பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டில் குவிந்துகிடக்கும் சொகுசு கார்கள்!

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் வீட்டில் குவிந்து கிடக்கும் விலையுயர்ந்த சொகுசு கார்கள்குறித்த தகவல் கசிந்துள்ளன. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டில் குவிந்துகிடக்கும் சொகுசு கார்களின் அணி வகுப்பு... என்னென்ன கார் வச்சிருக்கார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் எப்படி சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் இருக்கின்றாரோ, பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸாடாராக அமிதாப் பச்சன் இருக்கின்றார். இது எல்லாருக்குமே தெரிஞ்ச விசயம்தான், இதை ஏன் இங்க சொல்றீங்கனு தான கேக்குறீங்க... ஆனால் அவர பத்தி இதுபோல தெரியாத சில விஷயங்களைத்தான் இந்த பதிவுல நாம பார்க்கப் போறோம்.

அந்தவகையில், அமிதாப் பச்சானின் வீட்டில் இருக்கும் விலையுயர்ந்த சொகுசு கார்கள் குறித்த தகவலையும், அவர் காருக்கு வழங்கும் முக்கியத்துவம் குறித்த தகவலையும் இந்த பதிவில் காணலாம்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டில் குவிந்துகிடக்கும் சொகுசு கார்களின் அணி வகுப்பு... என்னென்ன கார் வச்சிருக்கார் தெரியுமா?

திரைப்பட நடிகரான அமிதாப் பச்சன், நடிப்பது மட்டுமின்றி சொகுசு கார்களின் மீது அளவுகடந்த பிரியம் கொண்டவராக இருக்கின்றார். இதன் காரணமாகவே, அவரின் கராஜில் பல்வேறு அனைத்து ரக கார்களின் அணி வகுப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் முக்கியமாக ஆடம்பரம் மற்றும் சொகுசு கார்களின் அணி வகுப்பே அதிகமாக இருக்கின்றது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டில் குவிந்துகிடக்கும் சொகுசு கார்களின் அணி வகுப்பு... என்னென்ன கார் வச்சிருக்கார் தெரியுமா?

அண்மையில்கூட, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவருடைய ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் மாடலை விற்பனைச் செய்திருந்தார். இந்த காரை அவருக்கு, பாலிவுட் திரைப்பட இயக்கநர் விது வினோத் சோப்ரா, எக்லவ்யா படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து பரிசாக வழங்கியிருந்தார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டில் குவிந்துகிடக்கும் சொகுசு கார்களின் அணி வகுப்பு... என்னென்ன கார் வச்சிருக்கார் தெரியுமா?

அந்தவகையில், அவருக்கு ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் கார் கடந்த 2007 ஆம் ஆண்டு பரிசாக வழங்கப்பட்டிருந்தது. இது, ரூ. 3.5 கோடி என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த லக்சூரி காரில் 6.75 லிட்டர் வி12 பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 460 பிஎச்பி பவரையும், 720 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டில் குவிந்துகிடக்கும் சொகுசு கார்களின் அணி வகுப்பு... என்னென்ன கார் வச்சிருக்கார் தெரியுமா?

இந்த காரை அவர் விற்றுவிட்ட சூழ்நிலையிலும், சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சானின் கராஜில் சொகுசு மற்றும் லக்சூரி கார்களின் அணி வகுப்பிற்கு பஞ்சமில்லாமல் இருக்கின்றது. அந்தவகையில், அவரது கராஜில் ரேஞ்ச் ரோவர் முதல் போர்ஷே வரையிலான கார்கள் இருக்கின்றன.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டில் குவிந்துகிடக்கும் சொகுசு கார்களின் அணி வகுப்பு... என்னென்ன கார் வச்சிருக்கார் தெரியுமா?

அதில் லேண்ட் க்ரூஸர், ரேஞ்ச் ரோவர் ஆட்டோ பயோகிராஃபி எல்டபிள்யூபி, மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ், பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி, ஆடி ஏ8எல், லெக்ஸஸ் எல்எக்ஸ் 570, மெர்சிடிஸ் எஸ்500, போர்ஷே கேமேன், மினி கூப்பர், டொயோட்டா கேம்ரீ உள்ளிட்ட கார்கள் அடங்கும்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டில் குவிந்துகிடக்கும் சொகுசு கார்களின் அணி வகுப்பு... என்னென்ன கார் வச்சிருக்கார் தெரியுமா?

