பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் கார் கலெக்ஷன்!

பாலிவுட் உலகில் 40 ஆண்டு கால நடிப்பு பாரம்பரியத்தை பதிவு செய்துள்ள நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பு போன்றே கார் கலெக்ஷனுக்கு பெயர் போனவர். அமிதாப் வீட்டின் கார் ஷெட்டை ரக ரகமான கோடீஸ்வர கார்கள் ஆர்ப்பாட்டமின்றி ஆக்கிரமித்துள்ளன.

கார்கள் மீது தீராத மோகம் கொண்ட பாலிவுட் பிரபலங்களில் முக்கியமானவர் அமிதாப் என்பதை அவரது கார் கலெக்ஷன் மூலமே தெரிந்து கொள்ள முடியும். ரோல்ஸ்ராய்ஸ் முதல் பென்ட்லீ வரை வரிசை கட்டி நிற்கும் அமிதாப் கார் கலெக்ஷனை இங்கே காணலாம்.

பென்ட்லீ கான்டினென்ட்டல் ஜிடி

பென்ட்லீ கான்டினென்ட்டல் ஜிடி

ரூ.1.65 கோடி விலை கொண்டது. இந்த காரில் 552 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 4.4 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் வல்லமை கொண்ட இந்த காரின் டாப் ஸ்பீட் மணிக்கு 198 கிமீ.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600

ரூ.1 கோடி விலை கொண்டது. 5.5 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கார் 517 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

போர்ஷே கேமேன்

போர்ஷே கேமேன்

ஒரு கோடி விலையை நெருங்கும் இந்த காரில் 3.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.இந்த எஞ்சின் 320 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 5.8 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டிப் பிடிக்கும்.

 பிஎம்டபிள்யூ 760எல்ஐ

பிஎம்டபிள்யூ 760எல்ஐ

ஒண்ணேகால் கோடி விலை கொண்ட இந்த காரில் 535பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மணிக்கு 250கிமீ வேகம் வரை பறக்கக்கூடியது.

லேண்ட்ரோவர் வோக்

லேண்ட்ரோவர் வோக்

4197சிசி வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 402 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் இந்த எஞ்சின் பெர்ஃபார்மென்சில் பின்னும். ரூ.1.05 கோடி ஆரம்ப விலை கொண்டது.

ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்

ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்

ரூ.3.50 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 460 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 6749சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த காரை அமிதாப்புக்கு பிரபல பாலிவுட் இயக்குனர் விது வினோத் சோப்ரா பரிசாக கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 18, 2012, 13:35 [IST]
English summary
Amitabh Bachchan one of the most popular Bollywood actors, who has been a synonym of success in the Indian film industry for more than 40 years now, is owner of more than a dozen expensive luxury cars.Here we are giving some detail about Amitabh Bachchan's car collection.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+