அமிதாப் பச்சன் வாங்கிய காரை பற்றிதான் எல்லா பக்கமும் பேச்சு!! ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட கார்!
நடிகர் அமிதாப் பச்சன் புதியதாக லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 காரை டெலிவிரி எடுத்துள்ளார். ஷோரூமில் இருந்து காரை அமிதாப் பச்சனின் வீட்டிற்கு கொண்டு செல்லும் வழியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். பாலிவுட்டில் மட்டுமின்றி, மொத்த இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட, முன்னணி நடிகர். இவர் புதியதாக லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபெண்டர் 130 எச்.எஸ்.இ என்ற சொகுசு எஸ்யூவி காரை வாங்கியுள்ளார்.

நடிகர் அமிதாப் பச்சனின் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 எச்.எஸ்.இ கார் செடோனா சிவப்பு நிறத்தில் உள்ளது. மும்பையில் ஜுஹு என்ற பகுதியில் உள்ள ஜல்சா என்ற இடத்தில் அமைந்திருக்கும் அமிதாப் பச்சனின் வீட்டில் இந்த கார் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. டெலிவிரி செய்வதற்காக, லாரியில் கார் கொண்டு செல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் லேண்ட் ரோவர் நிறுவனம் அதன் டிஃபெண்டர் 130 காரை கடந்த மார்ச் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் அதுவரையில் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த டிஃபெண்டர் 90 மற்றும் 110 கார்களுடன் புதிய டிஃபெண்டர் 130 இணைந்துள்ளது. 90, 110 என்பன காரின் வீல்பேஸ் நீளத்தை குறிப்பிடுகின்றன. அதாவது, முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரத்தை குறிப்பிடுகின்றன.

இதன் காரணமாக காரின் நீளமும் சற்று அதிகரிக்கக்கூடும். மார்ச்சில் அறிமுகப்படுத்தப்பட்ட 130 வெர்சன் மற்ற இரண்டை விடவும் கூடுதல் நீளமான வீல்பேஸை கொண்டது. இந்த காரில் 3-சீட் லே-அவுட் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக, இந்த காரில் அதிகப்பட்சமாக 8 பேர் வரையில் தாராளமாக அமர்ந்து பயணம் செய்ய முடியும். இந்தியாவில், டிஃபெண்டர் 130 கார் எச்.எஸ்.இ மற்றும் எக்ஸ் என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இவை இரண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.30 கோடியில் இருந்து ரூ.1.41 கோடி வரையில் உள்ளன. நடிகர் அமிதாப்பச்சன் வாங்கியிருப்பது டிஃபெண்டர் 130 காரின் எச்.எஸ்.இ வேரியண்ட் ஆகும். ஆனால், எந்த என்ஜின் உடன் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. எப்படியிருந்தாலும், அமிதாப் பச்சனின் டிஃபெண்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.30 கோடி என்ற அளவிலேயே இருக்கும்.

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் எஸ்யூவி கார்களில் 11.4-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை டேஸ்போர்டில் வழங்கப்படுகின்றன. இதில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் லேட்டஸ்ட் பிவி-புரோ சாஃப்ட்வேரை கொண்டுள்ளது. அத்துடன் இந்த காரில் 4-ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், 3 வரிசையிலும் வெண்டிலேட்டட் இருக்கைகள் உள்ளிட்டவையும் இடம்பெறுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான சொகுசு வசதிகளை கொண்ட அளவில்-பெரியதான எஸ்யூவி காரை வாங்க வேண்டும் என்று நம்மில் பெரும்பாலானோருக்கு ஆசை இருக்கும். ஆசை என்பதை விட கனவு என சொல்லலாம். ஆனால், அந்த கனவுகளை எல்லாம் அமிதாப் பச்சன் போன்ற நடிகர்கள் மிக எளிமையாக நினைவாக்கி கொள்கின்றனர். இதற்கு விதை, நடிக்க வந்த புதியதில் அவர் போட்ட கடும் முயற்சிகள் என்பதை மறந்துவிடாதீர்கள்.


Click it and Unblock the Notifications









