வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை கூட்டி போயே ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கிட்டாரா.. நம்ம நாட்டுக்காரர் வேற லெவல்!
மிகவும் இளம் தொழிலதிபர்களில் ஒருவராக அம்ஜத் சித்தாரா அறியப்படுகின்றார். பிசிசி குரூப் இன்டர்நேஷனல் (BCC Group International) மற்றும் பிசிசி புராபர்டீஸ் (BCC Properties) நிறுவனங்களின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநரும் இவரே ஆவார். கேரளா மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது துபாய்-இல் செட்டில் ஆகி இருக்கின்றார். இந்த நிலையிலேயே ஆடம்பரங்களுக்கு பெயர்போன ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கார் மாடலை அவர் வாங்கி இருக்கின்றார். ஆகையால், இதுவரை தொழிலில் கண்ட வெற்றிகளுக்காக செய்திகளில் இடம் பிடித்து வந்த அவர் தற்போது இந்த காரை வாங்கியதன் வாயிலாக டிரெண்டிங் நபராக மாறியிருக்கின்றார்.
அம்ஜத் சித்தாரா வாங்கி இருப்பது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் சீரிஸ் II (Rolls-Royce Cullinan Black Badge Series II) மாடல் ஆகும். பெயருக்கே ஏற்ப இந்த காரின் வெளிப்புறம் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த கார் முழு இருட்டான இடத்தில நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தால், அது இருக்கும் இடமே தெரியாது. அந்த அளவிற்கு அடர் கருப்பு நிறத்தாலேயே இந்த கார் முழுக்க முழுக்க அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய வாகனத்தையே அம்ஜத் சித்தாரா தற்போது வாங்கி இருக்கின்றார்.
உலக அளவில் ஒரு சிலரிடத்திலேயே இந்த கார் மாடல் பயன்பாட்டில் இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலைக்கு, அக்கார் மாடலின் அதீத விலையே காரணமாக உள்ளது. இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலையே இந்தியாவில் ரூ. 12 கோடிக்கும் அதிகமாக விற்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
இத்தகைய விலை உயர்ந்த காரையே துபாயில் வாங்கி ஒட்டுமொத்த துபாய் வாசிகளையும், இந்தியர்களையும் அம்ஜத் திரும்பி பார்க்கச் செய்திருக்கின்றார். இப்போது பல துறைகளில் இவரின் கால்தடம் பதித்திருந்தாலும், முன்னதாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அழைத்துச் செல்லும் தொழிலையே மேற்கொண்டு வந்தார் என்பது கவனிக்கத்தகுந்தது.
குறிப்பாக, துபாய்-க்கே இவர் ஆட்கள் சப்ளையை மேற்கொண்டு வந்தார். அந்த ஊரில் கட்டுமான பணிகளுக்கு ஆட்கள் அதிகம் தேவைப்பட்ட காலக்கட்டத்தில் இவரே பணியாட்கள் அதிகம் சப்ளை செய்தார். இந்த பிசினஸ்ஸே அவரை துபாயின் தற்போதைய மிகப் பெரிய பிசனஸ் மேனாக மாற்றியிருக்கின்றது.
அதேவேளையில், அம்ஜத் வாங்கும் முதல் ரோல்ஸ் ராய்ஸ் காரா இது என்று கேட்டால் இல்லை. அவரிடத்தில் ஏற்கனவே ரோல் ரோல்ஸ் விரைத் பிளாக் பேட்ஜ் உள்ளது. இதுமட்டுமில்லைங்க, இந்த தொழிலதிபர் மெர்சிடிஸ் மேபேக், பிஎம்டபிள்யூ, பென்ட்லீ மற்றும் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் போன்ற பிராண்டுகளின் மிக மிக விலையுயர்ந்த ஆடம்பர கார்களையும் அவர் வைத்திருக்கின்றார்.
எஞ்சினைப் பொருத்த வரை ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரில் 6.75 லிட்டர், ட்வின் டர்போ வி12 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 600 பிஎச்பி மற்றும் 900 என்எம் டார்க் ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்டது. இது வழக்கமான கல்லினன் கார் மாடலைக் காட்டிலும் 29 பிஎச்பி மற்றும் 50 என்எம் டார்க் அதிகம். தானியங்கி டிரான்ஸ்மிஷனே இந்த காரில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாகவே நான்கு சக்கரங்களுக்கும் இயங்கு சக்தி கடத்தப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உல்லாச கப்பல் மாதிரியான ஓர் கார் மாடலே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் சீரிஸ் II ஆகும். இது மிகுந்த கருப்பான நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். மின் விளக்குகள் இல்லாத சாலையிலோ அல்லது இருட்டான இடத்திலேயோ நிறுத்தப்பட்டு இருந்தால் இந்த கார் இருப்பதே தெரியாது. அந்த அளவிற்கே அடர் கருப்பு நிறத்தைக் கொண்டிருக்கும் கார் மாடலாக இதனை ரோல்ஸ் ராய்ஸ் தயார் செய்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








