது சொந்தம் வந்துள்ளதாக கூறி இந்த பகானி காரின் படத்தை பதிவிட்டிருந்தார். ஆனால் அதற்கு ஆறு மாதத்திற்குள்ளாக இந்த விபத்து நடந்துள்ளது.

ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350? உங்களுக்கான பதில் இந்த வீடியோவில்!

பகானி நிறுவனம் இவ்வாறான அதிக செயல்திறன் கொண்ட ஹைப்பர்கார்களை வருடத்திற்கு 30 மட்டும்தான் தயாரிக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு காரையும் தயாரிக்க 10 மாதங்கள் வரையில் தேவைப்படுகிறது. பகானி ஹுவேரா ரோட்ஸ்டர் காரின் இடத்தை புதிய இத்தாலி கார் ஒன்றின் மூலமாக நிரப்ப கேஜ் ஆயத்தமாகி வருகிறார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Teen YouTuber Crashes Dad's One-Off, $3.4M Pagani Huayra
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X