கிரிக்கெட் வீரரின் தந்தைக்கு இந்த கார் பரிசா! சர்ப்ராஸ் கானுக்கு சர்ப்பிரைஸ் கிஃப்ட்!
கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கானின் தந்தை நெளசத்கானுக்கு மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, மஹிந்திரா தார் காரை பரிசாக வழங்க விரும்புவதாக பொதுவெளியில் அறிவித்துள்ளார். சர்பராஸ் கான் தனது முதல் அரை சதத்தை அடித்த நிலையில் அவரது தந்தை குறித்த வீடியோ வைரலானது. இதையடுத்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது இந்த தொடரில் முதன்முதலாக சப்ராஸ்கான் என்ற வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது இவர் நேற்று இந்திய அணிக்காக களமிறங்கும் போது தனது முதல் அரை சதத்தை நிறைவு செய்தார். ராஜ்கோட் பகுதியில் உள்ள நிரஞ்சன் மைதானத்தில் இந்த போட்டி நடந்தது.

இந்த போட்டியின் போது சப்ராஸ்கானுக்கு முதல் முதலாக அணியில் வாய்ப்பு வழங்கியதை அணில் கும்ப்ளே அவருக்கு தொப்பி அணிவித்து வாழ்த்து தெரிவித்த வீடியோ மற்றும் இது குறித்து சப்ராஸ்கானின் தந்தை நெளஷத்கான் தனது மகன் குறித்து உருக்கமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் சர்ப்ராஸ்கானின் தந்தை நெளஷத்கான் குறித்து தற்போது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசி வரும் நிலையில் ஆனந்த் மஹிந்திரா இந்த வீடியோவை பகிர்ந்து ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தன் மகன் வெற்றி பெறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் தந்தையே போல ஒரு சிறந்த காட்சி இருக்க முடியாது.

இவ்வாறு ஒரு நல்ல ஊக்கம் அளிக்கும் பெற்றோராக இருந்ததற்காக நெளஷத் கானுக்கு நாங்கள் மஹிந்திரா தார் காரை பரிசாக வழங்க விரும்புகிறோம். இதை அவர் மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இந்த ட்வீட் தற்போது ட்விட்டரில் பலரது கவனத்தை பெற்று வருகிறது.
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இதை பகிர்ந்து வருகின்றனர், வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளார். தற்போது நெளஷத் கான் இந்த வரிசை ஏற்பாரா இதை பரிசை எப்பொழுது வழங்கப்படும் என்ற பேச்சு மக்கள் மத்தியில் பெரிதாக பேசப்படுகிறது.

மஹிந்திரா நிறுவனம் கார் காரை ஒரு ஆஃப் ரோடு எஸ்யூவிராக விற்பனை செய்து வருகிறது. இந்த கார் ரூபாய் 13.31 லட்சம் முதல் 20.48 லட்சம் என்ற விலையில் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்களுடன் இந்த கார் விற்பனையாகிறது. இது மட்டுமல்லாமல் மொத்தம் 14 விதமான வேரியன்டுகள் இந்த காதில் உள்ளன.
இந்த காரின் இன்ஜினை பொறுத்தவரை பெட்ரோல் இன்ஜின் கொண்ட காரில் 1997 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் வெர்ஷன் காரில் 2,174 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு விதமான கியர் ஆப்ஷன்களுடனும் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் 4X4 டிரைவ் கொண்ட காராக இருக்கிறது. இதில் டூவீலர் ஆப்ஷனும் இருக்கிறது.
இந்த கார் பாதுகாப்பு சோதனை என்பது 4 ஸ்டார்களை பெற்ற காராக இருக்கிறது இந்த காரில் மொத்தம் நான்கு பேர் வரை பயணிக்க முடியும். இந்த காரின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் என்றால் இந்த காரின் ரோடு பிரசென்ஸ் தான். இது சிறப்பாக லுக்கில் இருக்கும்.
சாலையில் இந்த கார் செல்லும்போது நிச்சயம் சாலையில் உள்ள அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் சிறப்பான வடிவமைப்பு கொண்ட காராக இந்த கார் இருக்கிறது. அதே நேரத்தில் பெர்ஃபார்மன்ஸிலும் சிறப்பாக இருக்கும் வகையில் இந்த காரின் பவர் மற்றும் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் இல்லாத அம்சம் என்றால் இந்த காரில் ரியல் வியூ கேமரா இல்லை வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் ஆகிய அம்சங்கள் இல்லை. மற்றபடி இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் இதன் லுக் ஸ்டைல் எல்லாம் மற்ற கார்களை போலவே சிறப்பாக இருக்கிறது. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றவர் தான் இது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மஹிந்திரா தார் காருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், ஆனந்த் மஹிந்திரா தற்போது கிரிக்கெட் வீரர் சர்பாஸ் கானின் தந்தை நௌஷத்கானை பாராட்டி இந்த காரை பரிசை வழங்கியுள்ளது. பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது தற்போது இந்தியாவில் மிகப்பெரிய பேச பொருளாக மாறி உள்ளது.


Click it and Unblock the Notifications