லேண்ட் க்ரூஸர்:

அமிதாப் பச்சன், கார் பிரியர் என்றாலும் அவருக்கு எஸ்யூவி கார்கள்மீதே அதிகம் விருப்பம் கொண்டவராக இருக்கின்றார். இதன்காரணமாக, சற்று பழமையான எஸ்யூவி காராக இருந்தாலும் டொயோட்டா க்ரூஸர் காரை அவர் கை வசம் வைத்து வருகின்றார். இந்த கார் 4.7 லிட்டர் வி8 டீசல் எஞ்ஜினைப் பெற்றிருக்கின்றது. இது, 262 பிஎச்பி பவரையும், 650 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டில் குவிந்துகிடக்கும் சொகுசு கார்களின் அணி வகுப்பு... என்னென்ன கார் வச்சிருக்கார் தெரியுமா?

ரேஞ்ச் ரோவர் ஆட்டோ பயோகிராஃபி எல்டபிள்யூபி:

பிரிட்டிஷ் நிறுவனத்தின் எஸ்யூவி ரக காராக ரேஞ்ச் ரோவர் ஆட்டோ பயோகிராஃபி எல்டபிள்யூபி இந்தியாவின் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றாக இருக்கின்றது. இதனை அமிதாப் பச்சன் அண்மையில்தான் கராஜில் சேர்த்துள்ளார். இது, இந்தியாவில் ரூ. 2.8 கோடி மதிப்பில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த காரில் 4.4 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 345 பிஎச்பி பவரையும், 740 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டில் குவிந்துகிடக்கும் சொகுசு கார்களின் அணி வகுப்பு... என்னென்ன கார் வச்சிருக்கார் தெரியுமா?

மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ்:

அமிதாப் பச்சானின் குடும்பம் பயன்படுத்தும் காராக மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கார் இருக்கின்றது. இது, எம்பி ரக காராகும். இது இந்தியாவில் ரூ. 68.4 லட்சம் என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த மாடலின் ஹை எண்ட் வேரியண்ட் ரூ. 81.9 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இவையனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

இந்த காரில், 2.1 லிட்டர் பிஎஸ்-6 தரத்திலான எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 163 பிஎஸ் பவரையும், 380 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டில் குவிந்துகிடக்கும் சொகுசு கார்களின் அணி வகுப்பு... என்னென்ன கார் வச்சிருக்கார் தெரியுமா?

பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி:

அமிதாப் பச்சானுக்கு வெள்ளை நிறத்திலான பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரை அரசியல் ஈடுபட்டு வரும் நண்பர் ஒருவர் பரிசாக வழங்கியுள்ளார். இந்த காரை சில நேரங்களில் அபிசேக் பச்சான் மற்றும் அமிதாப் பச்சன் என இருவரும் அவ்வப்போது பயன்படுத்தி வருகின்றனர். ஆகையால், இருவருக்கும் பிடித்தமான காராக இது இருக்கின்றது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டில் குவிந்துகிடக்கும் சொகுசு கார்களின் அணி வகுப்பு... என்னென்ன கார் வச்சிருக்கார் தெரியுமா?

இந்த கார் இரண்டு விதமான எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்கு கிடைக்கின்றது. அந்தவகையில், 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்ஜின் மற்றும் 6.0 லிட்டர் ட்வின்-டர்போ டபிள்யூ12 ஆகிய இரு எஞ்ஜின் விற்பனைக்கு கிடைக்கின்றது. இதில், 4.0 லிட்டர் எஞ்ஜின் 521 பிஎச்பி பவரையும், 680 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இதேபோன்று, 6.0 லிட்டர் எஞ்ஜின் 626 பிஎச்பி பவரையும், 820 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டில் குவிந்துகிடக்கும் சொகுசு கார்களின் அணி வகுப்பு... என்னென்ன கார் வச்சிருக்கார் தெரியுமா?

