82 வயதிலும் சொகுசு கார்களை வாங்கி குவித்திருக்கும் பிரபல நடிகர் - ரோல்ஸ் ராய்ஸில் இருந்து லேண்ட் ரோவர் வரையில்
அமிதாப் பச்சன் (Amitabh Bachchan), இவருக்கு இந்தியாவில் அறிமுகமே தேவை இல்லை. இந்தியாவை தாண்டி உலகின் பல நாடுகளிலும் இவரது ரசிகர்கள் உள்ளனர். பாலிவுட் நடிகராக இருப்பினும், நம் தமிழ்நாட்டிலும் இவரது நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சுமார் 55 வருடங்களுக்கும் மேல் நடித்து வருகிறார் என்றால் சும்மாவா... 82 வயதாகும் அமிதாப்பச்சன் இப்போதும் திரைப்படங்களிலும், விளம்பரங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் விரைவில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கல்கி 2898AD திரைப்படம் திரைக்குவர உள்ளது.
இதன் மூலமாக, அமிதாப்பச்சன் வாழும் சொகுசு வாழ்க்கையை பற்றி நான் கூற வேண்டியது இல்லை. அதேநேரம், விலையுயர்ந்த கார்களை புதியது புதியதாக வாங்கி குவிப்பதிலும் அமிதாப்பச்சன் ஆர்வம் காட்டக்கூடியவர். இத்தகையவரிடம் உள்ள முக்கியமான சில லக்சரி கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

1. லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender): நடிகர் அமிதாப்பச்சன் சமீபத்தில் வாங்கிய கார் இதுவாகும். சில வாரங்களுக்கு முன் தனது பிறந்தநாளை முன்னிட்டு இந்த காரை அவர் வாங்கியிருந்தார். டிஃபெண்டர் கார்களில் அமிதாப்பச்சன் வாங்கியிருப்பது, விலையுயர்ந்த மற்றும் அளவில் பெரியதான டிஃபெண்டர் 130 மாடல் ஆகும்.
மேலும், இந்த டிஃபெண்டர் காரை மெரூன் என்கிற பிரத்யேகமான நிறத்தில் இந்த நடிகர் வாங்கியிருந்தார். அதாவது, இதற்காக அவர் கூடுதலாக செலவு செய்திருக்கக்கூடும். இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆனது தற்சமயம் ரூ.1.39 கோடியில் இருந்து ரூ.1.46 கோடி வரையில் உள்ளன.

2. ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம்-7 (Rolls Royce Phantom 7): இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் அமிதாப்பச்சன் ஒரு ரோல்ஸ்-ராய்ஸ் கார் பிரியர் ஆவார். கடந்த காலங்களில் இருந்து பல்வேறு ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை இவர் சொந்தமாக்கி உள்ளார். அதில் முக்கியமான ரோல்ஸ்-ராய்ஸ் காராக இருப்பது பாண்டோம்-7 ஆகும். இந்தியாவில் தற்சமயம் பாண்டோம்-7 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9 கோடியில் இருந்து ரூ.10.50 கோடி வரையில் உள்ளன.
3. பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி (Bentley Continental GT): ரோல்ஸ்-ராய்ஸுக்கு அடுத்து, விலையுயர்ந்த கார்களாக பெண்ட்லீ கார்கள் விளங்குகின்றன. அத்தகைய பெண்ட்லீ கார்களுள் ஒன்றான காண்டினெண்டல் ஜிடியில் 6.0 லிட்டர் 12-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 644 பிஎச்பி மற்றும் 900 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினை பெறுகின்ற காண்டினெண்டல் ஜிடி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.5.23 கோடியில் இருந்து ரூ.8.45 கோடி வரையில் உள்ளன.
4. லெக்ஸஸ் எல்.எக்ஸ்570 (Lexus LX570): டொயோட்டா லேண்ட் க்ரூஸரின் லக்சரி வெர்சனாக லெக்ஸஸ் எல்.எக்ஸ்570 விளங்குகிறது. இந்த காரில் 5.7 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 383 எச்பி மற்றும் 700 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

5. மினி கூப்பர் எஸ் (Mini Cooper S): நடிகர் அமிதாப் பச்சனிடம் உள்ள அளவில் சிறியதான கார் மினி கூப்பர் எஸ் ஆகும். இந்த மினி காரை அமிதாப் பச்சனுக்கு அவரது மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன் பரிசாக வழங்கினார். இந்த மினி காரில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த காரை '2882' என்கிற ஃபேன்சி நம்பர் பிளேட் உடன் அமிதாப்பச்சன் வைத்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அமிதாப் பச்சனின் கார் கேரேஜில் இவை மட்டுமின்றி வேறு சில கார்களும் உள்ளன. அவற்றுள் முக்கியமான விலையுயர்ந்த கார்களை மட்டுமே இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். இன்னும் அமிதாப் பச்சனின் குடும்பத்தாரிடம் உள்ள கார்களையும் கணக்கில் எடுத்து பார்த்தால், இன்னும் அதிகமாக போகும். மேலும், நடிகர் அமிதாப்பச்சன் கார் பிரியர் என்பதால், அவரிடம் உள்ள சொகுசு கார்களின் எண்ணிக்கை இன்னும் மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









