பளுதூக்கும் சேம்பியன் மீராபாய் சானுவிற்கு டியூவி300 எஸ்யூவி கார் பரிசு: ஆனந்த் மஹிந்திரா..!!

Written By:

உலக பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானுவிற்கு மஹிந்திரா கார் பரிசளிக்கப்படவுள்ளது.

பளுதூக்கும் சேம்பியனுக்கு மஹிந்திரா டியூவி300 கார் பரிசு..!!

இதற்கான அறிவிப்பை மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

பளுதூக்கும் சேம்பியனுக்கு மஹிந்திரா டியூவி300 கார் பரிசு..!!

வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானுவிற்காக மஹிந்திரா நிறுவனம், டியூவி 300 எஸ்யூவி காரை பிரத்யேகமாக வழங்கவுள்ளது.

பளுதூக்கும் சேம்பியனுக்கு மஹிந்திரா டியூவி300 கார் பரிசு..!!

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஆனந்த் மஹிந்திரா, வீராங்கனை சாய்கோம்மின் வெற்றி பாலின பாகுபாடுகளை தகர்த்துள்ளதாக கூறினார்.

பளுதூக்கும் சேம்பியனுக்கு மஹிந்திரா டியூவி300 கார் பரிசு..!!

இந்தியாவை உலக அரங்கிற்கு எடுத்து சென்ற வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானுவிற்கு டியூவி 300 எஸ்யூவி காரை பரிசளிப்பத்தில் மஹிந்திரா பெருமை அடைவதாகவும் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

பளுதூக்கும் சேம்பியனுக்கு மஹிந்திரா டியூவி300 கார் பரிசு..!!

அமெரிக்காவில் உலக பளுதூக்கும் போட்டி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 48 கிலோ எடை பிரிவினருக்காக நடைபெற்ற போட்டியில் மணிப்பூரை சேர்ந்த 23 வயதான வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு தங்கம் பதக்கம் வென்றார்.

பளுதூக்கும் சேம்பியனுக்கு மஹிந்திரா டியூவி300 கார் பரிசு..!!

உலக பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற இராண்டாவது பெண்ணாக சாய்கோம் மீராபாய் சானு வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

இவருக்கு முன்னர், கர்ணம் மல்லேஸ்வரி 1994 மற்றும் 1995ம் ஆண்டுகளில் தொடர்ந்து உலக பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று தங்கம் பதக்கங்களை வென்றார்.

பளுதூக்கும் சேம்பியனுக்கு மஹிந்திரா டியூவி300 கார் பரிசு..!!

2016ம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் சாய்கோம் மீராபாய் சானு 48 கிலோ எடைப்பிரிவிற்கான பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்டார்.

பளுதூக்கும் சேம்பியனுக்கு மஹிந்திரா டியூவி300 கார் பரிசு..!!

ஆனால் அவரால் பதக்கம் வெல்ல முடியவில்லை. அப்போது ஏற்பட்ட தோல்வியை மனதில் வைத்து கடுமையாக உழைத்து உலக பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்றுள்ளார் அவர்.

பளுதூக்கும் சேம்பியனுக்கு மஹிந்திரா டியூவி300 கார் பரிசு..!!

விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வீரர்களுக்கு ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து தனது பங்களிப்பை செய்து வருகிறார்.

பளுதூக்கும் சேம்பியனுக்கு மஹிந்திரா டியூவி300 கார் பரிசு..!!

இதற்கு முன்னதாக பேட்மிட்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்திற்கு மஹிந்திராவின் புதிய கார் மாடலை பரிசாக அறிவித்தார் ஆனந்த மஹிந்திரா.

பளுதூக்கும் சேம்பியனுக்கு மஹிந்திரா டியூவி300 கார் பரிசு..!!

விளையாட்டு வீரர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வரும் ஆனந்த் மஹிந்திராவிற்கு பல தரப்பு மக்கள் ட்விட்டரில் பாராட்டுதலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Anand Mahindra to Gist TUV 300 SUV to Mirabai Chanu. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark