சாலையை செப்பனிடகோரி நூதன போராட்டம்... பெங்களூரில் பரபரப்பு

சாலைகளில் இருக்கும் குண்டு குழிகள், பள்ளங்கள் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் மரண குழிகளாகவே உள்ளன. சில வேளைகளில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால், சாலைகள் செப்பனிடப்படாமல் அதிக விபத்துக்கள் நடக்க காரணமாக இருக்கின்றன. பொதுமக்களின் போராட்டங்கள் கூட வீணாகிவிடுவதுண்டு.

இந்தநிலையில், பெங்களூரை சேர்ந்த ஒரு சமூக நல அமைப்பு ஒன்று செப்பனிடாத சாலை குறித்து மாநகராட்சியின் கவனத்தை ஈர்க்க ஒரு நூதன போராட்டத்தை நடத்தி காட்டியுள்ளது.

வித்தியாசமான முயற்சி

வித்தியாசமான முயற்சி

பெங்களூரை சேர்ந்த நம்ம பெங்களூரை பவுண்டேசன் என்ற லாப நோக்கு இல்லாத சமூக சேவை அமைப்புதான் ஒரு நூதன போராட்டத்தை நடத்தியுள்ளது.

பாம்புக்கு பயப்படுமா மாநகராட்சி...

பாம்புக்கு பயப்படுமா மாநகராட்சி...

பெங்களூர், யஷ்வந்த்பூரில் நீண்ட நாட்களாக செப்பனிடாமல் இருந்த சாலை பள்ளத்தில் ராட்சத பாம்பு பொம்மையை வைத்துவிட்டனர்.

பரபரப்பான ஞாயிறு...

பரபரப்பான ஞாயிறு...

அந்த சாலையில் நேற்று வைக்கப்பட்ட அந்த பாம்பு பொம்மையை அவ்வழியே செல்வோர் பார்த்து மிரண்டு போனதுடன், அதுபற்றி ஆர்வமாக கேட்டு தெரிந்துகொண்டனர். அத்துடன், அந்த பாம்பு பொம்மையின் நோக்கம் குறித்து சமூக வலைதளங்களிலும் பரிமாறிக்கொண்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

நோக்கம்

நோக்கம்

இந்த நூதன போராட்டம் சிலருக்கு சிரிப்பாகவும், விளையாட்டாகவும், சிலருக்கு படைப்பாகவும் தோன்றலாம். ஆனால், இதன்மூலம், நாங்கள் ஒரு ஆழமான கருத்தை உணர்த்த முயற்சித்திருக்கிறோம்," என்று அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

முதல்முறையல்ல...

முதல்முறையல்ல...

பெங்களூருக்கு இது முதல்முறையல்ல. ஏற்கனவே, ஒரு இளைஞர் முதலை பொம்மையை வைத்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். தற்போதைய போராட்டத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் செவி சாய்த்து, உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் மட்டுமல்ல, சென்னையிலும் இதுபோன்ற பள்ளங்கள் உடைய சாலைகளில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன. அதற்கு போராட்டமும் நடத்தப்படுகிறது. இனி மாநகராட்சி செவி சாய்க்காவிடில், இதுபோன்ற பொம்மைகளை சென்னை சாலைகளிலும் பார்க்கலாம்.

Photo Source: The news minute

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
A Bangalore based NGO organisation[ Namma Bengaluru Foundation], has created this scary anaconda and thereby installed it in one of the water logged potholes in yeswanthpur on Sunday. The NGO officials are believing this initiative to get attention of BBMP authorities.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X