மோடி தொடங்கி வைத்த புதிய ரயில்கள்.. அலுங்கள்-குலுங்கலே இருக்காதாம்! ரோல்ஸ் ராய்ஸ் காருல போற ஃபீல் இருக்குமாம்!

நாட்டிற்காக இரண்டு புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சமர்பிக்கப்பட்டு இருக்கின்றன. பிரதமர் அவர்களால் இந்த இரு ரயில்களும் இன்று பயன்பாட்டிற்குத் தொடங்கி வைக்கப்பட்டன. மிக சிறந்த ரயில் போக்குவரத்து அனுபவத்தை வழங்கும் நோக்கில் தயார் செய்யப்பட்டதே அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகும்.

பிரதமர் மோடி கொடி அசைக்க உபி, அயோத்யா தாம் ரயில் நிலையத்தில் அந்த ரயில் அதன் முதல் பயணத்தைத் தொடங்கி இருக்கின்றது. தர்பாங்கா - அயோத்யா - ஆனந்த் விஹார் இடையே இந்த ரயில் இயங்கும். ஆனால், இந்த பயணம் நாளை முதலே தொடங்கப்பட இருக்கின்றது.

Modi amrit bharat express

ஒட்டுமொத்த இந்த ரயிலில் 1,834 பேர் வரை பயணிக்க முடியும். மேலும், வாரத்தில் இரண்டு முறை இந்த ரயில் சேவை இயக்கப்படும் என ரயில்வேத்துறை அறிவித்து இருக்கின்றது. இந்த ரயிலை அதி நவீன வசதிகள் தாங்கியதாக இந்தியன் ரயில்வேஸ் தயார் செய்திருக்கின்றது.

ஆகையால், இதில் பயணிக்கும் போது முற்றிலும் தனித்துவமான பயண அனுபவம் கிடைக்கும். மேலும், சிசிடிவி கேமிரா, இதைக் கண்கானிக்கும் அறை மற்றும் பாதுகாவலர்கள் உள்ளிட்ட வசதியும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் செய்துக் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர மற்றுமொரு மிக முக்கியமான அம்சமாக இரைச்சல் மற்றும் அலுங்கல் - குலுங்கள்களை தவிர்க்கும் திறனும் இந்த ரயிலில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Amrit bharat express

தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஒரு சில ரயில்கள் ஏற்கனவே மிகவும் சீராக இயங்கும் வசதிக் கொண்டவையாகக் காட்சியளிக்கின்றன. அவற்றையே இந்த ரயில் சீராக இயங்குவதில் மிஞ்சிவிடும் என கூறப்படுகின்றது. இந்த வசதிக்காக ரயிலில் புஷ்-புல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பதாக இந்தியன் ரயில்வேஸ் தெரிவித்து இருக்கின்றது.

இத்தகைய தரமான அம்சங்களைத் தாங்கிய ரயில்களை மோடி தற்போது நாட்டின் பயன்பாட்டிற்காக அர்பணித்துள்ளார். ஒன்று ஆனந்த் விஹார் - தார்பங்கா - அயோத்யா இடையேயும், மறஅறொன்று மால்டா மற்றும் பெங்களூரு இடையேயும் இயங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ரயிலின் ஸ்மூத்தான இயக்கத்திற்காக செமி-கூப்லர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Amrit bharat express tail coach

இதுவே ரயிலை அலுங்கள், குலுங்கல்கள் மற்றும் இரைச்சலின்றி பயணிக்க உதவியாக இருக்கின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் இரண்டு கோச்சுகள் இணையும் இடத்தில் இந்த கூப்லர் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இது ரயில் நிறுத்தம் மற்றும் இயக்கத்தின்போது இரு பெட்டிகள் வேகமாக மோதிக் கொள்வது அல்லது உராய்வதை ஸ்மூத்தாக மாற்றும்.

இதன் வாயிலாகவே, மிகப் பெரிய அளவில் ஜெர்க் மற்றும் சத்தம் குறைக்கப்படுகின்றது. அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் டாப் ஸ்பீடு மணிக்கு 130 கிமீ ஆகும். இதில், புஷ்-புல் டெக்னாலஜியும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது, முன்னால் இருக்கும் எஞ்சினை இழுக்கவும், பின்னால் உள்ள எஞ்சினை தள்ளவும் செய்யவும்.

ஆகையால், இன்னும் விரைவான வேகத்தில் அம்ரிஜ் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலால் பயணிக்க முடியும். குறிப்பாக, வளைவுகள், உயரமான மலைப் பாதைகள் மற்றும் பிரிட்ஜ் போன்றவற்றில் தடையின்றி இயங்க இந்த புஷ்-புல் தொழில்நுட்பம் உதவியாக இருக்கும். இத்தகைய ரயிலை இரு ரூட்களில் தொடங்கி வைத்திருக்கின்றார் பிரதமர் மோடி.

இந்த ரயில் விரைவில் நாட்டின் இன்னும் பல பகுதிகளில் தற்போதைய வந்தே பாரத் ரயிலைப் போல பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் 16 ஸ்லீப்பர் கோச், 4 அன்-ரிசர்வ்டு கோச், 2 கோச்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு என்றும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இத்துடன், பயணிகள் சிரமமின்றி பயணிக்க லக்கேஜ் ரேக்குகள், மடித்து வைத்துக் கொள்ளும் வசதிக் கொணட் டேபிள் ஸ்லேப், சார்ஜிங் போர்ட், தனி மின் விளக்கு உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால், இந்த ரயிலில் பயணிக்கும்போது தனித்துவான அனுபவம் கிடைக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் ரயிலைவிட பலமடங்கு மேம்பட்ட ரயிலாக அம்ரித் பாரத் ரயில் இருக்கின்றது. இதில் பயணிக்கும்போது உள்பக்கத்தில் பெரிய அளவில் இரைச்சல் இருக்காது என கூறப்படுகின்றது. மேலும், ரயிலுக்கே உரித்தான குலுங்கி - குலுங்கி பயணிக்கும் அந்த தன்மையும் இருக்காது என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், விலையுயர்ந்த கார்களில் பயணிக்கும்போது கிடைக்கக் கூடிய பயண அனுபவமே இந்த ரயிலில் கிடைக்கும் என தெரிகின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, December 31, 2023, 5:00 [IST]
English summary
Amrit bharat express rail key features details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X