அமிதாப் பச்சன், அமீர்கானுக்கு ரூ38.26லட்சம் அபராதம்! காரை விக்குறதுல இப்படி கூட பிரச்சனை வருமா?
கர்நாடக மாநில ஆர்டிஓ அதிகாரிகள் பாலிவுட் நடிகர்கள் அமிதாப்பச்சன், அமீர் கான் ஆகியோருக்கு தங்கள் கார்களுக்கான சாலை வரிகளை கட்ட தவறியதற்காக நோட்டீஸை வழங்கியுள்ளனர். என்னடா இது வடஇந்தியாவை சேர்ந்த இவர்கள் ஏன் கர்நாடகாவிற்கு வந்தனர்? இவர்களது வாகனத்திற்கு எதற்காக அபாரதம் என யோசிக்கிறீர்களா? வாருங்கள் விரிவாக காணலாம்.
கர்நாடக மாநில ஆர்டிஓ அதிகாரிகள் தொடரந்து வாகன கண்காணிப்பில் இருக்கும் போது இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்ததின் கார்கள் வெளிமாநில பதிவெண்களுடன் கர்நாடக மாநிலத்தில் இயங்கி வருவதை பார்த்துள்ளனர். நீண்ட நாட்களாக இந்த கார்கள் கர்நாடக மாநிலத்தில் இயங்குவதை உறுதி செய்த அதிகாரிகள் அந்த காரின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

img Source: NDTV
மோட்டார் வாகன சட்டப்படி என்னதான் ஒருவர் தனி நபர் போர்டு போட்டு இந்தியா முழுவதும் வாகனத்தை பயன்படுத்தலாம் என்றாலும் அதற்கு ஒரு சில விதிமுறைகள் இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு மாநிலத்திற்குள் ஒரு ஆண்டிற்கும் மேலாக நீங்கள் வாகனத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் அந்த வாகனத்தை நீங்கள் அந்த மாநிலத்தில் மாற்றி பதிய வேண்டும்.
அதாவது நீங்கள் இதற்கு முன்னர் எந்த மாநிலத்தில் பதிவு செய்தீர்களோ அந்த மாநிலத்தில் உங்கள் பதிவெண்ணை நீக்கிங் எந்த மாநிலத்தில் பயன்படுத்தப்போகிறீர்களோ அந்த மாநிலத்தில் இந்த காரை பதிவு செய்து அதற்கான வரி செலுத்தி பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் இந்தியா டுடே தளத்தில் வெளியான செய்திகளின்படி நடிகர் அமிதாப் பச்சன் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் பாந்தோம் மற்றும் அமீர் கான் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ஆகிய கார்கள் கர்நாடக மாநிலத்தில் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

Img Source: Times Now
இது குறித்து விசாரித்த போது இந்த நடிகர்கள் பயன்படுத்த காரை அம்மாநிலத்தை சேர்ந்த "கேஜிஎஃப் பாபு" என்பவர் செக்ண்ட் ஹேண்டில் வாங்கி பயன்படுத்தி வருவது தெரியவந்தது. அவர் வாகனத்தின் பதிவில் பெயர் மாற்றம் செய்யாமல் தொடர்ந்து அந்த நடிகர்கள் பெயரிலேயே காரை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு முதல் அமிதாப் பச்சன் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் பாந்தோம் மற்றும் 2023ம் ஆண்டு முதங் அமீர்கான் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ஆகிய கார்கள் கர்நாடக மாநிலத்தில் இயங்கி வந்துள்ளது.
இந்நிலையில் காரின் பெயர் நடிகர்களின் பெயரிலேயே இருப்பதால் கர்நாடக மாநில போக்குவரத்து சட்ட விதிப்படி நடிகர் அமிதாப் பச்சன் பெயரில் ரூ18.53 லட்சம் அபராதமும், நடிகர் அமீர் கான் பெயரில் ரூ19.73 லட்சம் அபாராதமும் செலுத்த கோரி நோட்டீஸை வெளியிட்டுள்ளனர். இது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார்களை வாங்கி பயன்படுத்தி வரும் "கேஜிஎஃப் பாபு" என்பவர் கர்நாடக மாநிலத்தில் பெரும் பணக்காரராக இருக்கிறார்.

இவர் கடந்த 2021ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தலில் போட்டியிட்டார். அப்பொழுது இவர் தன்னிடம் ரூ1744 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது அப்பொழுது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவர் நடிகர்களின் காரை செகண்ட் ஹேண்டில் வாங்கி அதை பெயர் மாற்றாமல் அப்படியே பயன்படுத்தி வருகிறார். இது மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரிய நடிக்கள் பலர் காஸ்ட்லியான காரை பயன்படுத்துகின்றனர். அடுத்த காரை வாங்கும் யோசனை வரும்போது பழைய காரை செகண்ட் ஹேண்டில் விற்றுவிடுகின்றனர். ஆனால் அதை வாங்குபவர்கள் சரியாக பெயர் மாற்றம் செய்கிறார்களா என பலர் கண்காணிக்க தவறி விடுகின்றனர். பெயர் மாற்றம் செய்யவில்லை என்றால் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது ஏற்படலாம்.


Click it and Unblock the Notifications









