அபராத தொகையில் தள்ளுபடி! ரூ1000 அபராதம் இருந்தால் வெறும் ரூ250 செலுத்தனால் போதும்!

இந்தியாவில் டிராஃபிக் விதிமுறை மீறல்களில் ஈடுபபட்ட பலருக்கு டிராஃபிக் அபராதங்கள் ஆன்லைன் மூலம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் நீண்ட காலமாக செலுத்தப்படாமல் இருக்கும் அபராத தொகையை வசூலிக்க மன்னிப்பு திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் 75 சதவீதம் வரை அபராத தொகை குறைக்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் சாலைகளில் வாகனம் ஓட்டுபவர்கள் சாலை விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். இப்படியாக தற்போது நவீன தொழிற்நுட்பங்களை உட்புகுத்தி ஸ்பீடு கேமராக்கள் மூலம் சாலை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது. இப்படியாக விதிக்கப்படும் அபராதங்களை ஆன்லைன் மூலம் செலுத்த முடியும்.

75 2500 1000 1817 817 1000 3 75 1000 250 50

இப்படியாக விதிக்கப்பட்ட அபராதங்கள் பல செலுத்தப்படாமல் நிலுவையில் இருக்கிறது. மக்கள் அதிக தொகை காரணமாக அபராத தொகையை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த அபராத தொகை மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரூ2500 கோடியை தாண்டுகிறது. இதில் மும்பையில் மட்டும் ரூ1000 கோடிக்கு மேல் அபராத தொகை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த அபராத தொகையை வசூல் செய்ய அம்மாநில அரசு மன்னிப்பு திட்டம் என்ற ஒரு திட்டத்தை கொண்டு வருகிறது. அதன்படி வாகன ஒட்டிகள் தங்கள் வாகனங்களுக்கான அபராத தொகையை முழுமையாக செலுத்தாமல் குறிப்பிட்ட தொகையை செலுத்தினாலே அந்த அபராதம் முழுவதுமாக நீக்க திட்டமிட்டுள்ளது.

75 2500 1000 1817 817 1000 3 75 1000 250 50

மஹாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் மட்டும் ரூ1817 கோடிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ817 கோடி மட்டும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரூ1000 கோடி அபராத தொகை நிலுவையிலேயே இருக்கிறது. இந்த தொகையை வசூலிக்கவே இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது.

இந்த திட்டத்தின்படி சிறிய ரக வாகனங்களான டூவீலர் மற்றும் 3 வீலர்களுக்கான அபராத தொகையில் 75 சதவீதத்தை குறைக்க திட்டமிட்டபட்டுள்ளது. உதாரணமாக ரூ1000அபராத தொகை இருந்தால் ரூ250 செலுத்தினாலே அந்த அபராதம் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு முறை செட்டில்மெண்ட் கட்டணமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு கழிக்கப்படுகிறது.

75 2500 1000 1817 817 1000 3 75 1000 250 50

இப்படியாக அபராத தொகையை குறைப்பது இது ஒன்று முதன் முறை அல்ல. இதற்கு முன்னர் லோக் அதாலத் மூலம் 50 சதவீதம் அபராத தொகை குறைக்கப்பட்டது. அதில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் மேலும் சலுகை வழங்கினால் அதிகம் வசூலாகும் என இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மும்பையில் மட்டும் ரூ250 கோடி வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தால் அரசுக்க தேவையில்லாத அபராத தொகை பராமரிப்பு பணி குறையும். மக்களுக்கும் இந்த திட்டத்தின் மூலம் குறைவான பணத்தில் தனது அபராதத்தை செலுத்த முடியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தற்போது பரிசீலனையில் தான் உள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எதிர்பார்ப்பின்படி இந்த திட்டம் அமலுக்கு வந்தால் முதல் நாளிலேயே பல கோடி வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மக்கள் பலர் இதை பயன்படுத்தி தங்கள் வாகனத்தின் அபராத தொகையை கழிக்க விரும்புவார்கள். இந்த திட்டத்துடன் இனி விதிக்கப்படும் அபராதங்கள் 15 நாட்களுக்குள் செலுத்தப்பட்டால் அதற்கான தனி சலுகையையும் வழங்க திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான அறிவிப்புகள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். மக்கள் பலர் இந்த திட்டத்திற்காக ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹராஷ்டிரா மாநில அரசு எடுத்துள்ள இந்த முயற்சி நிச்சயம் வரவேற்க்கதக்கது தான். மக்கள் பலர் இதை பயன்படுத்தி தங்கள் அபராத தொகயை குறைக்க முடியும். மற்ற மாநில அரசுகளும் இது போன்ற நடவடிக்கையை எடுத்தால் நிச்சயம் நிலுவையில் உள்ள தொகை வெகுவாக குறையும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 19, 2025, 18:15 [IST]
English summary
Amnesty scheme for transport fines maharashtra rs 2500 crore
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X