நல்லா உத்து பாருங்க! சாதாரண ஸ்பிளெண்டர் பைக்ல போனது அவருதானா! உண்மை என்னனு தெரிஞ்சதும் எல்லாருக்குமே ஷாக்!
நடிகர், நடிகைகள் பொதுவாக மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் பயணம் செய்வதைதான் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் ஒரு சில சமயங்களில் திரையுலக நட்சத்திரங்கள் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்வதை நம்மால் காண முடியும். மிகவும் சாதாரணமான மாருதி சுஸுகி கார்களில் அவர்கள் வந்து இறங்குவார்கள். மெட்ரோ ரயில்களில் பார்த்தால், பயணிகள் உடன் பயணிகளாக மிகவும் சாதாரணமாக பயணம் செய்வார்கள். திரையுலக நட்சத்திரங்கள் எளிமையான கார்களை பயன்படுத்துவதையும், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வதையும் காட்டும் வீடியோக்கள் இணையத்தில் ஏராளமாக வலம் வந்து கொண்டுள்ளன.
இந்த வரிசையில் தற்போது பரவி வரும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த வைரல் வீடியோவில், நடிகர் அமிதாப் பச்சனை (Amitabh Bachchan) நம்மால் பார்க்க முடிகிறது. இதில் என்ன ஆச்சரியம் என நீங்கள் கேட்பது புரிகிறது.

அவர் மிகவும் எளிமையான ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) பைக்கை ஓட்டி சென்று கொண்டுள்ளார். இரவு நேரத்தில் பெரிதாக வாகன போக்குவரத்து இல்லாத சாலையில் அவர் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ஓட்டி செல்வதை நம்மால் காண முடிகிறது. அமிதாப் பச்சனிடம் ஏராளமான விலை உயர்ந்த கார்கள் எல்லாம் இருக்கின்றன.
இதில், ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VII (Rolls Royce Phantom VII), லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender), பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT), லெக்ஸஸ் எல்எக்ஸ் 570 (Lexus LX 570) மற்றும் மினி கூப்பர் எஸ் (Mini Cooper S) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இவ்வளவு விலை உயர்ந்த கார்களை வைத்துள்ள ஒரு உச்ச நடிகர், மிகவும் சாதாரணமான ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ஓட்டி வந்தால், யாருக்குதான் ஆச்சரியமாக இருக்காது. அத்துடன் இந்த வீடியோவில் அமிதாப் பச்சன் பாடல்களை பாடி கொண்டு ஜாலியாக வருவதையும் நாம் காணலாம். ஆனால் இந்த வீடியோவில் ஒரு 'ட்விஸ்ட்' உள்ளது.
நீங்கள் உன்னிப்பாக கவனித்தால், இந்த வீடியோவில் இருப்பது அமிதாப் பச்சன் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஆம், அமிதாப் பச்சன் போன்ற தோற்றத்தில் இருப்பது சசிகாந்த் பெட்வால் (Shashikant Pedwal) என்பவர் ஆவார். இவர் சமூக வலை தளங்களில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு நபர்.
இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் மட்டும் இவரை 21 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இவர் பார்ப்பதற்கு அச்சு அசலாக அமிதாப் பச்சன் போன்ற தோற்றத்திலேயே உள்ள ஒரு நபர் ஆவார். கடந்த காலங்களிலும் பல முறை இவர் அமிதாப் பச்சன் போன்ற தோற்றத்தில் நிறைய வீடியோக்களை வெளியிட்டுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவில், ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் சசிகாந்த் பெட்வாலுக்கு பின்னால் இருப்பவர் உல்ஹால் கமாத்தே (Ulhas Kamathe) ஆவார். இவர் சமூக வலை தளங்களில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு நபர்தான். இன்ஸ்டாகிராம் தளத்தில் மட்டும் இவரை 60 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
வைரல் வீடியோ ஒன்றை உருவாக்குவதற்காக இவர்கள் இருவரும் இணைந்து, இந்த வீடியோவை உருவாக்கியுள்ளனர். இந்த வீடியோவில் அவர்கள் இருவரும் பாடி செல்லும் ''Ye Dosti Hum Nahi Chodenge'' பாடல் அமிதாப் பச்சன் நடித்த கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றான ஷோலே (Sholay) திரைப்படத்தில் இடம்பெற்றதாகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இங்கே நாங்கள் 2 விஷயங்களை குறிப்பிட்டாக வேண்டும். ஒன்று இந்த வீடியோ புதியது அல்ல. இந்த வீடியோ வெளியாகி கிட்டத்தட்ட ஓராண்டு முழுமையாக முடிந்து விட்டது. இருப்பினும் சமூக வலை தளங்களில் தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மெய்யழகன் (Meiyazhagan) படத்தில் அரவிந்த் சாமியும், கார்த்தியும் இரவு நேரத்தில் சைக்கிளில் பயணம் செய்வார்கள். அதே போல் அமிதாப் பச்சன் இரவு நேரத்தில் மிகவும் எளிமையான ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் பயணம் செய்ததாக பலரும் கருதுகின்றனர். ஆனால் அது உண்மை கிடையாது என்பதை விளக்குவதற்காகவே இந்த செய்தியை வழங்கியுள்ளோம்.
மற்றொரு விஷயம், இந்த வீடியோவில் தோன்றும் இரு சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களுமே ஹெல்மெட் அணியவில்லை. ஆனால் அமிதாப் பச்சன் போன்ற தோற்றத்தில் காணப்படும் சசிகாந்த் பெட்வால் இதற்கு விளக்கும் அளித்துள்ளார். அவரது பதிவில், ''பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மட்டுமே இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல. தயவு செய்து ஹெல்மெட் அணியுங்கள். சட்டத்திற்கு புறம்பான எந்தவொரு செயலையும் நாங்கள் ஆதரிப்பதில்லை. எச்சரிக்கையுடன் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வீடியோவில் முகம் தெரிய வேண்டும் என்பதற்காக அவர்கள் ஹெல்மெட் அணியவில்லை.
ஆனால் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வது, சட்டத்திற்கு புறம்பான ஒரு செயல்தான். சட்டத்தின்படி பார்த்தால், இது ஒரு குற்றம் ஆகும். எனவே ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனங்களை இயக்குவது நல்லது என்பதுதான் எங்கள் கருத்து. இது அபராதங்களில் இருந்தும், சாலை விபத்துக்களில் இருந்தும் உங்களை காப்பாற்றும்.


Click it and Unblock the Notifications








