7 பேர் போக கூடிய டூ-வீலர்.. ஃபுல் சார்ஜில் 200 கிமீ பயணிக்கலாம்.. அமிதாப் பச்சன் வாங்க போறாரா!!
இந்தியாவின் பெரும் நடிகர்களில் ஒருவராக அமிதாப் பச்சன் இருக்கின்றார். இவரிடத்தில் ஆடம்பர கார்களுக்கு கொஞ்சம்கூட பற்றாக்குறை இருக்காது. மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz), ரேஞ்ச் ரோவர் (Range Rover), மினி கூப்பர் (Mini Cooper), பென்ட்லீ (Bentley) மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) என ஏகப்பட்ட விலை உயர்ந்த சொகுசு கார்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே அவர் ஓர் ஹோம்-மேட் எலெக்ட்ரிக் டூ-வீலர் (Homemade e-Bike) ஒன்றின் படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார்.
எனவே பலரும் அவரின் இந்த செயலை வைத்து இந்த வீட்டில் வைத்து தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரிக் பைக்கை வாங்கப் போகின்றாரோ என்கிற சந்தேகம் எழும்பி இருக்கின்றது. ஆனால், வெறும் வேடிக்கைக்காக மட்டுமே அவர் அந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார். அந்த வாகனத்தில் ஒரே நேரத்தில் ஏழு பேர் வரை அமர்ந்து பயணிக்கும் முடியும்.

ஆமாங்க, ஏழு இருக்கைகளுடனேயே இந்த மின்சாரத்தில் இயங்கும் இரண்டு சக்கர வாகனம் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த காரணத்திற்காகவும் அமிதாப் பச்சன் அந்த வீடியோவை பகிர்ந்திருக்கின்றார். இதுமட்டுமல்ல மின்சார வாகனத்தில் ஓர் முழு சார்ஜில் 200 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
மேலும், இதை சார்ஜ் செய்ய சூரிய ஒளியே போதுமானது ஆகும். சோலாரால் சார்ஜ் செய்யும் வசதியே இந்த டூ-வீலருக்கு அதை தயாரித்தவர் வழங்கி இருக்கின்றார். இதுமாதிரியான பலதரப்பட்ட சிறப்புகளுடன் வீட்டில் வைத்து தயாரிக்கப்ப்டட இந்த டூ-வீலர் கொண்டிருக்கின்ற காரணத்தினாலும் அமிதாப் அதுகுறித்த வீடியோவை தன்னுடையா இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார்.
இந்த வீடியோவை அவருடைய நண்பர் ஒருவரே அவருக்கு அனுப்பி வைத்திருக்கின்றார். 37 மில்லியனுக்கும் அதிகமான பின் தொடர்பவர்களைக் கொண்டவரே அமிதாப் பச்சன் ஆவார். இத்தகைய நபர் இந்த வீடியோவை பகிர்ந்திருப்பதால் அவ்வாகனத்தை தயாரித்த இளைஞர் ஓவர் நைட்டில் செம்ம ஃபேமஸான நபராக மாறியிருக்கின்றார்.
முழுக்க முழுக்க ஸ்கிராப் செய்யப்பட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஓர் எலெக்ட்ரிக் டூ-வீலரே இதுவாகும். இதை தயாரிக்க அந்த இளைஞருக்கு ரூ. 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே செலவானதாக கூறியிருக்கின்றார். சோலார் பேனலைகூட அவர் தன்னுடைய தேவைக்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து அதனை டூ-வீலரின் மேற்பகுதியில் பொருத்தி இருக்கின்றார்.

இது அவ்வாகனத்திற்கு மேற்கூரையாக மாறியிருக்கின்றது. ஆகையில், அதிக வெயில் அது பயணிக்கு சாதகமான பயண அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். அதேவேளையில், அதிக சூரிய ஒளி உள்ள நாட்களில் 200 கிமீட்டரையும் கடந்து இந்த வாகனம் பயணிக்கும் என அதை தயாரித்தவர் தெரிவித்து இருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மாதிரியான வாகனம் விற்பனைக்கு வரும் எனில் அதிக குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட குடும்பஸ்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, இதை சார்ஜ் செய்ய மின்சாரமும் தேவைப்படாது என்பதால் பலரும் இந்த திறனுக்காக அதை வாங்க நேரிடலாம். ஆனால், இது விற்பனைக்கு வரவே வராது என்பதே நிதர்சனமான உண்மை ஆகும்.


Click it and Unblock the Notifications








