அமிதாப் பச்சன் புதுசா வாங்கிய காரேட விலை இவ்ளோவா! என்ன இந்த காரை புதுசா கட்சி தொடங்கிய விஜய்-ம் வச்சிருக்காரா!
பாலிவுட் திரை உலகின் ஜாம்பவான் நடிகாரான அமிதாப் பச்சான் புதிதாக மிக மிக விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக திரையுலகில் வலம் வந்துக் கொண்டிருக்கும் ஓர் ஜாம்பவான நடிகரே அமிதாப் பச்சான் ஆவார். இவர் இதுவரை 200க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கின்றார். தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் வேட்டையன் திரைப்படத்திலும் அவர் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இத்தகைய நடிகரே ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்கின்ற வகையில் ஓர் சிறப்பான சொகுசு காரை வாங்கி இருக்கின்றார்.
அவர் பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7) கார் மாடலையே வாங்கி இருக்கின்றார். இது ஓர் செடான் ரக சொகுசு எலெக்ட்ரிக் கார் (Sedan Electric Car) மாடல் ஆகும். இந்தியாவில் இந்த சொகுசு எலெக்ட்ரிக் கார் மாடலுக்கு இந்திய பணக்காரர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

நடிகர் விஜய் கூட இந்த காரை மாடலை பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே புதிதாக பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் காரை வாங்கி அக்காரை பயன்படுத்தி வரும் பிரபலங்களில் ஒருவரா அமிதாப் பச்சன் மாறியிருக்கின்றார். இந்த காரை அமிதாப் வாங்கி இருப்பது ஓர் வீடியோவின் வாயிலாகவே உறுதியாகி இருக்கின்றது.
புதிதாக வாங்கப்பட்ட அந்த பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் கார் அமிதாப் பச்சனின் வீட்டில் இருக்கும் வீடியோவே தற்போது வெளியாகி இருக்கின்றது. அந்த வாகனம் அட்வென்சர் ரெட் மெட்டாலிக் எனும் நிறத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதேவேளையில், பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த காரை ரோல்ஸ் ராய்ஸ் கார்களை இரண்டு விதமான நிறங்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனமாக விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
அந்தவகையில் ஓர் நிறம் இந்த காரின் பான்னெட், பிள்ளர்கள், ரூஃப் மற்றும் பின் பக்கத்தின் மேல் பகுதி வரை அலங்கரிக்கும் வகையில் இருக்கும். மற்றொரு நிறம் இரண்டு பக்கவாட்டு பகுதிகளையும் மற்றும் காரின் முன் மற்றும் பின் பக்கத்தின் கீழ் பகுதியை அலங்கரிக்கும் வகையில் இருக்கும்.
இது அந்த காரின் சாலை தோன்றலை மிகவும் பிரத்தியேகமானதாக காண்பிப்பதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கும். அதாவது, கவர்ச்சியான தோற்றம் கொண்ட அக்காருக்கு கூடுதல் அழகை வழங்கும் வகையில் இந்த நிற அலங்கரிப்பு இருக்கின்றது. அமிதாப் பச்சன் வாங்கி இருக்கும் இந்த எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 2.03 கோடிக்கும் அதிகம் ஆகும்.
இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அமிதாப் வாங்கி இருப்பது ஐ7 இ-டிரைவ் 50 எம் ஸ்போர்ட் என கூறப்படுகின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 560 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதேபோல், இந்த காரில் பயன்படுத்தப்பட்டு அதீத ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
அது அதிகபட்சமாக 544 எச்பி ஆற்றலையும், 745 என்எம் டார்க்கையும் உருவாக்கும். இது ஓர் ஆல் வீல் டிரைவ் இயக்கம் கொண்ட கார் மாடலும்கூட. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். அதேநேரத்தில் வெறும் 3.7 செகண்டுகளில் இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய அதிக திறனை வெளியேற்றும் எலெக்ட்ரிக் காரையே நடிகர் அமிதாப் பச்சான் தற்போது வாங்கி இருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அமிதாப் பச்சன் தன்னுடைய 82ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இந்த காரை வாங்கி இருப்பதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே அந்த நடிகரிடத்தில் விலை உயர்ந்த கார்கள் பல பயன்பாட்டில் உள்ளன. அந்தவகையில் ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் (Rolls Royce Phantom), லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எல்டபிள்யூ எஸ்வி ஆட்டோபயோகிராஃபி (Range Rover LWB SV Autobiography), போர்ஷே கேமேன் எஸ் (Porsche Cayman S) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் (Mercedes-Benz V-Class) உள்ளிட்ட கார் மாடல்களே அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








