கார் லோகோ உடைப்பு; மீடியா மீது அமிதாப் பச்சன் கடுப்பு!

கடந்த வாரம் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மும்பை வந்திருந்தார். அவரை இந்தியாவின் பல பிரபல திரைநட்சத்திரங்கள் நேரில் சந்தித்தனர். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் ஸ்பீல்பெர்க்கை இரவு விருந்தில் சந்தித்தார்.
பின்னர், வெளியில் வந்தபோது அவரை பத்திரிக்கையாளர்களும், கேமராமேன்களும் சூழ்ந்துகொண்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அமிதாப்பச்சனின் பென்ஸ் கார் லோகோ முறிந்து இரண்டு துண்டாக உடைந்துவிட்டது.
இதனால், கடும் அதிருப்தியடைந்த அமிதாப்பச்சன் டிவிட்டரில் மீடியா மீது அதிருப்தி தெரிவித்துள்ளார். தயவுசெய்து அந்த லோகோவை திரும்பவும் பெறலாமா... ப்ளீஸ் என்று டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications








