அமிதாப் பச்சன், விராட் கோஹ்லி மனைவியை கதற விட்ட போலீஸ்! என்ன பண்ணாங்கன்னு தெரியுமா? ரொம்ப பெருமையா இருக்கு!

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் பலர் சாலை விபத்தில் சிக்கி மரணம் அடைவதற்கு ஹெல்மெட் (Helmet) அணியாததுதான் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. விதிமுறைப்படி பார்த்தால், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்.

ஆனால் ஒரு சிலரை தவிர, பெரும்பாலானோர் இதனை பின்பற்றுவது கிடையாது. ரசிகர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய ஒரு சில திரை பிரபலங்கள் கூட இதனை பின்பற்றுவதில்லை என்பது வேதனையான ஒரு விஷயம்தான். திரை நட்சத்திரங்கள் எதை செய்தாலும், ரசிகர்கள் அப்படியே திருப்பி செய்வார்கள்.

Amitabh Bachchan Takes Lift On Fans Bike

எனவேதான் அஜித் (Ajith) போன்ற ஒரு சில நடிகர்கள், போக்குவரத்து விதிமுறைகள் (Traffic Rules) குறித்த விழிப்புணர்வை தங்கள் ரசிகர்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் அஜித்தை விட பிரபலமாக உள்ள அமிதாப் பச்சன் (Amitabh Bachchan) போன்ற நடிகர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறியிருப்பது கவலையை ஏற்படுத்துகிறது.

அமிதாப் பச்சனுடன் சேர்த்து, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் (Anushka Sharma) போக்குவரத்து விதிமுறைகளை மீறியுள்ளார். இவர் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் (Virat Kohli) மனைவி என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே திரைப்படங்கள், விளம்பரங்களில் மட்டுமல்லாது, கிரிக்கெட் மைதானங்களிலும் இவரை நீங்கள் பார்த்திருக்கலாம்.

Anushka Sharma Rides On Bajaj Pulsar 220 F

குறிப்பாக ஆர்சிபி (RCB) அணி விளையாடும் ஐபிஎல் (IPL) போட்டிகளின்போது, அனுஷ்கா சர்மாவை நீங்கள் காண முடியும். இவர் சமீபத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது, மரம் விழுந்த காரணத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே தனது பாதுகாவலரின் டூவீலரில் ஏறி அனுஷ்கா சர்மா சென்றார்.

ஆனால் அவர்கள் இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. அதேபோல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே யாரென்றே தெரியாத ஒருவரின் பைக்கில் லிஃப்ட் (Lift) கேட்டு அமிதாப் பச்சன் சென்றார். அவர்கள் இருவரும் கூட ஹெல்மெட் அணியவில்லை.

இந்த 2 சம்பவங்களும் மும்பையில்தான் நடைபெற்றன. இந்த 2 சம்பவங்களின் புகைப்படங்கள் (Photos) மற்றும் வீடியோக்கள் (Videos) இணையத்தில் வைரல் (Viral) ஆகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அமிதாப் பச்சன் மற்றும் அனுஷ்கா சர்மா போன்ற பிரபலங்கள் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தது, தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என நெட்டிசன்கள் எடுத்துரைத்தனர்.

இதன் பேரில் மும்பை காவல் துறையினர் தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். அனுஷ்கா சர்மா ஹெல்மெட் அணியாமல் சென்ற டூவீலருக்கு 10,500 ரூபாய் அபராதம் (Fine) விதிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் அமிதாப் பச்சன் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த டூவீலருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மாறுபடுவதால், அபராத தொகையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும். மும்பை காவல் துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையை பொதுமக்கள் பலரும் வரவேற்றுள்ளனர். பாரபட்சம் பார்க்காமல் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளமும் வரவேற்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: போக்குவரத்து விதிமுறைகளை மீறினால், யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மெசேஜ் காவல் துறையினரால் பொதுமக்களுக்கு தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. உண்மையில் காவல் துறையினர் இதனை கண்டும், காணாமல் இருந்திருந்தால், அது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தியிருக்கும். அந்த தவறை காவல் துறை செய்யவில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 17, 2023, 18:49 [IST]
English summary
Amitabh bachchan anushka sharma fined for taking bike ride without helmet full details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+