பொலிரோ எஸ்யூவி வாகனத்தால் மட்டுமே இது சாத்தியம்!! ஆனந்த் மஹிந்திராவை மிரள வைத்த வீடியோ!

மஹிந்திரா வாகனத்தின் திறனை வெளிக்காட்டும் விதத்தில் பொலிரோ கார் ஒன்று சக்கரங்களை மூழ்கடிக்கும் அளவிலான மழைநீரில் எளிதாக கடந்து வந்துள்ளது. ஆனந்த் மஹிந்திரா பாராட்டி வெளியிட்டுள்ள இது தொடர்பான வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பொலிரோ எஸ்யூவி வாகனத்தால் மட்டுமே இது சாத்தியம்!! ஆனந்த் மஹிந்திராவை மிரள வைத்த வீடியோ!

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் மஹிந்திராவின் தரமான கார்களுள் பொலிரோவும் ஒன்றாகும். குறிப்பாக, எத்தகைய சாலையிலும் இயங்கும் இதன் திறன் பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பொலிரோ எஸ்யூவி வாகனத்தால் மட்டுமே இது சாத்தியம்!! ஆனந்த் மஹிந்திராவை மிரள வைத்த வீடியோ!

இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் தற்போது இந்த வீடியோ வெளியாகியுள்ளது. மஹிந்திரா க்ரூப் சேர்மன் ஆனந்த் மஹிந்திராவால் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், பொனெட் அளவிற்கு மழைநீர் சூழ்ந்த சாலையில் சர்வ சாதாரணமாக மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி கார் ஒன்று செல்வதை பார்க்கலாம்.

குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட்டில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத்தில் சில நகரங்களில் கனமழை வெளுத்து வாங்குவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் கூறி வருகின்றன. இதில் ராஜ்கோட்டும் ஒன்றாகும். ராஜ்கோட்டில் கனமழையால் பல சாலைகள் முற்றிலுமாக போக்குவரத்திற்கு பயன்படுத்த இயலாத அளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது.

பொலிரோ எஸ்யூவி வாகனத்தால் மட்டுமே இது சாத்தியம்!! ஆனந்த் மஹிந்திராவை மிரள வைத்த வீடியோ!

இந்த குறிப்பிட்ட சாலையிலும் இந்த குறிப்பிட்ட பொலிரோ காரை தவிர்த்து வேறெந்த வாகனமும் இயங்கவில்லை. இதனால் இந்த பொலிரோவை மட்டும் தனியாக, தெளிவாக வீடியோவில் பார்க்க முடிகிறது. இந்த வீடியோவை பகிர்ந்து கொண்ட ஆனந்த் மஹிந்திரா அவரது டுவிட்டர் பதிவில், உண்மையாகவா? சமீபத்திய மழையின் போது? நான் கூட மிகவும் ஆச்சிரியப்படுகிறேன் என கூறியுள்ளார்.

பொலிரோ எஸ்யூவி வாகனத்தால் மட்டுமே இது சாத்தியம்!! ஆனந்த் மஹிந்திராவை மிரள வைத்த வீடியோ!

ஏற்கனவே கூறியதுதான், மஹிந்திராவின் மிக சிறந்த தயாரிப்புகளின் லிஸ்ட்டை எடுத்து பார்த்தாமோயேனால் அதில் நிச்சயம் பொலிரோவின் பெயர் இருக்கும். இந்தியாவில் எஸ்யூவி கார்கள் மிகவும் மாடர்ன் தரத்திற்கு மாற்றப்பட்டுவிட்டன. இருப்பினும் பல ஆண்டுகளாக பெரிய அளவில் எந்தவொரு அப்கிரேட்டையும் பெறாமல் வாடிக்கையாளர்களின் நம்பகமான எஸ்யூவி மாடாலாக பொலிரோ விளங்கி வருகிறது.

பொலிரோ எஸ்யூவி வாகனத்தால் மட்டுமே இது சாத்தியம்!! ஆனந்த் மஹிந்திராவை மிரள வைத்த வீடியோ!

