வயசானாலும் அந்த கெத்து அப்படியே இருக்கு! 2 கோடி ரூபாய் காரை ஓட்டீட்டு போனது அவரா! வாயை பிளக்கும் ரசிகர்கள்!

இந்திய திரையுலகின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அமிதாப் பச்சன் (Amitabh Bachchan). இவரது கார் கலெக்ஸன் (Car Collection) மிகப்பெரியது. பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT), ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி எல்டபிள்யூபி (Range Rover Autobiography LWB), மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ் (Mercedes Benz V-Class), போர்ஷே கேமென் எஸ் (Porsche Cayman S) மற்றும் மினி கூப்பர் எஸ் (Mini Cooper S) என ஏராளமான விலை உயர்ந்த கார்களை, அமிதாப் பச்சன் வைத்துள்ளார்.

இதுதவிர லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) கார் ஒன்றும் அமிதாப் பச்சனிடம் உள்ளது. இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்தது. லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் முந்தைய தலைமுறை மாடல்கள் எல்லாம் முரட்டுத்தனமான ஆஃப் ரோடு ரகத்தை சேர்ந்தவையாக மட்டுமே இருந்தன.

Amitabh Bachchan Spotted Driving Land Rover Defender 130

அதாவது எப்பேர்ப்பட்ட கரடுமுரடான நிலப்பரப்பிலும், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை எளிமையாக ஓட்ட முடியும். ஆனால் தற்போது காலம் மாறி விட்டது. லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் தற்போது ஏராளமான சொகுசு வசதிகளும் வழங்கப்படுகின்றன. எனவே திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர்.

90, 110 மற்றும் 130 ஆகிய வேரியண்ட்களில், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 110 வேரியண்ட்டைதான், பெரும்பாலானோர் வாங்குகின்றனர். ஆனால் அமிதாப் பச்சனோ 130 வேரியண்ட்டை வாங்கியுள்ளார். அனேகமாக பாலிவுட்டில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 வேரியண்ட்டை வைத்துள்ள ஒரே நபர் இவராகதான் இருப்பார் என நாங்கள் கருதுகிறோம்.

Land Rover Defender 130

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 வேரியண்ட், 3 வரிசை இருக்கை அமைப்புடன் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் 90 மற்றும் 110 வேரியண்ட்கள், 2 வரிசை இருக்கை அமைப்புடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கூட அமிதாப் பச்சன் 130 வேரியண்ட்டை தேர்வு செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த சூழலில், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 வேரியண்ட்டை அமிதாப் பச்சன் ஓட்டும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று, சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், அமிதாப் பச்சன் தனியாக காரை ஓட்டுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

ஆனால் இது மிகவும் சிறிய வீடியோ என்பதால், அமிதாப் பச்சன் எங்கேயாவது சென்றாரா? அல்லது ஒரு முறை ஓட்டி பார்த்து விட்டு சாலையோரமாக பார்க்கிங் செய்ய முயற்சி செய்தாரா? என்பது சரியாக தெரியவில்லை. எனினும் அமிதாப் பச்சனின் ரசிகர்கள் இந்த வைரல் வீடியோவை, ஆர்வமாக பகிர்ந்து வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அமிதாப் பச்சன் வைத்துள்ள லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 வேரியண்ட்டின் விலை 1.46 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-road Price) சுமார் 40 லட்ச ரூபாய் அதிகமாக வரும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 18, 2024, 13:42 [IST]
English summary
Amitabh bachchan spotted driving land rover defender 130 viral video
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+