சாதாரண மஹிந்திரா காரை ஓட்டீட்டு வந்தது இவரா! எல்லாரும் செல்போனை எடுத்துகிட்டு பின்னாடியே ஓட ஆரம்பிச்சுட்டாங்க!

இந்தியாவில் மொழி வித்தியாசம் இன்றி, திரைப்பட துறையை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் மிகவும் விலை (Price) உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி குவிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் (Amitabh Bachchan) இதற்கு விதிவிலக்கு அல்ல.

தற்போதைய நிலையில், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes-Benz GLS), மெர்சிடிஸ்-பென்ஸ் வி-க்ளாஸ் (Mercedes-Benz V-Class), மெர்சிடிஸ்-மேபேக் எஸ்-க்ளாஸ் (Mercedes-Maybach S-Class), லெக்ஸஸ் எல்எக்ஸ் 470 (Lexus LX 470) மற்றும் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Land Rover Range Rover Autobiography) உள்ளிட்ட கார்கள் அமிதாப் பச்சனிடம் உள்ளன.

Amitabh Bachchan Spotted Driving Mahindra Thar

இதுதவிர மினி கூப்பர் எஸ் (Mini Cooper S), பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT) மற்றும் டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் (Toyota Camry Hybrid) உள்ளிட்ட கார்களும் அமிதாப் பச்சனிடம் இருக்கின்றன. இப்படிப்பட்ட கார்களை எல்லாம் வைத்திருக்கும் அமிதாப் பச்சன் சாதாரண ஒரு காரை ஓட்டி சென்றார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம், உண்மைதான். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு அருகே அமிதாப் பச்சன் மஹிந்திரா தார் (Mahindra Thar) காரை ஓட்டி செல்லும் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மஹிந்திரா தார் காரை ஓட்டி கொண்டு அமிதாப் பச்சன் வீட்டிற்குள் நுழையும்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

Mahindra Thar

அப்போது அமிதாப் பச்சன் மட்டுமே காருக்குள் இருந்துள்ளார். ஆனால் அமிதாப் பச்சனுக்கு சொந்தமான மஹிந்திரா தார் காரா? அல்லது வேறு ஒருவருடையதா? என்பது உறுதியாக தெரியவில்லை. மேற்கண்ட கார்களை எல்லாம் வைத்துள்ளார் என்பதை பார்க்கும்போதே, அமிதாப் பச்சன் ஒரு கார் ஆர்வலர் என்பது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும்.

பலவிதமான கார்களையும் ஓட்டி பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அமிதாப் பச்சனுக்கு அதிகம். இதன் காரணமாகவே அவர் மிகவும் சாதாரணமான மஹிந்திரா தார் காரை ஓட்டியுள்ளார். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா தார் காரின் ஆரம்ப விலை வெறும் 10.54 லட்ச ரூபாய் மட்டுமே.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 16.78 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்-ரோடு விலை இன்னும் சற்று கூடுதலாக வரும். அமிதாப் பச்சன் போன்ற செல்வந்தர்களுக்கு மஹிந்திரா தார் போன்ற கார்கள் எல்லாம் உண்மையில் மிகவும் சாதாரணமானவைதான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓரளவிற்கு விலை குறைவான காராக இருந்தாலும் கூட, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்பட பிரபல நடிகர், நடிகைகள் பலரும், மஹிந்திரா தார் காரை சொந்தமாக வாங்கியுள்ளனர். அவர்களது கராஜில், மிகவும் விலை உயர்ந்த கார்களுக்கு மத்தியில், மஹிந்திரா தார் காருக்கும் இடம் ஒதுக்கியிருப்பதன் மூலம், இந்த காரை அவர்கள் எவ்வளவு நேசிக்கின்றனர்? என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 4, 2023, 14:16 [IST]
English summary
Amitabh bachchan spotted driving mahindra thar viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+