குறிப்பாக இந்த மஹிந்திரா வாகனத்தை குறு நகரங்களில் இருப்பவர்களும், கிராமப்புறங்களில் இருப்பவர்களும் தான் அதிகளவில் வாங்குகின்றனர். ஏனெனில் கரடுமுரடான சாலைகளை கொண்ட கிராமப்புறங்களுக்கு பொலிரோ போன்ற வாகனங்கள் தான் மிக சரியான தேர்வாக இருக்கின்றன.

பொலிரோ எஸ்யூவி வாகனத்தால் மட்டுமே இது சாத்தியம்!! ஆனந்த் மஹிந்திராவை மிரள வைத்த வீடியோ!

இதானாலேயே தைரியமாக பொலிரோவின் பெயர் உடன் பொலிரோ நியோ என்ற புதிய வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. ஆனால் பொலிரோ நியோ உண்மையில், முன்பு விற்பனையில் இருந்த டியூவி300 மாடலின் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வெர்சனாகும்.

பொலிரோ எஸ்யூவி வாகனத்தால் மட்டுமே இது சாத்தியம்!! ஆனந்த் மஹிந்திராவை மிரள வைத்த வீடியோ!

அதாவது டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் மாடலை தான் பொலிரோ நியோ என்கிற பெயரில் மஹிந்திரா கொண்டுவந்துள்ளது. ஆனால் ட்ரைவிங் திறன்கள் அனைத்தும் பொலிரோவிற்கு இணக்கமானதாக உள்ளது. இதில் இருந்து இந்திய சந்தையில் பொலிரோ பெயர்பலகையை இன்னும் சில வருடங்களுக்கு உயிர்ப்புடன் வைத்திருக்க மஹிந்திரா விரும்புவது தெரிகிறது.

பொலிரோ எஸ்யூவி வாகனத்தால் மட்டுமே இது சாத்தியம்!! ஆனந்த் மஹிந்திராவை மிரள வைத்த வீடியோ!

மஹிந்திரா பொலிரோவில் பிஎஸ்6-க்கு இணக்கமான 1.5 லிட்டர், எம்ஹாவ்க் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படுகின்ற இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 75 பிஎச்பி மற்றும் 210 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

பொலிரோ எஸ்யூவி வாகனத்தால் மட்டுமே இது சாத்தியம்!! ஆனந்த் மஹிந்திராவை மிரள வைத்த வீடியோ!

தார் வாகனத்தை போன்று பொலிரோ முழுக்க முழுக்க ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ற வாகனம் கிடையாது. இருப்பினும் பொலிரோவை பெரிய அளவில் எந்த பிரச்சனையும் இன்றி அட்வென்ச்சர் பயணங்களுக்கு கொண்டு சென்று வரலாம். இதற்கு, இதன் பின்சக்கர-ட்ரைவ் அமைப்பிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

பொலிரோ எஸ்யூவி வாகனத்தால் மட்டுமே இது சாத்தியம்!! ஆனந்த் மஹிந்திராவை மிரள வைத்த வீடியோ!

2000ஆம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட 21 வருடங்களாக விற்பனையில் இருக்கும் பொலிரோ தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் நம்பர்-01 எஸ்யூவி மாடலாக விளங்கியது. நீடித்த உழைப்பு, வலுவான கட்டமைப்பு இவை தான் இந்த எஸ்யூவி வாகனத்தின் அடையாளங்களாகும்.

பொலிரோ எஸ்யூவி வாகனத்தால் மட்டுமே இது சாத்தியம்!! ஆனந்த் மஹிந்திராவை மிரள வைத்த வீடியோ!

இந்திய சந்தையில் 2 விதமான ட்ரிம் நிலைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.39 லட்சத்தில் இருந்து ரூ.9.63 லட்சம் வரையில் உள்ளன. விற்பனையில் இதற்கு நேரடி போட்டி மாடல்கள் எதுவும் இந்தியாவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Anand Mahindra ‘amazed’ at Bolero's water-wading ability on flooded streets.
Story first published: Tuesday, September 14, 2021, 23:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X