ரூ.3.5 கோடி விலையுள்ள வெள்ளை நிற காரில் நரை முடியுடன் வந்த நடிகர் அவரா! வீட்டு வாசல்ல பெரும் படையே கூடிருச்சு!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக உயரிய விலைக் கொண்ட சொகுசு கார் மாடல்களில் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ஜ் ரோவர் எல்டபிள்யூ (Land Rover Range Rover LWB)-வும் ஒன்றாகும். இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 3.5 கோடிக்கும் அதிகம் ஆகும்.

இத்தகைய விலை உயர்ந்த கார் மாடலிலேயே பழம் பெரும் நடிகர் ஒருவர் அவருடைய ரசிகர்களுக்கு தரிசனம் வழங்கி இருக்கின்றார். அவர் யார்? அவர் பயன்படுத்தி வரும் இந்த சொகுசு காரின் மதிப்பு என்ன? மற்றும் அதில் வழங்கப்பட்டு இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன? என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Amitabh bachchan range rover lwb

இந்தியாவின் பழம் பெரும் நடிகர்களில் அமிதாப் பச்சனும் ஒருவர் ஆவார். தமிழில் ரஜினிகாந்த்-ஐப் போல, பாலிவுட்டில் இவரே முன்னணி நட்சத்திர நடிகர் ஆவார். இவரே சமீபத்தில் பிராண்ட் நியூ வெள்ளை நிற லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் எல்டபிள்யூ காரில் தரிசனம் வழங்கியவர் ஆவார்.

இவரிடத்தில் ஏகப்பட்ட சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் கார் மாடலும் ஏற்கனவே அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றது. ஆனால், இப்போது அவருடன் காட்சியளித்து இருப்பது புத்தம் புதியதாகும். அதாவது, சிறப்பம்சங்களை மிக மிக அதிகளவில் தாங்கி இருக்கும் சொகுசு கார் மாடல் ஆகும்.

Amitabh bachchan range rover car

இந்த காரிலேயே அவர் இன்று அவர் காட்சியளித்தார். இன்று (அக்டோபர் 11) அவருக்கு 81 பிறந்த நாள் ஆகும். இந்த கொண்டாட்டத்திற்காக அவர் வெளியில் சென்றபோதே அக்காரில் அவர் காட்சியளித்திருக்கின்றார். இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் மதிப்பே ரூ. 3.5 கோடி ஆகும்.

இதன் ஆன்-ரோடு விலை ரூ.4 கோடிக்கும் அதிகம் ஆகும். சிறப்பம்சங்களாக இந்த காரில் ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், மெர்டியன் பிராண்டுடைய ஸ்பீக்கர்கள் 35, மிதப்பதைப் போன்ற அமைப்புக் கொண்ட முழு டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 13.1 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்-அப் திரை, மல்டி ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், 4 ஸ்போக் ஸ்டியரிங் வீல் மற்றும் பின் பக்க இருக்கையாளர்களுக்கான பொழுதுபோக்கு திரை உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

Amitabh bachchan

இதுதவிர, பானங்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கான கப் ஹோல்டர்கள், மிருதுவான இருக்கைகள், பெரிய லெக் ரூம் மற்றும் ஹெட்ரூம் வசதி போன்ற வசதிகளும் இந்த காரில் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த அம்சங்கள் அனைத்தும் இணைந்து இந்த காரில் நாம் பயணிக்கும்போது சொகுசு கப்பலில் பயணிப்பதைப் போன்ற அனுபவத்தை வழங்கும்.

உண்மையில் சொல்ல வேண்டுமானால் இந்த காரில் பயணிக்கும்போது மிகுந்த அமைதியான முறையில் நம்மால் பயணித்துக் கொள்ள முடியும். ஏனெனில் காருக்குள் வெளிப்புறத்தின் சத்தம் துளி அளவும் கேட்காது. ஏன் வீல், சாலையில் உராயும் சத்தம்கூட கேட்காது. இதுதவிர, எஞ்ஜின் சத்தம், அதிர்வுகள் என அனைத்து இரைச்சல்களையும் இந்த கார் வெளியேவே தடுத்து நிறுத்திவிடும்.

இதனால்தான் பெரிய பெரிய பணக்காரர்கள் தங்களின் பயணத்தை இந்த ரேஞ்ஜ் ரோவர் சொகுசு காரை பயன்படுத்துகின்றனர். ஏன் நம்முடைய முதல் அமைச்சர் முக ஸ்டாலின்கூட இந்த ரேஞ்ஜ் ரோவர் சொகுசு கார் மாடலையே தன்னுடைய அன்றாட பயணங்களுக்கு பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றார்.

அமிதாப் பச்சன் தற்போது வாங்கி இருக்கும் இந்த கார் அதிக சொகுசு வசதிகளுக்கு மட்டுமல்ல எஞ்ஜின் திறன் வெளிப்பாட்டிற்கும் பெயர்போன காராக இருக்கின்றது. அதில், 4.4 லிட்டர் பி530 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் 434 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அமிதாப் பச்சன் ஏற்கனவே ரேஞ்ஜ் ரோவர் எல்டபிள்யூ காரை புதிதாக வாங்க அந்த காரில் அதிக சிறப்பு வசதிகள் இடம் பெற்றிருப்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது. இப்போது வாங்கி இருப்பது அவர் முன்னதாக பயன்படுத்தி வந்த பழைய ரேஞ்ஜ் ரோவரைக் காட்டிலும் அதிக சொகுசு மற்றும் தொழில்நுட்ப வசதி மற்றும் கவர்ச்சியான தோற்றம் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 11, 2023, 20:30 [IST]
English summary
Amitabh bachchan spotted with brand new land rover range rover lwb
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X