அவ்வளவு பெரிய தொழிலதிபர்... டுவிட்டரில் பதிவிட்ட ஸ்க்ரீன்ஷாட்!! ஆனந்த் மஹிந்திரா கிட்ஸை புடுச்சிட்டாரு

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவ்வாக இருக்கக்கூடிய நபர். குறிப்பாக, உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க்கை போல் டுவிட்டரை பயன்படுத்த விரும்பக்கூடியவர். இதனாலேயே டுவிட்டரில் 1 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டிருப்பவர்.

1 கோடி பின்தொடர்பவர்கள் என்பது இந்தியா போன்ற நாட்டில் ஆனந்த் மஹிந்திரா போன்ற தொழிலதிபர்களுக்கு சாதாரணமான விஷயம் தான் என்றாலும், ஆனந்த் மஹிந்திரா கடந்த பல வருடங்களாக டுவிட்டரில் ட்விட்களை பதிவிட்டு வருகிறார். இந்த வகையில், கடந்த 2016ஆம் ஆண்டில் தான் பதிவிட்ட ட்விட்டை சமீபத்தில் மீண்டும் ஆனந்த் மஹிந்திரா நினைவுக்கூர்ந்துள்ளார்.

anand mahindra met 8 year old girl

2016ஆம் ஆண்டில் கௌரிஷ் லாட் என்பவர் ஆனந்த் மஹிந்திராவையும், மஹிந்திரா எக்ஸ்யூவி500 காருக்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கையும் மென்ஷன் செய்து ஓர் ட்விட் பதிவிட்டு இருந்தார். கௌரிஷ் லாட்டின் அந்த டுவிட்டர் பதிவில், அவரது மகன் மற்றும் மகள் மஹிந்திரா எக்ஸ்யூவி500 காருக்குள் அமர்ந்திருக்கும் படம் பதிவிடப்பட்டு இருந்தது. இதில் பலரை வசீகரித்தது என்னவென்றால், கௌரிஷ் லாடின் 1.5 வயது மகள் அந்த புகைப்படத்தில் காரின் ஸ்டேரிங் சக்கரத்தை பிடித்தப்படி இருந்தார்.

தனது மகளுக்கு கார் ஓட்ட இப்போவே ஆசை வந்துவிட்டது என்பதுபோல் கௌரிஷ் லாட் அப்போது அந்த டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருந்தார். இதனை கண்டு மனம் உருகிய ஆனந்த் மஹிந்திரா அப்போதே இதுகுறித்த தனது கருத்துகளை பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், 2016இல் பதிவிட்ட இந்த டுவிட்டர் பதிவை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து மீண்டும் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவின் இந்த டுவிட்டர் பதிவில் ஸ்க்ரீன்ஷாட் படம் மட்டுமின்றி, வேறொரு புகைப்படமும் உள்ளது. அப்போது 1.5 வயதுடன் இருந்த அந்த குழந்தை, தற்போது 8.5 வயது சிறுமியாக ஆனந்த் மஹிந்திரா உடன் நிற்கும் புகைப்படம் தான் அதுவாகும். இந்த டுவிட்டர் பதிவில் ஆனந்த் மஹிந்திரா கூறியிருப்பதாவது, "நேற்று (ஜூன் 10) மாலை, இந்த அழகான சிறுமி ரியா என்னிடம் வந்து, 7 வருடங்களுக்கு முன், அவளுக்கு ஒரு வயதாக இருந்தபோது நான் அவளுடைய படத்தை ட்வீட் செய்ததை எனக்கு நினைவூட்டினாள்!

நன்றி கௌரிஷ் அந்த ட்வீட்டைப் பகிர்ந்ததற்காக. அந்த கவுண்டவுன் தொடர்கிறது. எங்கள் கார்களில் ஒன்றை ஓட்ட அவள் வரும் வரை நானும் காத்திருக்க முடியாது. பெரும்பாலும் அவள் வாங்குவது ஒரு இவி ஆக இருக்கும்!" என்பதாகும். இந்த பதிவில், ஆனந்த் மஹிந்திரா அவள் என குறிப்பிட்டு இருப்பது அந்த சிறுமியை ஆகும். கவுண்டன் என்பதற்கான அர்த்தம் என்னவென்றால், 2016இல் கௌரிஷ் தனது டுவிட்டர் பதிவில் இவள் ஓர் காரை ஓட்ட இன்னும் 16.5 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

இதை வைத்தே காரின் ஸ்டேரிங்கை பிடித்திருக்கும் குழந்தையின் வயது 1.5 வருடங்கள் என்ற முடிவுக்கே நம்மால் வர முடிந்தது. தற்போது இந்த சிறுமிக்கு 8.5 வயதாகிவிட்டாலும் முறையாக ஓர் கார் ஒன்றை இயக்க இன்னும் இவர் 9.5 வருடங்கள் காத்திருக்க வேண்டும். இதனை மனதில் வைத்தே, "கவுண்டன் தொடர்கிறது" என ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மஹிந்திரா நிறுவனம் இன்னும் நீண்ட காலத்திற்கு செயல்பாட்டில் இருக்கும் என்பதை மறைமுகமாக ஆனந்த் மஹிந்திரா இந்த டுவிட்டர் பதிவின் மூலம் கூறியுள்ளதாகவே பார்க்கிறோம். முக்கியமாக, மற்ற கார் நிறுவனங்களை போல வரும் காலத்தில் மஹிந்திராவும் எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் ஈடுப்படும் என்பதையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 15, 2023, 21:09 [IST]
English summary
Anand mahindra met 8 year old girl after he tweeted about her 7 years ago
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+