அமித்ஷாவின் ஒவ்வொரு செயலிலும் 1,000 அர்த்தம் இருக்கும் போலயே!! பழைய டாடா காரை யூஸ் பண்றதுக்கு காரணம் என்ன?

அமித்ஷா (Amitshah) பயணம் செய்துவந்த டாடா சஃபாரி (Tata Safari) எஸ்யூவி காரின் நம்பர் பிளேட் (Number Plate)-இல் இருந்த எழுத்துகள் இணையத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளன. இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில், பூங்கொடி சுகந்த் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவை பற்றி இனி பார்க்கலாம்.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவரும், இந்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நாட்டின் முக்கியமான அரசியல்வாதி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இதனாலேயே அவ்வப்போது சர்ச்சைகளுக்கு உள்ளாகுபவராகவும் அமித்ஷா விளங்குகிறார். இந்த நிலையில், டெல்லியில் அமித்ஷா பயன்படுத்திய காரின் நம்பர் பிளேட் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

amit shah in old safari

சமீபத்தில், டெல்லியில் உள்ள பிஜேபி தலைமையகத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பழைய டாடா சஃபாரி கார் ஒன்றில் வந்து இறங்கினார். அமித்ஷா வந்த இந்த காரின் நம்பர் பிளேட்டில் 'DL 1C AA 4421' என பதிவெண் இருந்தது. இதில் 'CAA' என இருந்ததினால் இந்த நம்பர் பிளேட் இணையத்தில் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. ஏனெனில், CAA என்பதன் விரிவாக்கம் ஆனது Citizenship Amendment Act ஆகும்.

அதாவது, இதன் தமிழ் அர்த்தம் குடிமக்கள் திருத்த சட்டம் ஆகும். நாடு முழுவதும் சர்ச்சைக்கு உள்ளான இந்த சட்டத்தை கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து அமல்படுத்தும் முனைப்பில் மத்திய அரசு உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக சிஏஏ 2019 சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக ஒரு பேச்சு உள்ளது. இந்த நிலையில்தான், டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு இவ்வாறான நம்பர் பிளேட் கொண்ட டாடா காரில் அமித்ஷா வந்திறங்கி உள்ளார்.

இதுகுறித்து, பூங்கொடி சுகந்த் என்பவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், இவ்வாறான நம்பர் பிளேட்டை கொண்ட பழைய டாடா சஃபாரி டிகோர் காரில் அமித்ஷா வந்து இறங்குவதை காணலாம். நம்பர் பிளேட்டை வைத்து இந்த காரை பற்றிய விபரங்களை இணையத்தில் ஆராய்ந்து பார்த்ததில், சில அதிர்ச்சிக்கர விஷயங்கள் எங்களுக்கு தெரியவந்துள்ளன. முதலில், இது சாதாரண டாடா சஃபாரி கார் கிடையாது.

4x4 டிரைவ் சிஸ்டத்தை கொண்ட டாடா சஃபாரி கார் ஆகும். இத்தகைய சிஸ்டத்தை கொண்ட சஃபாரி கார்கள் இந்திய இராணுவத்துக்காகவே உற்பத்தி செய்யப்பட்டன. அதாவது, எதிரிகள் தாக்கினாலும் சேதமடையாத வண்ணம் இந்த காரில் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டன. இதனால் அமித்ஷா பயன்படுத்தியுள்ள இந்த சஃபாரி காரின் விண்ட்ஷீல்டு மற்றும் பாடி பேனல்கள் துப்பாக்கி குண்டு துளைக்க முடியாதவைகளாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

amit shah in old safari

நாட்டின் உள்துறை அமைச்சருக்கு இவ்வாறான ஒரு கார் போக்குவரத்துக்கு வழங்கப்பட்டு இருப்பதில் எந்த ஆச்சிரியமும் இல்லை. பழைய டாடா சஃபாரி கார்களில் மத்திய அமைச்சர் அமித்ஷா பயணம் செய்துள்ளதை இதற்கு முன்பும் சிலமுறை பார்த்துள்ளோம். வாகன பதிவெண்ணை வைத்து ஆராய்ந்து பார்த்ததில், இந்த கார் துணை கமிஷ்னர் ஒருவரது பெயரில் ஆர்டிஓ-இல் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சிஏஏ பற்றி சமீபத்திய உலகளாவிய மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "சிஏஏ என்பது நாட்டின் சட்டம் ஆகும். இதன் அறிவிப்பு கண்டிப்பாக வெளியிடப்படும். இது தேர்தலுக்கு (மக்களவை) முன் வெளியிடப்படும். தேர்தலுக்கு முன் சிஏஏ அமல்படுத்தப்படும். இதில் யாரும் குழப்பம் அடைய வேண்டாம்" என தெரிவித்து உள்ளார்.

amit shah in old safari

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், குடிமக்கள் திருத்த மசோதா ஆனது இந்தியா முழுவதும் எதிர்ப்பை பெற்ற ஓர் சட்ட திட்டம் ஆகும். பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கூட இதுகுறித்த தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனாலேயே 2019இல் முன்மொழியப்பட்ட இந்த சட்டத்தை மத்திய அரசால் இப்போதுவரையில் அமல்படுத்த முடியவில்லை. அதுமட்டுமின்றி, மத்திய அமைச்சர் அமித்ஷா வந்த காரின் நம்பர் பிளேட்டில் 'சிஏஏ' என இருந்ததற்காக அது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, March 3, 2024, 8:00 [IST]
English summary
Amit shah arrives in old tata safari car with caa number plate
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X