சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியால் அச்சுறுத்தல்... குண்டு துளைக்காத கார் வாங்கிய ஆமிர்கான்!

சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தொடர்ந்து, விசேஷ பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 காரை நடிகர் ஆமிர்கான் வாங்கியுள்ளார்.

பிரதமர் மன்மோகன்சிங், தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆகியோரை தொடர்ந்து ஆமிர்கானும் இந்த காரை வாங்கி பயன்படுத்துகிறார். பாலிவுட் வட்டாரத்திலேயே தற்போது அதிக விலை கொண்ட காராக இது குறிப்பிடப்படுகிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சுவையான ஆட்டோமொபைல் செய்திகளுக்கு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்பில் இருங்கள்!

கொலை மிரட்டல்கள்

கொலை மிரட்டல்கள்

சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி மூலம் பெண் கருக்கலைப்பு, கவுரவ கொலைகள் மற்றும் மருத்துவ துறையில் நடக்கும் ஊழல்களை தோலுரித்து காட்டினார் நடிகர் ஆமிர்கான். இதையடுத்து, அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. இதைத்தொடர்ந்து, சிறப்பு போலீஸ் பாதுகாப்பையும் பெற்றுள்ளார்.

இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்

இந்தநிலையில், சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தின் ஒளிப்பரப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது. அரசு நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல்கள், வர இருக்கிற பாராளுமன்றத் தேர்தல் போன்றவற்றை மையமாக வைத்து இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக உள்ளது.

அச்சம்

அச்சம்

சத்யமேவ ஜெயதேவின் இரண்டாம் பாக ஒளிபரப்பு துவங்கியுள்ளதையடுத்து, முன்பு போலவே அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகமாகி வருகிறது. எனவே, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வற்புறுத்தல்களின் பேரில், இந்த விசேஷ பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காரை ஆர்டர் செய்து வாங்கியிருக்கிறார் ஆமிர்கான்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

இது. குண்டு துளைக்காத கார்களை இந்தியாவில் பலர் பயன்படுத்துகின்றனர். ஆனால், ஆமிர்கான் வாங்கியிருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 கார் குண்டு துளைக்காத வசதி மட்டுமின்றி, குண்டு வெடிப்பிலும் கூட சேதமடையாத பாதுகாப்பு கொண்டது. இது விவிஐபி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் மெர்சிடிஸ் பென்ஸ் வடிவமைத்து கொடுக்கிறது.

காரில் தரிசனம்

காரில் தரிசனம்

மும்பை மாநகரின் புறநகர் பகுதியில் சமீபத்தில் நடந்த இரவு விருந்து ஒன்றுக்கு இந்த காரில் ஆமிர்கான் வந்தார். அப்போதுதான் இந்த காரை ஆமிர்கான் வாங்கியிருப்பது வெளியுலகுக்கு தெரியவந்தது.

டாப் மாடல்

டாப் மாடல்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எஸ் கிளாஸ் குடும்பத்தில் டாப் வேரியண்ட் மாடலாக இது விற்பனை செய்யப்படுகிறது. இது பல்வேறு பாதுகாப்பு வசதிகளை நிரந்தர அம்சங்களாக கொண்டது. இதுதவிர, குண்டு துளைக்காத வசதி, குண்டு வெடிப்பில் சேதமடையாத வசதியுடன் கஸ்டம்ஸ செய்து இந்த காரை ரூ.10 கோடி விலையில் ஆமிர்கான் வாங்கியுள்ளார்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 513 எச்பி பவரையும் 830 என்எம் டார்க்கையும் அளிக்கும் 5.5 லிட்டர் ட்வின் டர்போ வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பென்ஸ் எஸ்600 மாடலில் 6.0 லிட்டர் எஞ்சினுடன் வருகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 8, 2014, 18:13 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+