ஆடி ஏ8எல்:

ஆடி ஏ8எல் கார், இதனை இந்தியாவில் பல முக்கிய பிரபலங்கள் வருகின்றனர். அந்தவகையில், இந்த கார் நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மாடலாக இருக்கின்றது. இதனை அவர்கள் குடும்ப வாகனமாக பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், பல நேரங்களில் அபிசேக் பச்சானும், ஐஸ்வர்யா ராயும் இதனை குடும்பமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த காரில் 4.2 லிட்டர் வி8 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 350 பிஎச்பி பவரையும், 800 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டில் குவிந்துகிடக்கும் சொகுசு கார்களின் அணி வகுப்பு... என்னென்ன கார் வச்சிருக்கார் தெரியுமா?

லெக்ஸஸ் எல்எக்ஸ் 570:

லெக்ஸஸ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றாக எல்எக்ஸ்570 மாடல் இருக்கின்றது. இந்த மாடலை அமிதாப் பச்சன் கடந்த வருடம் அக்டோபர் மாதம்தான் வாங்கியுள்ளார். அவர் வாங்கியபோது, இது ரூ. 2.32 கோடி என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த கார் பார்ப்பதற்கு டொயோட்டாவின் லேண்ட் க்ரூஸர் மாடலைப் போன்று காட்சியளிக்கும்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டில் குவிந்துகிடக்கும் சொகுசு கார்களின் அணி வகுப்பு... என்னென்ன கார் வச்சிருக்கார் தெரியுமா?

ஆனால், லேண்ட் க்ரூஸர் காரைக் காட்டிலும், சொகுசான அம்சங்களை அதிகமானதாக கொண்டிருக்கின்றது. இந்த எஸ்யூவி காரில் டர்போசார்ஜட் 5.7 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 362 பிஎச்பி பவரையும், 530 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இத்துடன், இந்த எஞ்ஜினில் 8-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கின்றது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டில் குவிந்துகிடக்கும் சொகுசு கார்களின் அணி வகுப்பு... என்னென்ன கார் வச்சிருக்கார் தெரியுமா?

மெர்சிடிஸ் எஸ்500:

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எஸ்500 மாடலை ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஜூனியர் பச்சானும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த லக்சுரி காரில் 4.7 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 453 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டில் குவிந்துகிடக்கும் சொகுசு கார்களின் அணி வகுப்பு... என்னென்ன கார் வச்சிருக்கார் தெரியுமா?

போர்ஷே கேமேன்:

போர்ஷே நிறுவனத்தின் மிக பழைய ஜெனரேஷன் மாடலாக கேமேன் இருக்கின்றது. இது மிட்-எஞ்ஜின் ஸ்போர்ட்ஸ் காராகவும் இருக்கின்றது. மேலும், இந்த காரில் தற்போதைய டர்போ பிளாட் 4 திறனுக்கு பதிலாக பிளாட் சிக்ஸ் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த எஞ்ஜின்தான், ஹேட்ச்பேக் ரகத்திலான கேமேன் காருக்கு சிறப்பான இழுவை திறனை வழங்குகின்றது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டில் குவிந்துகிடக்கும் சொகுசு கார்களின் அணி வகுப்பு... என்னென்ன கார் வச்சிருக்கார் தெரியுமா?

இந்த கேமேன் எஸ் மாடலில் 320 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையிலான, 3.4 லிட்டர் என்ஏ பிளாட் சிக்ஸ் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, இந்த கார் அற்புதமான கையாளுதல் மற்றும் செயல்திறனக்கு பெயர்போன மாடலாக இருக்கின்றது. மேலும், 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு பி.டி.கே தானியங்கி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் இந்த கார் கிடைக்கின்றது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டில் குவிந்துகிடக்கும் சொகுசு கார்களின் அணி வகுப்பு... என்னென்ன கார் வச்சிருக்கார் தெரியுமா?

டொயோட்டா கேம்ரீ

டொயோட்டா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த செடான் ரக காரான கேம்ரீ மாடலை அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் பயன்படுத்தி வருகின்றார். நாடாளுமன்ற கூட்டத் தொடருக்குச் செல்லும்போது இந்த காரைதான், அவர் பயன்படுத்துவார் என கூறப்படுகின்றது. இந்த காரின் நம்பகத்தன்மை, அதிநவீன சொகுசு வசதி மற்றும் அதிகளவிலான இடவசதி உள்ளிட்டவையே இந்த காரை அவர் பயன்படுத்த முக்கிய காரணமாக இருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Amitabh Bachchan Family & Their Luxury Cars. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X