காலா காருக்கு இவ்வளவு மவுசா? கெத்து காட்டும் வேங்கையன் மகன்...!

நடிகர் ரஜினி காலா படத்தில் பயன்படுத்திய மஹேந்திர தார் காரை ஆனந்த் மஹேந்திரா வாங்கியுள்ளார். அதை தனது மியூசியத்தில் வைத்து பராமரிக்க அவர் முடிவு செய்துள்ளார்.

By Balasubramanian

நடிகர் ரஜினி காலா படத்தில் பயன்படுத்திய மஹேந்திர தார் காரை ஆனந்த் மஹேந்திரா வாங்கியுள்ளார். அதை தனது மியூசியத்தில் வைத்து பராமரிக்க அவர் முடிவு செய்துள்ளார்.

காலா காருக்கு இவ்வளவு மவுசா? கெத்து காட்டும் வேகையன் மகன்...!

மஹேந்திரா அண்ட் மஹேந்திர நிறுவனத்தின் சேர்மன் ஆனந்த் மஹேந்திரா, மஹேந்திரா நிறுவனம் தயாரித்த வாகனங்களில் முக்கியத்துவம் அல்லது வித்தியாசமான வாகனங்களை மீண்டும் அவரே வாங்கி மஹேந்திரா மியூசியத்தில் வைத்து பராமரித்து வருகிறார்.

காலா காருக்கு இவ்வளவு மவுசா? கெத்து காட்டும் வேகையன் மகன்...!

இதற்கு முன்னர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவை மஹேந்திரா ஸ்கார்ப்பியோ கார் போல மாடிஃபிகேஷன் செய்துள்ளார். அதை பார்த்த ஆனந்த் மஹேந்திர அந்த ஆட்டோவை உடனடியாக வாங்கி தனது மியூசியத்தில் வைத்து விட்டார். அதற்கு பதிலாக அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு புதிய ஆட்டோ ஒன்றை வாங்கி கொடுத்தார்.

காலா காருக்கு இவ்வளவு மவுசா? கெத்து காட்டும் வேகையன் மகன்...!

இந்நிலையில் நடிகர் ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் "காலா" திரைப்படத்தின் போஸ்டர் கடந்தாண்டு வெளியானது. அதில் ரஜினி மஹேந்திரா நிறுவனத்தின் தார் காரின் பானட்டில் ரஜினி அமர்ந்திருப்பது போல போஸ்டர் டிசைன் செய்யப்பட்டிருந்தது.

காலா காருக்கு இவ்வளவு மவுசா? கெத்து காட்டும் வேகையன் மகன்...!

இந்த போஸ்டர் இந்தியா முழுவதும் வைரலாக பரவியது. ரஜினி ரசிகர்கள் எல்லாம் இந்த படத்தை அவர்கள் சமூக வலைதளங்களில்பதிவேற்ற துவங்கினர். இதையடுத்து ஆனந்த் மஹேந்திரா காலா படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் ரஜினியின் மருமகனுமான நடிகர் தனுஷிடம் கோரினார்.

காலா காருக்கு இவ்வளவு மவுசா? கெத்து காட்டும் வேகையன் மகன்...!

இதையடுத்து தனுஷ் பட வேலைகள் எல்லாம் முடிந்தவுடன் இந்த காரை இலவசமாகவே அவருக்கு தருவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் காலா திரைப்படம் நேற்று பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே உலகம் முழுவதும் ரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் வெளியானது.

காலா காருக்கு இவ்வளவு மவுசா? கெத்து காட்டும் வேகையன் மகன்...!

இதையடுத்து தனுஷ் முன்னதே கூறியது போல இந்த காரை சென்னையில் உள்ள மஹேந்திரா ரிசர்ச் வேலியில் ஊழியர்களிடம் இந்த காரை ஒப்படைத்துள்ளார். இந்த தகவல் ஆனந்த் மஹேந்திராவிற்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அங்குள்ள ஊழியர்கள் சிலரை காலா பாணியில் அந்த காரில் அமர்ந்து போட்டோ எடுத்து அனுப்பும் படி கூறியுள்ளார்.

அவர்கள் அனுப்பிய போட்டோவை பார்த்த ஆனந்த் மஹேந்திர அதை ஒரு ஸ்லைடு ஷோவாக தயார் செய்து காலாவில் பயன்படுத்திய கார் முன்பு சொன்னது போல தற்போது எங்கள் சென்னை ரிசர்ச் வேலிக்கு வந்து விட்டது அதில் ஊழியர்கள் காலா ஸ்டைலில் போட்டோ எடுத்து கொண்டனர் என ஆனந்த் மஹேந்திரா டுவிட்டரில் பதிவிட்டுள்ளளார்.

காலா காருக்கு இவ்வளவு மவுசா? கெத்து காட்டும் வேகையன் மகன்...!

இந்த மஹேந்திரா தார் கார் தற்போது விற்பனையாகி வரும் கார் தான் என்றாலும் ரஜினி காலா படத்தில் பயன்படுத்திய கார் என்ற ஒரே காரணத்தால் இந்த காரை ஆனந்த் மஹேந்திரா வாங்கி தனது மியூசியத்தில் வைத்துள்ளார்.

காலா காருக்கு இவ்வளவு மவுசா? கெத்து காட்டும் வேகையன் மகன்...!

இந்த கார் ஆப் ரோடு பயன்பாட்டிற்கு மிகவும் புகழ்பெற்றது. இந்த காரிற்கான அதிக மாடிஃபிகேஷன் ஆப்ஷன்கள் மார்க்கெட்டில் இருக்கிறது. இந்த காரை வாங்கிய பலர் அதை மாடிஃபிகேஷன் செய்து தான் பயன்படுத்தி வருகின்றனர்.

காலா காருக்கு இவ்வளவு மவுசா? கெத்து காட்டும் வேகையன் மகன்...!

இந்த கார் 3 விதமான இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. இதன் விலை ரூ 6.27 லட்சத்தில் இருந்து ரூ 9 லட்சம் வரை விற்பனையாகிறது. இந்த காரின் விற்பனைக்கு முக்கிய காரணம் இந்த பழைய ஜீப் மாடல் லுக்கில் இருப்பதால் தான்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Article Published On: Friday, June 8, 2018, 11:39 [IST]
English summary
Anand Mahindra buys the Mahindra Thar used by Rajnikanth in Kaala. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+