காரை ஈஸியா பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்

காரை எளிதாக பார்க்கிங் செய்ய வழி கண்டுபிடித்துள்ள இந்தியருக்கு தொழில் அதிபர்கள் உள்பட பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

காரை ஈஸியா பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்

இந்தியாவில் இட நெருக்கடி பிரச்னை அதிகரித்து கொண்டே வருகிறது. பொது சாலைகள் ஆகட்டும் அல்லது வீடாகட்டும், இட நெருக்கடி என்பது தற்போது தவிர்க்க முடியாத பிரச்னையாக மாறி விட்டது. இட நெருக்கடி காரணமாக சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலை விரித்தாடி வருகிறது. குறிப்பாக பெங்களூர், சென்னை போன்ற பெரு நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

காரை ஈஸியா பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்

வாகனங்கள் செல்லவே சாலைகளில் இடம் இல்லாத போது, பார்க்கிங் செய்வதற்கு மட்டும் இடம் இருக்குமா என்ன? ஷாப்பிங் போன்ற ஏதேனும் ஒரு விஷயத்திற்காக தற்போது வெளியில் சென்றால், வாகனங்களை பாதுகாப்பாக பார்க்கிங் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. இதற்கு பயந்து கொண்டே வாகனங்களில் செல்வதை பலர் தவிர்க்கின்றனர்.

காரை ஈஸியா பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்

வீடுகளிலும் நிலைமை அப்படித்தான் உள்ளது. வாகனங்களை பார்க்கிங் செய்ய பெரும்பாலான வீடுகளில் இடம் கிடையாது. எனவே வீடுகளுக்கு வெளியில் பாதுகாப்பற்ற முறையில்தான் வாகனங்களை பலர் பார்க்கிங் செய்கின்றனர். இதனால் வாகனங்கள் திருடப்படும் சம்பவங்களும் கூட அதிகமாக நடைபெறுகின்றன.

காரை ஈஸியா பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்

பெரு நகரங்களை எடுத்து கொண்டால், வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில், தற்போது ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதில், கார் உரிமையாளர் ஒருவர் நெருக்கடியான இடத்தில் சமயோசிதமாக செயல்பட்டு காரை லாவகமாக பார்க்கிங் செய்கிறார்.

காரை ஈஸியா பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்

இந்தியர்களின் புத்தி கூர்மைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். 1 நிமிடம் மற்றும் 22 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ, போதிய இடவசதி இல்லாத இடத்தில், கார் பாதுகாப்பாக பார்க்கிங் செய்யப்படுவதை நமக்கு காட்டுகிறது. கருப்பு வண்ண கார் ஒன்று குடியிருப்புக்குள் நுழைவதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.

காரை ஈஸியா பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்

அப்போது ஒருவர் முன்னால் சென்று, ட்ராக் ஒன்றை வெளியே இழுத்து வருகிறார். இதன்பின்பு டிரைவர் அந்த காரை டிராக்கின் மீது ஏற்றி விட்டு கீழே இறங்கி கொள்கிறார். பின்னர் அந்த டிராக்கை அவர்கள் மீண்டும் பின்னால் தள்ளி விடுகின்றனர். இதன்மூலம் கார் பாதுகாப்பாக பார்க்கிங் செய்யப்பட்டு விட்டது. வைரல் ஆகி வரும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

டிவிட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பலர் லைக் மற்றும் ரீ-டிவிட் செய்துள்ளனர். இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும், இந்த பதிவை ரீ-டிவிட் செய்துள்ளார் என்பதுதான். தொழில் அதிபரான ஆனந்த் மஹிந்திரா இந்தியா மட்டுமல்லாது, உலக ஆட்டோமொபைல் துறையிலேயே மிக முக்கியமான நபர்களில் ஒருவராக உள்ளார்.

காரை ஈஸியா பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்

அவர் டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்க கூடியவர். சாமானியர்களின் கேள்விகளுக்கு கூட ஆனந்த் மஹிந்திராவிடம் இருந்து நேரடியாக பதில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்த வீடியோவிற்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளுக்கு எளிதாக தீர்வு கண்டுபிடிப்பதில் இந்தியர்கள் புத்திசாலிகள்.

காரை ஈஸியா பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்

டூத் பேஸ்ட்டில் கடைசி துளி வரை பிழிந்து எடுப்பதாகட்டும் அல்லது தண்ணீர் பாட்டிலை பாத்ரூமில் ஷவராக பயன்படுத்துவதாகட்டும், இந்தியர்களுக்கு நிகர் இந்தியர்கள்தான். இந்த வகையில் காரை பார்க்கிங் செய்த இந்த நுட்பமும் சமூக வலை தளங்களில் தற்போது நெட்டிசன்களிடம் இருந்து பாராட்டுக்களை குவித்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, February 21, 2020, 12:51 [IST]
English summary
Anand Mahindra Shares A Unique Indian Car Parking ‘Jugaad’, Video. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+