அமிதாப்பச்சனின் கார் விற்பனைக்கு வந்தது... நீங்கள் கூட வாங்கி 'கெத்து' காட்டலாம்!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் கார் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. அந்த காரை நீங்கள் கூட வாங்கி கெத்து காட்ட முடியும்.

By Arun

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் கார் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. அந்த காரை நீங்கள் கூட வாங்கி கெத்து காட்ட முடியும். இதுபற்றிய விரிவான செய்தியை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

அமிதாப்பச்சனின் கார் விற்பனைக்கு வந்தது... நீங்கள் கூட வாங்கி 'கெத்து' காட்டலாம்!!!

அமிதாப்ஜி பயன்படுத்திய கார்...!!

உலகப்புகழ் பெற்ற பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் குடும்பம், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் என நட்சத்திர பட்டாளங்களை உள்ளடக்கியது. அவர்கள், ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம், பென்ட்லி கான்டினென்டல் ஜிடி என விலை உயர்ந்த பல கார்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அமிதாப்பச்சனின் கார் விற்பனைக்கு வந்தது... நீங்கள் கூட வாங்கி 'கெத்து' காட்டலாம்!!!

அப்படிப்பட்ட அமிதாப்பச்சன் குடும்பத்தில் இருந்த முக்கியமான கார்களில் ஒன்று லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் ஆட்டோபயோகிராபி. ஒரு சமயத்தில், அமிதாப்பச்சனின் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த கார் இதுதான்.

அமிதாப்பச்சனின் கார் விற்பனைக்கு வந்தது... நீங்கள் கூட வாங்கி 'கெத்து' காட்டலாம்!!!

ஆம்., கடந்த 2005ம் ஆண்டு சமயத்தில், அமிதாப்பச்சன் இந்த காரைதான் அடிக்கடி பயன்படுத்துவார். பெரும்பாலான இடங்களுக்கு இந்த காரில் அவர் வந்ததுண்டு.

அமிதாப்பச்சனின் கார் விற்பனைக்கு வந்தது... நீங்கள் கூட வாங்கி 'கெத்து' காட்டலாம்!!!

ரேஞ்ச் ரோவர் வோக் ஆட்டோபயோகிராபி கார் எஸ்யூவி வகையை சேர்ந்தது. தற்போது அந்த கார், யூஸ்டு கார் மார்க்கெட்டை வந்தடைந்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமிதாப்பச்சனின் கார் விற்பனைக்கு வந்தது... நீங்கள் கூட வாங்கி 'கெத்து' காட்டலாம்!!!

அமிதாப்பச்சனின் ரேஞ்ச் ரோவர் வோக் ஆட்டோபயோகிராபி கார், விற்பனைக்கு கிடைக்கும் என, கார்கள் தொடர்பான இணையதளம் ஒன்றின் கிளாசிஃபைட்ஸ் பகுதியில், விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அந்த காரின் 2வது ஓனர் பெயரில், விளம்பரம் வெளியாகியுள்ளது.

அமிதாப்பச்சனின் கார் விற்பனைக்கு வந்தது... நீங்கள் கூட வாங்கி 'கெத்து' காட்டலாம்!!!

யார் வேண்டுமானாலும் அந்த காரை வாங்கலாம். யாரிடமாவது, 23,75,000 ரூபாய் இருந்தால், அமிதாப்பச்சனின் காரை சொந்தமாக்கி கொண்ட பெருமையை பெற முடியும். 23,75,000 ரூபாய்தான் அந்த காரின் விலை.

அமிதாப்பச்சனின் கார் விற்பனைக்கு வந்தது... நீங்கள் கூட வாங்கி 'கெத்து' காட்டலாம்!!!

ஒரு காலத்தில் அமிதாப்பச்சனின் தேர் போன்று திகழ்ந்த காரை, தங்களது வீட்டிற்கு ஓட்டிச்செல்ல, அவரது ரசிகர்கள் போட்டி போடுவார்கள் என்பதில் எள் அளவுக்கு கூட சந்தேகம் வேண்டாம்.

அமிதாப்பச்சனின் கார் விற்பனைக்கு வந்தது... நீங்கள் கூட வாங்கி 'கெத்து' காட்டலாம்!!!

35,000 கிமீதான் ஓடியுள்ளது...!!

அந்த கார் வெறும் 35,000 கிலோ மீட்டர் மட்டுமே ஓடியுள்ளது. ஒரு பிரபலம் பயன்படுத்திய விலை உயர்ந்த காருக்கு, 23,75,000 ரூபாய் என்பது அதிகம் இல்லை என்பதுபோல்தான் தெரிகிறது.

அமிதாப்பச்சனின் கார் விற்பனைக்கு வந்தது... நீங்கள் கூட வாங்கி 'கெத்து' காட்டலாம்!!!

மும்பையில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ள அந்த கார், அதன் 2வது ஓனர் வசம்தான் தற்போது இருக்கிறது. அவர்தான் விளம்பரம் கொடுத்துள்ளார்.

அமிதாப்பச்சனின் கார் விற்பனைக்கு வந்தது... நீங்கள் கூட வாங்கி 'கெத்து' காட்டலாம்!!!

அனேகமாக அவர் ஒரு கார் புரோக்கராக இருப்பார் என தெரிகிறது. அவரின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களும், இணையதளத்தில் வெளியாகியுள்ள விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அமிதாப்பச்சனின் கார் விற்பனைக்கு வந்தது... நீங்கள் கூட வாங்கி 'கெத்து' காட்டலாம்!!!

கெத்து காட்ட நீங்கள் ரெடியா?

ஒருவேளை உங்களுக்கு அந்த கார் தேவை என்றால், நீங்கள் அந்த நபரை அணுகி, பேச்சுவார்த்தை நடத்தலாம். அப்புறம் என்ன...அமிதாப்பச்சனின் கார் உங்கள் வசமாகிவிடும். அமிதாப்ஜியின் கார் இப்போ என்கிட்ட என கெத்து காட்டலாம்.

அமிதாப்பச்சனின் கார் விற்பனைக்கு வந்தது... நீங்கள் கூட வாங்கி 'கெத்து' காட்டலாம்!!!

அந்த காருக்கு 2019ம் ஆண்டு வரை விரிவான இன்சூரன்ஸ் உள்ளது. டயர்கள் புதியதுதான். சன்ரூப், பார்க்கிங் சென்சார்கள், ஏர் சஸ்பென்ஸன், ஆண்ட்ராய்டு கனக்டிவிட்டி, ரிவர்ஸ் கேமரா, இன்போடெயின்மெண்ட் யூனிட்டுக்கு இன்டர்னெல் ஹார்டு டிரைவ் என பற்பல வசதிகள் உள்ளன.

அமிதாப்பச்சனின் கார் விற்பனைக்கு வந்தது... நீங்கள் கூட வாங்கி 'கெத்து' காட்டலாம்!!!

இதில், ஏர் சஸ்பென்ஸன் சமீபத்தில்தான் மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஏர் சஸ்பென்ஸன் மிகவும் நல்ல நிலையில் இருப்பதாக விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமிதாப்பச்சனின் கார் விற்பனைக்கு வந்தது... நீங்கள் கூட வாங்கி 'கெத்து' காட்டலாம்!!!

ரேஞ்ச் ரோவர் வோக் ஆட்டோபயோகிராபி காரில், 4.4 லிட்டர் வி8 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 345 பிஎச்பி பவரை உருவாக்கும்.

Article Published On: Friday, May 18, 2018, 17:01 [IST]
English summary
Amitabh Bachchan’s Range Rover up for sale & you can buy it: Details. read in tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+