கொஞ்சம் மிஸ் இல்லனா ஆட்டோ காலி!! ஆனந்த் மஹிந்திரா டுவிட்டரில் பகிர்ந்து கொண்ட வீடியோ

மிகவும் நகைச்சுவையான வீடியோ ஒன்றினை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வீடியோவில் உள்ள நகைச்சுவையையும், கருத்தையும் பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

கொஞ்சம் மிஸ் இல்லனா ஆட்டோ காலி!! ஆனந்த் மஹிந்திரா டுவிட்டரில் பகிர்ந்து கொண்ட வீடியோ

மஹிந்திரா க்ரூப்பின் சேர்மனான ஆனந்த மஹிந்திரா இணையத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கக்கூடிய கோடிஸ்வரர். குறிப்பாக டுவிட்டரில் கலந்துரையாடுவதை விரும்பக்கூடியவர்.

கொஞ்சம் மிஸ் இல்லனா ஆட்டோ காலி!! ஆனந்த் மஹிந்திரா டுவிட்டரில் பகிர்ந்து கொண்ட வீடியோ

இதனாலேயே இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள், படங்களும் ஆனந்த் மஹிந்திராவுக்கு தெரியாமல் இருப்பதில்லை. அதேநேரம் தனக்கு பிடித்த, வாகனங்கள் சம்மந்தமான வீடியோக்களை இவர் நெட்டிசன்களுடன் பகிர்ந்து கொள்வார்.

இந்த வகையில் ஆன்ந்த் மஹிந்திரா சமீபத்தில் அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள வீடியோவினை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். வெறும் 9 நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய இந்த வீடியோ இந்தியாவில் எங்காவது தான் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆட்டோ ஓட்டிகளை பற்றி சொல்லவே வேண்டாம். எவ்வளவு குறுகிய மற்றும் போக்குவரத்து மிகுந்த சாலையாக இருந்தாலும் பரவாயில்லை, புகுந்து சென்றுவிடுவார்கள். பெரிய அளவில் எந்தவொரு கண்ட்ரோலும் இல்லாத ஆட்டோகளிலேயே ஸ்டண்ட் செய்து காண்பிப்பர்.

கொஞ்சம் மிஸ் இல்லனா ஆட்டோ காலி!! ஆனந்த் மஹிந்திரா டுவிட்டரில் பகிர்ந்து கொண்ட வீடியோ

ஆனால் சில ஸ்டண்ட்கள் விபத்தில் சென்று முடிகின்றன. இங்கேயும் வளைவில் திரும்பிய ஆட்டோ டிரைவருக்கு பேலன்ஸ் இழந்துள்ளது. இதனால் ஒரு பக்கமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட போகிறது என எண்ணியவர்களுக்கு செம்ம பல்ப்.

ஏனெனில் சரியாக அந்த சமயத்தில் ஒருவர் அந்த பகுதியில் நடந்து சென்றுள்ளார். ஆட்டோ தன் மீது கவிழ வருவதை பார்த்த அந்த நபர் உடனே சுதாரித்துக்கொண்டு ஆட்டோவின் திசையை திருப்பிவிட்டார், ஆட்டோ மீண்டும் சாலையில் சென்றது.

கொஞ்சம் மிஸ் இல்லனா ஆட்டோ காலி!! ஆனந்த் மஹிந்திரா டுவிட்டரில் பகிர்ந்து கொண்ட வீடியோ

இதனை பார்ப்பவர்களுக்கு சிரிப்பு வரலாம். ஆனால் அதேநேரத்தில் அந்த நபரின் துரிதமான நடவடிக்கையையும் பாராட்ட வேண்டும். இருப்பினும், இந்த காட்சிகளை பார்த்து சிரிக்காதவர்கள் கூட கடைசியில் "ஆட்டோ கரெக்ட்" என்ற கேப்ஷனை பார்த்தவுடன் சிரித்துவிடுவார்கள்.

கொஞ்சம் மிஸ் இல்லனா ஆட்டோ காலி!! ஆனந்த் மஹிந்திரா டுவிட்டரில் பகிர்ந்து கொண்ட வீடியோ

ஏனெனில் உங்களை போல் நானும் அந்த கடைசி கவுண்டரை எதிர்பார்க்கவில்லை. ஆனந்த் மஹிந்திராவின் இந்த வீடியோ பதிவிற்கு நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Anand Mahindra shares Video of man saving auto from overturning in Twitter.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X