இவங்க வீட்ல ஒன்னுனா மோடியே நேர்ல வந்து நிப்பாரு! அவ்ளோ பெரிய ஆளோட மருமகனா சாதாரண கார்ல போறாரு?
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டொயோட்டா கேம்ரி (Toyota Camry). தற்போதைய நிலையில் 48.50 லட்ச ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-Showroom Price) டொயோட்டா கேம்ரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆன்-ரோடு விலை (On-road Price) சுமார் 61 லட்ச ரூபாய் வரும்.
டொயோட்டா கேம்ரி காரின் சிறப்பம்சமே அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய அதன் ஹைப்ரிட் இன்ஜின்தான். கேம்ரி காரில், டொயோட்டா நிறுவனத்தின் 5வது தலைமுறை ஹைப்ரிட் சிஸ்டம் உடன் 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதன் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 25.49 கிலோ மீட்டர் என டொயோட்டா நிறுவனம் தெரிவிக்கிறது.

பொதுவாக பார்த்தால், டொயோட்டா கேம்ரி விலை உயர்ந்த ஒரு கார்தான். ஆனால் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) குடும்பத்தை பொறுத்தவரையில் டொயோட்டா கேம்ரி மிகவும் எளிமையான கார்களில் ஒன்றாகவே கருதப்படும். எனவே முகேஷ் அம்பானி குடும்ப உறுப்பினர்களை டொயோட்டா கேம்ரி போன்ற எளிமையான கார்களில் அவ்வளவு எளிதாக பார்க்க முடியாது.
ஆனால் ஆனந்த் பிரமல் (Anand Piramal) மட்டும் இதற்கு விதிவிலக்கு. இவர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் (Isha Ambani) கணவர் ஆவார். அதாவது முகேஷ் அம்பானியின் மருமகன். இவர் டொயோட்டா கேம்ரி காரில் பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில், ஆனந்த் பிரமல் மிகவும் எளிமையான உடையில் டொயோட்டா கேம்ரி காரில் ஏறி பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அத்துடன் அவரை சுற்றிலும் ஏராளமான பாதுகாவலர்களையும் நாம் காணலாம். டொயோட்டா கேம்ரி காரில் ஆனந்த் பிரமலை பார்ப்பது இது முதல் முறை அல்ல.
கடந்த காலங்களிலும் அவரை பல முறை டொயோட்டா கேம்ரி காரில் பார்க்க முடிந்துள்ளது. குறிப்பாக முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் (Anant Ambani) திருமணத்திற்கு முந்தைய விருந்து நிகழ்ச்சி ஒன்று, முகேஷ் அம்பானியின் இல்லமான அன்டிலியாவில் (Antilia) நடைபெற்றபோது, அதில் கலந்து கொள்ள ஆனந்த் பிரமல் டொயோட்டா கேம்ரி காரில் வந்தார்.
ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) மற்றும் மெர்சிடிஸ் மேபெக் (Mercedes Maybach) என ஏராளமான சொகுசு கார்கள் இருக்கும்போது, அதை எல்லாம் விட்டு விட்டு, டொயோட்டா கேம்ரி காரில் வந்த காரணத்தால், அப்போதே சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் ஆனந்த் பிரமல் பாராட்டுக்களை பெற்றார். இது அவரது எளிமையை காட்டுவதாக இருந்ததுதான் இதற்கு காரணம் ஆகும்.
இந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு முறை டொயோட்டா கேம்ரி காரை பயன்படுத்தியதால், ஆனந்த் பிரமல் மீண்டும் ஒரு முறை ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார். ஆனால் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி முகேஷ் அம்பானி குடும்பத்திற்குதான் இது மிகவும் எளிமையான கார். மற்றபடி பொதுவாக பார்த்தால், டொயோட்டா கேம்ரி அதிநவீன வசதிகள் நிரம்பிய ஒன்றாகவே இருக்கிறது.
இந்த காரின் வசதிகளை (Features) பொறுத்தவரையில், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 9 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், சிங்கிள் பேன் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.
பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு (ADAS - Advanced Driver Assistance Systems), 9 ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா போன்றவை எல்லாம் டொயோட்டா கேம்ரி காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருந்து வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஆனந்த் பிரமல் பயன்படுத்திய டொயோட்டா கேம்ரி காரானது, ஸ்கோடா சூப்பர்ப் (Skoda Superb) போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும். ஆனால் ஸ்கோடா சூப்பர்ப் கார் இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதன் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது.


Click it and Unblock the Notifications








