இதை யாருமே எதிர்பாக்கல... தமிழில் ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா... என்னனு தெரிஞ்சா அவருக்கு ரசிகரா ஆயிருவீங்க!

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தமிழில் 'ட்வீட்' செய்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இதை யாருமே எதிர்பாக்கல... தமிழில் ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா... என்னனு தெரிஞ்சா அவருக்கு ரசிகரா ஆயிருவீங்க!

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் (A.R. Rahman) இசையில், மூப்பில்லா தமிழே தாயே (Moopilla Thamizhe Thaaye) இசை ஆல்பம் வெளிவந்துள்ளது. இந்த தமிழ் கீதத்திற்கான வரிகளை கவிஞர் தாமரை (Thamarai) எழுதியுள்ளார். சைந்தவி பிரகாஷ் (Saindhavi Prakash), பூவையார் (Poovaiyar) உள்ளிட்ட பலர் மூப்பில்லா தமிழே தாயே பாடலை பாடியுள்ளனர்.

இதை யாருமே எதிர்பாக்கல... தமிழில் ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா... என்னனு தெரிஞ்சா அவருக்கு ரசிகரா ஆயிருவீங்க!

இந்த பாடல் தற்போது 'டிரெண்ட்' ஆகி வருகிறது. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் (M.K. Stalin) துபாய் சென்றிருந்தபோது, அங்குள்ள ஏ.ஆர். ரஹ்மானின் ஸ்டூடியோவிற்கு 'விசிட்' அடித்தார். அப்போது மூப்பில்லா தமிழே தாயே கீதத்தை தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்த்து ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை யாருமே எதிர்பாக்கல... தமிழில் ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா... என்னனு தெரிஞ்சா அவருக்கு ரசிகரா ஆயிருவீங்க!

இந்த சூழலில், மூப்பில்லா தமிழே தாயே பாடலை இந்தியாவின் பிரபல நபர் ஒருவர் வெகுவாக பாராட்டியுள்ளார். மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராதான் (Anand Mahindra) அந்த நபர். மூப்பில்லா தமிழே தாயே இசை ஆல்பத்தை பார்த்த ஆனந்த் மஹிந்திரா, இது தொடர்பான தனது கருத்துக்களை ட்விட்டர் மூலமாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதை யாருமே எதிர்பாக்கல... தமிழில் ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா... என்னனு தெரிஞ்சா அவருக்கு ரசிகரா ஆயிருவீங்க!

ட்விட்டரில் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஆனந்த் மஹிந்திரா கூறியிருப்பதாவது: இதில் இடம்பெற்றிருப்பது ஜாவா பைக் என்று சொல்லப்பட்டதால் இதை முதலில் பார்த்தேன். இப்போது என்னால் பார்க்காமல் இருக்க முடியாது. அருமையான இசை மற்றும் வீடியோ. இவ்வாறு ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார். அத்துடன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அவர் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இதை யாருமே எதிர்பாக்கல... தமிழில் ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா... என்னனு தெரிஞ்சா அவருக்கு ரசிகரா ஆயிருவீங்க!

மேலும் மூப்பில்லா தமிழே தாயே பாடலை பார்ப்பதற்கான லிங்க்கையும், ஆனந்த் மஹிந்திரா தனது பதிவில் இணைத்துள்ளார். இதில் மற்றொரு விசேஷம் என்னவென்றால், பெரும்பாலும் ஆனந்த் மஹிந்திரா ஆங்கிலத்தில்தான் பதிவிடுவார். ஆனால் இம்முறை தமிழிலேயே அவர் பதிவிட்டுள்ளார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதை யாருமே எதிர்பாக்கல... தமிழில் ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா... என்னனு தெரிஞ்சா அவருக்கு ரசிகரா ஆயிருவீங்க!

ஆனந்த் மஹிந்திரா தமிழில் பதிவிட்டிருப்பது பெருமிதம் அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டிருப்பதை போல், மூப்பில்லா தமிழே தாயே பாடலில், ஜாவா பைக் காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம்தான் ஜாவா பைக்குகளை விற்பனை செய்து வருகிறது.

இதை யாருமே எதிர்பாக்கல... தமிழில் ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா... என்னனு தெரிஞ்சா அவருக்கு ரசிகரா ஆயிருவீங்க!

இந்த கிளாசிக் லெஜெண்ட் (Classic Legends) நிறுவனமானது, மஹிந்திரா குழுமத்தின் (Mahindra Group) ஓர் அங்கம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். தற்போதைய நிலையில் ஜாவா பிராண்டில், ஜாவா (Jawa), ஜாவா 42 (Jawa 42) மற்றும் ஜாவா பெராக் (Jawa Perak) உள்ளிட்ட பைக்குகள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதை யாருமே எதிர்பாக்கல... தமிழில் ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா... என்னனு தெரிஞ்சா அவருக்கு ரசிகரா ஆயிருவீங்க!

தற்போது ஏ.ஆர். ரஹ்மானுக்கு பாராட்டு தெரிவித்திருக்கும் நிலையில், இதற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஆனந்த் மஹிந்திரா நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வெகு சமீபத்தில்தான் இந்த நிகழ்வு நடைபெற்றது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற பேரணியில் மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யூவி காரை, பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தினார்.

இதை யாருமே எதிர்பாக்கல... தமிழில் ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா... என்னனு தெரிஞ்சா அவருக்கு ரசிகரா ஆயிருவீங்க!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தங்கள் நிறுவனத்தின் வாகனத்தை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தியதால் மகிழ்ச்சியடைந்த ஆனந்த் மஹிந்திரா உடனடியாக அவருக்கு நன்றி தெரிவித்தார். இவ்வாறு ட்விட்டரில் ஆனந்த் மஹிந்திரா எப்போதுமே மிகவும் 'ஆக்டிவ்' ஆக இயங்கி கொண்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை யாருமே எதிர்பாக்கல... தமிழில் ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா... என்னனு தெரிஞ்சா அவருக்கு ரசிகரா ஆயிருவீங்க!

தன்னை கவரும் விஷயங்களை எல்லாம் அவர் பகிர்ந்து கொண்டே இருப்பார். ஆனந்த் மஹிந்திரா மூலமாக பலரது கண்டுபிடிப்புகள் வெளி உலகத்திற்கு பெரிய அளவில் தெரியவந்துள்ளன என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். அவரது மஹிந்திரா நிறுவனம் வெகு விரைவில் புதிய தலைமுறை ஸ்கார்பியோ எஸ்யூவி ரக காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, March 28, 2022, 12:03 [IST]
English summary
Anand mahindra impressed by a r rahman s moopilla thamizhe thaaye tamil anthem
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+