ரூ.700க்கு இவ்வளவு பெரிய வாகனத்தை கேட்ட சிறுவன்!! மஹிந்திரா தலைவர் சொன்ன பதிலை யாரும் எதிர்பார்க்கல!
ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) டுவிட்டரில் ஒரு சிறுவன் எழுப்பிய கேள்விக்கு, அவனது ஸ்டைலிலேயே பதிலளித்துள்ளார். இந்த பதில் நெட்டிசன்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இணையத்தில் வைரலாகும் அளவிற்கு, அப்படி என்ன கேள்வியை அந்த சிறுவன் எழுப்பினான்? என்பதை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
டுவிட்டரில் பெரும்பாலான நேரங்களில் ஆக்டிவ்வாக இருக்கக்கூடிய தொழிலதிபர் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மாஹிந்திரா ஆவார். இதன்மூலம், இணையத்தில் டிரெண்டாகும் விஷயங்களை ஆனந்த் மஹிந்திரா உடனுக்குடன் தெரிந்துக் கொள்கிறார். இதனாலேயே, நெட்டிசன்கள் பலர் ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்து, தங்களுக்கு கேட்க தோன்றும் கேள்விகளை கேட்பது உண்டு.

இந்த வரிசையில், சிறுவன் ஒருவன் வீடியோ வாயிலாக 700 ரூபாய்க்கு மஹிந்திரா தார் வாகனத்தை கொடுக்க ஆனந்த் மஹிந்திராவிடம் கேட்டுள்ளான். நொய்டாவை சேர்ந்த இந்த சிறுவனின் பெயர் சீகு. தனது தந்தையின் பொய்யான பேச்சை கேட்டு, மஹிந்திராவின் தார் மற்றும் எக்ஸ்யூவி700 கார்கள் இரண்டும் ஒன்று என இந்த சிறுவன் நினைத்துக் கொண்டிருக்கிறான்.
அதுமட்டுமின்றி இந்த சிறுவன், ரூ.700ஐ செலவு செய்தாலே எவரொருவரும் மஹிந்திரா தார் வாகனத்தை வாங்கிவிட முடியும் எனவும் நம்புகிறான். இருப்பினும், தனது க்யூட்டான மழலை பேச்சில் அந்த சிறுவன் இதனை கேட்டதால் அனைவரும் ரசிக்கும்படியாக உள்ளது. ஆனந்த் மஹிந்திராவும் இந்த சிறுவனின் மழலை பேச்சில் ஈர்க்கப்பட்டுள்ளார்.
சிறுவன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா, "ரூ.700க்கு மஹிந்திரா தார் வாகனத்தை விற்பனை செய்தால், எனது கம்பெனி திவால் ஆகிவிடும்" என நகைச்சுவை உடன் தெரிவித்துள்ளார். ஆனந்த மஹிந்திராவுக்கு இந்த வீடியோவை அவரது நண்பர் சூனி தாராபோரேவாலா என்பவர் இன்ஸ்டாகிராமில் அனுப்பியுள்ளார்.
இந்த ஒரு வீடியோ மட்டுமில்லை, தான் பேசும் இவ்வாறான நிறைய வீடியோக்களை சிறுவன் சீகு இணையத்தில் பதிவிட்டுள்ளான். நண்பரின் பரிந்துரையில் சீகுவின் வீடியோக்களை பார்க்க ஆரம்பித்த ஆனந்த் மஹிந்திரா பின்னர் அவனது ரசிகர்களுள் ஒருவராக மாறிவிட்டார். இதனை, ஆனந்த் மஹிந்திரா அவர்களே தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ரூ.700க்கு சிறுவன் சீகு கேட்ட மஹிந்திரா தார் வாகனம் 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. மஹிந்திராவின் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமான இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.10.98 லட்சத்தில் இருந்து ரூ.16.94 லட்சம் வரையில் உள்ளன. 2.2 லிட்டர் டீசல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் தார் விற்பனைக்கு கிடைக்கிறது.
மஹிந்திரா தார் தற்சமயம் 3 கதவுகளுடன் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், விரைவில் 5 கதவுகளுடன் தாரை அறிமுகம் செய்ய மஹிந்திரா தயாராகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட, 5-டோர் தார் வாகனம் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டு இருந்தது. 5-கதவு மஹிந்திரா தார் விற்பனையில் மாருதி சுஸுகி ஜிம்னிக்கு போட்டியாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுமார் ரூ.10 இலட்சத்திற்கு மேல் விலை கொண்ட ஒரு வாகனத்தை சிறுவன் சீகு ரூ.700 கேட்டுள்ளான். ஆகையால், இந்த கேள்வி ஏற்கக்கூடியது அல்ல என்றாலும், அவனது குழந்தைத்தனமான பேச்சு அனைவரையும் ஈர்த்துவிட்டது. நாட்டிற்கு பெருமை சேர்ப்பவர்களுக்கு அவ்வப்போது மஹிந்திரா வாகனங்களை பரிசாக வழங்கிவரும் ஆனந்த் மஹிந்திரா, இந்த சிறுவன் விளையாட்டாக கேட்டதற்காக உண்மையிலேயே ஒரு தார் வாகனத்தை அவனுக்கு ரூ.700க்கு வழங்கினாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.


Click it and Unblock the Notifications









