புது மாடல் வந்த உடனே வாங்கீட்டாரே! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை டெலிவரி எடுத்த சூப்பர் ஸ்டார்...

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியை டெலிவரி எடுத்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புது மாடல் வந்த உடனே வாங்கீட்டாரே! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை டெலிவரி எடுத்த சூப்பர் ஸ்டார்...

இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த புதிய மாடலை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வாங்கியுள்ளார். அமிதாப் பச்சனிடம் ஏராளமான விலை உயர்ந்த கார்கள் உள்ளன. ஆனால் சமீப காலமாக எம்பிவிகளை அவர் அதிகமாக விரும்ப தொடங்கியுள்ளார்.

புது மாடல் வந்த உடனே வாங்கீட்டாரே! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை டெலிவரி எடுத்த சூப்பர் ஸ்டார்...

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அமிதாப் பச்சன் டெலிவரி எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, டொயோட்டா டீலர்ஷிப் நிர்வாகிகள், காரின் சாவியை அமிதாப் பச்சனிடம் ஒப்படைத்துள்ளனர்.

புது மாடல் வந்த உடனே வாங்கீட்டாரே! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை டெலிவரி எடுத்த சூப்பர் ஸ்டார்...

ஆனால் இந்த காரின் எந்த வேரியண்ட்டை அமிதாப் பச்சன் வாங்கியுள்ளார்? என்பது தெரியவில்லை. எனினும் இது டாப் வேரியண்ட்டாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எம்பிவிகளில் ஒன்றாகும். சௌகரியமான பயணம் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த எம்பிவி பிரபலமாக உள்ளது.

புது மாடல் வந்த உடனே வாங்கீட்டாரே! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை டெலிவரி எடுத்த சூப்பர் ஸ்டார்...

தற்போது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியை டெலிவரி பெற்றுள்ள இதே இடத்தில், நீண்ட நாட்களுக்கு முன்னர், மெர்சிடிஸ்-பென்ஸ் வி-க்ளாஸ் சொகுசு எம்பிவியையும் அமிதாப் பச்சன் டெலிவரி பெற்றார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால் இந்த இடத்தில் வைத்துதான் அமிதாப் பச்சன் இன்னும் பல்வேறு வாகனங்களையும் டெலிவரி பெற்றுள்ளார்.

புது மாடல் வந்த உடனே வாங்கீட்டாரே! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை டெலிவரி எடுத்த சூப்பர் ஸ்டார்...

சரி, இனி அமிதாப் பச்சன் தற்போது டெலிவரி எடுத்துள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு வருவோம். 2016ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து தற்போதுதான் முதல் முறையாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா அப்டேட்டை பெற்றுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன் பகுதியில் புதிய க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

புது மாடல் வந்த உடனே வாங்கீட்டாரே! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை டெலிவரி எடுத்த சூப்பர் ஸ்டார்...

அத்துடன் தற்போது ஹெட்லேம்ப்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. என்றாலும் பக்கவாட்டிலும், பின் பகுதியிலும் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. டொயோட்டா நிறுவனம் இதற்கு அடுத்தபடியாக பார்ச்சூனர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

புது மாடல் வந்த உடனே வாங்கீட்டாரே! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை டெலிவரி எடுத்த சூப்பர் ஸ்டார்...

ஃபோர்டு எண்டேவர் மற்றும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 ஆகிய எஸ்யூவிக்களுடன்தான் ஆரம்பத்தில் டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி போட்டியிட்டு வந்தது. ஆனால் எம்ஜி நிறுவனத்தின் க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் வருகையால் டொயோட்டா பார்ச்சூனருக்கு இந்திய சந்தையில் தற்போது போட்டி அதிகரித்து வருகிறது.

புது மாடல் வந்த உடனே வாங்கீட்டாரே! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை டெலிவரி எடுத்த சூப்பர் ஸ்டார்...

எனவே இதனை சமாளிக்கும் வகையில், பார்ச்சூனர் எஸ்யூவியை மேம்படுத்தி, ஃபேஸ்லிஃப்ட் மாடலை டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதில், டிசைன் மாற்றங்கள் செய்யப்படுவதுடன், புதிதாக சில வசதிகளும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் பார்ச்சூனர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Amitabh Bachchan Buys Toyota Innova Crysta Facelift - Details. Read in Tamil
Story first published: Thursday, December 17, 2020, 20:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X