சாமி கும்பிட 14 கோடி ரூபாய் காரில் வந்தது அவரா! கொஞ்சம் உத்து பாத்ததுக்கு அப்புறம்தான் யார்னு தெரியுது!
உலகின் பெரும் பணக்காரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கார்கள் மீது இருக்கும் காதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. முகேஷ் அம்பானி (Mukesh Ambani) குடும்பமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. குறிப்பாக முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு, ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) கார் மீது தனி காதல் இருக்கிறது.
அவர்களிடம் 4 ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்கள் இருப்பதுதான் இதற்கு சாட்சி. இதில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில், முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி (Anant Ambani) வந்து இறங்கும் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது.

யூடியூப் (YouTube) தளத்தில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. பாஜக (BJP) முன்னாள் எம்எல்ஏ ஆஷிஷ் செல்லார், விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்குதான் ஆனந்த் அம்பானி மிகவும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில் வந்து சென்றுள்ளார்.
ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில், 6.75 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு வி12 பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 571 பிஎஸ் பவர் மற்றும் 850 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு இஸட்எஃப் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிலோ மீட்டர்கள் ஆகும். இந்திய சந்தையில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் விலை (Price) 6.95 கோடி ரூபாய் ஆகும். இது எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வர ஆனந்த் அம்பானி பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் விலை 13.14 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. முகேஷ் அம்பானி குடும்பம் கூடுதலாக ஒரு சில மாடிஃபிகேஷன்களை செய்திருப்பதுதான், இந்த அதிகப்படியான விலைக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டஸன் சன் யெல்லோ நிறத்தில் இந்த கார் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த பெயிண்ட்டிற்கு மட்டும் முகேஷ் அம்பானி குடும்பம் சுமார் 1 கோடி ரூபாயை செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. நமக்கு வேண்டுமானால் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால் முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்!
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முகேஷ் அம்பானி குடும்பத்திடம் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் (Rolls Royce Phantom) கார் ஒன்றும் இருக்கிறது. இதுதவிர (BMW), பென்ட்லீ (Bentley), மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) மற்றும் ஃபெராரி (Ferrari) ஆகிய நிறுவனங்களின் கார்களும் கூட முகேஷ் அம்பானி குடும்பத்திடம் இருக்கின்றன.
இதன் மூலம் விலை உயர்ந்த கார்களை அவர்கள் எவ்வளவு நேசிக்கின்றனர்? என்பதை புரிந்து கொள்ளலாம். இது பொதுவாக தொழில் அதிபர்கள், திரையுலக நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் போன்றோர்களிடம் காணப்படும் பொதுவான ஒரு குணம்தான். முகேஷ் அம்பானி குடும்பம் வரும் காலங்களில் இன்னும் பல்வேறு விலை உயர்ந்த கார்களை வாங்கி குவிக்க வாழ்த்துக்கள்!


Click it and Unblock the Notifications