அமிதாப் பச்சனுக்கு இந்த விஷயம் ரொம்ப பிடிக்குமா? பலருக்கும் இந்த ரகசியம் தெரியாது!

நடிகர் அமிதாப் பச்சனுக்கு கார் பைக் ரேஸ் சத்தம் பிடிக்கும் என சமீபத்தில் வெளியான கோன் பனேக்கா குரோர்பதி என்ற பிரபல நிகழ்ச்சியில் பேசியுள்ளார். தற்போது இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

நடிகர் அமிதாப்பச்சன் ஹிந்தி சினிமா உலகில் மிகப்பெரிய நடிகராக இருந்தவர். இன்று அவரை தெரியாத இந்தியர்களே இல்லை என சொல்லிவிடலாம். இவர் ஹிந்தி மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களில் நடித்ததை விட கோன் பனேகா குரோர்பதி என்ற டிவி நிகழ்ச்சியை நடத்திய போது தான் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

amitabh bachchan loves f1 race sound

இந்த டிவி நிகழ்ச்சி ஹிந்தியில் மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டு அந்தந்த மாநில மொழி டிவி சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்பொழுது இந்தியா முழுவதும் இவர் மிகப்பெரிய பிரபலமாக பேசப்பட்டார். அந்த நிகழ்ச்சி தற்போது 15 வது சீசனாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இன்றும் அந்த நிகழ்ச்சியை அவர்தான் நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அவர் தனக்கு கார் பைக்,ரேஸ் சத்தம் பிடிக்கும் என பேசி உள்ளார். அந்த நிகழ்ச்சியின் போது கேட்கப்பட்ட எஃப்1 கார் பந்தயம் குறித்த கேள்வி கேள்வியின் போது இவர் இதை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளராக சுமார் ஒரு கோடி ரூபாயை வெல்லும் போட்டியில் பாராம்பில் என்ற நபர் கலந்து கொண்டார்.

amitabh bachchan loves f1 race sound

இந்த போட்டியின் போது அவருக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக கடந்த 202 எஃப் ஒன் கார் பந்தயத்தில் உலக சாம்பியன் பட்டத்தை கைபற்றியது யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஆப்ஷனாக லூயிஸ் ஹமில்டன், செரிகோ பெரீஸ், கார்லோஸ் சைன்ஸ்,மேக்ஸ் வெஸ்டாப்பென் ஆகியோர் பெயர்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிஸ் பாராம்பில் என்பவர் சரியாக மேக்ஸ் வெர்ஸ்டாப்பென் என்ற பெயரை பதிலாக கூறினார்.

அந்த பதில் சரியாக இருந்தது. எப்படி இவ்வளவு சரியான பதிலை சொன்னீர்கள் என அமிதாப்பச்சன் கேட்டபோது அங்கிருந்த அவரது தங்கை அனி மற்றும் மனைவி தேஜல் ஆகியோர் ஆஷிஷ் பாராம்பில் ஒரு தீவிர எஃப்1 கார் ரசிகர் என்றும், டிவியில் எப்பொழுது கார் பந்தயம் போட்டாலும் அவர் தன் மகன்களுடன் டிவி முன்னால் அமர்ந்து இந்த கார் பந்தயத்தை பார்க்க துவங்கி விடுவார்கள் என்றும் கூறினார்கள்.

மேலும் இவரது மூத்த மகன் சவுரா மேக்ஸ் வெர்டாப்பென் ரசிகர் எனவும் அதனால் அவருக்கு இந்த கேள்விக்கு எளிதாக பதில் தெரிந்து விட்டதாகவும் கூறினார்.மேலும் அவரது தங்கை அனி கூறும் போது தனது அண்ணன் மைக்கேல் ஸ்கூமேச்சர் ரசிகர் என கூறினார்.

இவர்கள் டிவியில் பார்க்கும் போது வீட்டில் இருக்கும் மனைவி தேஜலுக்கு கார் சத்தம் அதிகம் பிடிக்காது. அதனால் அவர் விடுமுறை நாட்களில் இவர்கள் அதிகம் டிவி பார்ப்பதால் வீட்டிலிருந்து வெளியேறி விடுவார் எனவும், இவர்கள் வீட்டில் அதிகமான கார் ரேஸ் பந்தயத்தை பார்ப்பார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த அமிதாபச்சன் ஆண்களுக்கு ரேஸ் கார் மற்றும் பைக் குறித்த சத்தம்ம் அதிகம் பிடிக்கும் எனவும், குறிப்பாக பெரிய எக்ஸாஸ்ட் மூலம் வரும் அதிக சத்தம் தனக்கும் பிடிக்கும் எனவும், அதன் மூலம் எனக்கு ஒரு எனர்ஜி கிடைக்கும் எனவும் அவர் பெருமையுடன் கூறினார். இந்த வீடியோ தற்போது பைக் கார் ரேஸ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது ஃபார்முலா 1 ரேஸ்களில் சத்தம் குறைவாகவே வருகிறது. தற்போது உள்ள கார்களில் 1.6 லிட்டர் டர்போ சார்ஜர் வி6 ஹைபிரிட் இன்ஜின்கள் தான் பயன்படுத்தப்படுகிறது. இதன் சத்தம் குறைவாக தான் இருக்கும் இதற்கு முன்னர் வி10 மற்றும் வி12 இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டது.

அப்பொழுது சத்தம் அதிகமாக இருந்தது. 2026 ஆம் ஆண்டு முதல் இந்த வி6 இன்ஜின்களும் நிறுத்தப்படும். இந்த இன்ஜின்கள் தற்போது 530 எச்பி பவரை வெளிப்படுத்தும் இன்ஜினாக இருக்கிறது. மேலும் எலெக்ட்ரிக்கல் எனர்ஜி மூலம் காருக்கு பவர் செலுத்தப்படுவதால் ரேஸிங் கார்களில் இருந்து வெளியாகும் சத்தம் முன்பை விட தற்போது வெகுவாக குறைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கார் ரேஸ், பைக் ரேஸ் ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள் அவர்களுக்கு கார், பைக் ரேஸ் செல்லும் போது ஏற்படும் சத்தம் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். தற்போது இந்தியாவின் மிகப்பெரிய நடிகரான அமிதாப்பச்சனும் தனக்கும் இந்த கார் பைக் ரேஸ் சத்தம் பிடிக்கும் என பேசி உள்ளார். உங்களுக்கு கார் பைக் ரேஸ் சத்தம் பிடிக்குமா என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 1, 2023, 20:35 [IST]
English summary
Amitabh bachchan loves f1 racing sound reveals in kbc 15
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+