ரஜினி நடிக்கும் "காலா"வில் மஹேந்திரா தார்...! ஆனந்த் மஹேந்திரா பெருமிதம்

காலா திரைப்படத்தில் ரஜினி காந்த் மஹேந்திரா தார் காரில் உட்காந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு தார் கார் காலாவில் பயன்படுத்தபடுவதை கண்டு பெருமிதப்படுவதாக டுவிட் செய்துள்ளார்.

By Balasubramanian

காலா திரைப்படத்தில் ரஜினி காந்த் மஹேந்திரா தார் காரில் உட்காந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு தார் கார் காலாவில் பயன்படுத்தபடுவதை கண்டு பெருமிதப்படுவதாக டுவிட் செய்துள்ளார்.

ரஜினி நடிக்கும்

நடிகர் ரஜினியின் நடிப்பில் காலா திரைப்படம் நிரைவடைந்து ரிலீஸிற்கு தயாராக இருக்கிறது. வரும் ஜூன் மாதம் வெளியீடு என அதன் தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

ரஜினி நடிக்கும்

இந்நிலையில் அந்த படத்தின் சில போஸ்டர்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன. அதில் ரஜினி காந்த் மஹேந்திரா தார் வாகனத்தில் உட்காந்திருப்பது போன்ற படம் வெளியானது.

ரஜினி நடிக்கும்

தற்போது இப்படத்திற்கான பாடல்கள் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் அதை விளம்பரப்படுத்த தார் வாகனத்தில் ரஜினிகாந்த் உட்காந்திருக்கும் படத்தை பேப்பர்களில் விளம்பரமாக வெளியிட்டது.

ரஜினி நடிக்கும்

இந்த அந்த பேப்பர் விளம்பரத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட மஹேந்திரா &மஹேந்திர நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆனந்த் மஹேந்திரா காலையில் எழுந்தவுடன் பேப்பரின் முதல் பக்கத்தில் இதை பார்த்ததில் மகிழ்ச்சி எனவும், தார் காரை பயன்படுத்தி அதை கவுரவித்திருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே இந்த புகைப்படம் கடந்த ஆண்டே வந்திருந்தாலும் ஆனந்த் மஹேந்திரா தற்போது தான் முதன் முறையாக இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ரஜினி நடிக்கும்

இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் முன்னர் ஒரு முறை கூறும்போது இந்த தார் கார் மஹேந்திரா நிறுவனத்திடம் வாங்கப்பட்டது.ஷூட்டிங் முடிந்ததும் மீண்டும் மஹேந்திரா நிறுவனத்திடமே ஒப்படைக்கப்படும் என கூறியிருந்தா்.

ரஜினி நடிக்கும்

மஹேந்திரா தாரை பொருத்தவரை ஆப்-ரோடு பயணத்திற்கு சிறந்தது. ஐயானிக் ஜீப் டிசைனை ஒத்து தாரின் டிசைன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பல கஷ்டமைஸ்டு ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது.

ரஜினி நடிக்கும்

தாரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரின் விலை ரூ 6.27 லட்சத்தில் இருந்து ரூ 9 லட்சம் வரை விற்பனைக்கு வருகிறது.

ரஜினி நடிக்கும்

இதற்கு முன்னர் தனது ஆட்டோவை ஸ்கார்ப்பியோ காரின் பின் பகுதி போல கஸ்டமைஸ்டு செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு உதவி செய்யவுள்ளதாக ஆனந்த் மஹேந்திரா டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

ரஜினி நடிக்கும்

அதன் படி அவருக்க மேஸ்ஸிமோ எல்சிவி லோடு ஆட்டோவை அளித்து அவர் கஸ்டமைஸ்டு செய்த ஸ்கார்ப்பியோ வடிவிலான ஆட்டோவை தங்களத மியூசியத்திற்கு எடுத்து சென்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Article Published On: Monday, April 30, 2018, 13:38 [IST]
English summary
Anand Mahindra thrilled with Rajnikanth’s Kaala movie poster featuring Mahindra Thar. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+