நவீன தொழில்நுட்பங்களை போல் துல்லியம்... ரிவர்ஸ் பார்க்கிங் செய்ய டிரைவருக்கு உதவிய நாய்... வீடியோ

நாய் ஒன்று, காரை ரிவர்ஸ் பார்க்கிங் செய்ய ஓட்டுனருக்கு உதவிய காணொளி, சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

நவீன தொழில்நுட்பங்களை போல் துல்லியம்... ரிவர்ஸ் பார்க்கிங் செய்ய டிரைவருக்கு உதவிய நாய்... வீடியோ

கார் ஓட்டுவது ஒரு கலை என்றால், அவற்றை சரியாக பார்க்கிங் செய்வதும் ஒரு கலைதான். இன்றைய நெருக்கடியான சூழல்களில், கார்களை சரியாக பார்க்கிங் செய்ய முடியாமல் பலர் தவிப்பதை நாம் பார்க்கிறோம். உண்மையிலேயே மிகவும் சிறிய மற்றும் நெருக்கடியான பகுதிகளில் கார்களை பாதுகாப்பாக பார்க்கிங் செய்வது என்பது கொஞ்சம் சிரமமான மற்றும் சவாலான காரியம்தான்.

நவீன தொழில்நுட்பங்களை போல் துல்லியம்... ரிவர்ஸ் பார்க்கிங் செய்ய டிரைவருக்கு உதவிய நாய்... வீடியோ

ஆனால் பார்க்கிங் செய்யும் விஷயத்தில், கார் ஓட்டுனர்களுக்கு இன்று பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் உதவி செய்கின்றன. கார்களை சரியாகவும், பாதுகாப்பாகவும் பார்க்கிங் செய்ய உதவும் வகையில், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா என தற்போதைய காலகட்டத்தில் பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்து விட்டன.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

நவீன தொழில்நுட்பங்களை போல் துல்லியம்... ரிவர்ஸ் பார்க்கிங் செய்ய டிரைவருக்கு உதவிய நாய்... வீடியோ

தொழில்நுட்பம் விஸ்வரூப வளர்ச்சியை அடைந்திருக்கும் இன்றைய சூழலில், இங்கே நாங்கள் சொல்லப்போகும் விஷயம் உங்களுக்கு நிச்சயம் வியப்பை ஏற்படுத்தும். ஆம், அறிவாற்றல் மிகுந்த நாய் ஒன்று, காரை சரியாக பார்க்கிங் செய்ய ஓட்டுனருக்கு உதவி செய்துள்ளது. கார் ஓட்டுனர் ரிவர்ஸ் பார்க்கிங் செய்த நிலையில், நாய் அவரை சரியாக வழி நடத்தியுள்ளது.

நவீன தொழில்நுட்பங்களை போல் துல்லியம்... ரிவர்ஸ் பார்க்கிங் செய்ய டிரைவருக்கு உதவிய நாய்... வீடியோ

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, டிவிட்டரில் தற்போது இந்த காணொளியை பகிர்ந்துள்ளார். சுமார் 30 வினாடிகள் ஓடக்கூடிய இந்த காணொளி, கார் ஓட்டுனர் சரியாக ரிவர்ஸ் பார்க்கிங் செய்வதற்கு நாய் எப்படி தன்னுடைய திறன்கள் மூலம் அவரை வழிநடத்தியது? என்பதை நமக்கு காட்டுகிறது.

நவீன தொழில்நுட்பங்களை போல் துல்லியம்... ரிவர்ஸ் பார்க்கிங் செய்ய டிரைவருக்கு உதவிய நாய்... வீடியோ

இன்று உள்ள மற்ற அதிநவீன தொழில்நுட்பங்களை போல் கிட்டத்தட்ட இந்த நாயும் துல்லியமாக செயல்பட்டுள்ளது. இது உண்மையிலேய ஆச்சரியமான ஒரு விஷயம்தான். ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் இந்த காணொளியை பகிர்ந்த உடனேயே ஏராளமானோரை இது கவர்ந்து விட்டது. எனவே ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவிற்கு லைக் மற்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

நவீன தொழில்நுட்பங்களை போல் துல்லியம்... ரிவர்ஸ் பார்க்கிங் செய்ய டிரைவருக்கு உதவிய நாய்... வீடியோ

ஒரு சிலர் இதேபோன்று தனித்துவமான திறன்களுடன் உள்ள நாய்கள் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து வருகின்றனர். இன்றைய சூழலில் அனுபவம் வாய்ந்த ஓட்டுனர்கள் கூட நெருக்கடியான இடங்களில் கார்களை பார்க்கிங் செய்ய முடியாமல் தடுமாறி வருகின்றனர். அப்படி இருக்கையில் நாய் ஒன்று, கார் ஓட்டுனரை வழி நடத்தியிருப்பது உண்மையிலேயே வியப்பான விஷயமாகதான் உள்ளது.

நவீன தொழில்நுட்பங்களை போல் துல்லியம்... ரிவர்ஸ் பார்க்கிங் செய்ய டிரைவருக்கு உதவிய நாய்... வீடியோ

ஆனால் இப்படிப்பட்ட ஆச்சரியமான நிகழ்வுகளை ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் பகிர்வது இது முதல் முறை கிடையாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். உத்வேகம் அளிக்க கூடிய, ஆச்சரியமான மற்றும் வேடிக்கையான நிகழ்வுகள் பலவற்றை அவர் டிவிட்டரில் தொடர்ச்சியாக பகிர்ந்து வருகிறார்.

அத்துடன் இந்தியர்களின் வித்தியாசமான மற்றும் அவசியமான கண்டுபிடிப்புகளையும் அவர் அவ்வப்போது டிவிட்டர் மூலம் வெளி உலகிற்கு எடுத்துக்காட்டி வருகிறார். கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி காரை, அதன் உரிமையாளர் சங்கிலி மூலம் மரத்தில் கட்டி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் பகிர்ந்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Anand Mahindra Shares Witty Post On How Clever Dog Helps In Reverse Parking - Viral Video. Read in Tamil
Story first published: Tuesday, November 10, 2020, 18:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X