500 ஆவது ஸ்டேஷனையும் திறந்துட்டாரு!.. அப்பாவை போல பணம் சம்பாதிப்பதில் குறிக்கோளா இருக்காரு..

சார்ஜிங் மையங்களை திறப்பதில் ஜியோ (Jio) - பாரத் பெட்ரோலியம் (BP) கூட்டணி ஓர் புதிய மைல்கல்லை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களின் தட்டுப்பாடு இப்போதும் மிகப் பெரிய அளவில் நிலவுகின்றது. இதைப் போக்கும் பணியில் முன்னணி நிறுவனங்கள் பல ஈடுபட்டு வருகின்றன. அதில் ஒன்றே ஜியோ - பிபி கூட்டணி ஆகும். இவர்கள் இருவரும் இணைந்து நாட்டின் முக்கிய எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், இந்த கூட்டணி மும்பையை மின்சார வாகனங்களுக்கு ஏற்ற நகரமாக மாற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே ஜியோ - பிபி கூட்டணி சார்ஜிங் மையங்களை நகரத்தில் திறப்பதில் புதிய மைல்கல்லை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Anant ambani inaugurate jio-bp 500th ev charging station

தங்களுடைய 500 ஆவது சார்ஜிங் மையத்தையே அவர்கள் மும்பை நகரத்தில் திறந்து வைத்து உள்ளனர். ஜியோ - பிபி இணைந்து நாட்டில் பல்ஸ் இவி சார்ஜிங் (Pulse EV Charging Station) எனும் பெயரில் மின்சார வாகன சார்ஜிங் மையங்களை கட்டமைத்து வருகின்றன.

இதன் 500ஆவது ஸ்டேஷனே சமீபத்தில் ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டர் (Jio World Convention Centre)இல் திறக்கப்பட்டு இருக்கின்றது. இந்த மையம் மும்பையின் பந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸில் அமைந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இங்கு வரும் மின்சார வாகன பயன்பாட்டாளர்கள் தங்களின் வாகனங்களை சார்ஜ் செய்துக் கொள்ள இந்த ஸ்டேஷன் பெரும் உதவியாக இருக்கும்.

Jio-bp 500th ev charging station

அதேவேளையில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Limited)-ம், பாரத் பெட்ரோலியமும் இணைந்து இந்த 500ஆவது சார்ஜிங் ஸ்டேஷனுடன் சேர்த்து 5 ஆயிரம் சார்ஜிங் பாயிண்டுகளையும் திறந்து வைத்திருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது. சென்ற ஆண்டு வரை இவர்கள் இருவரும் இணைந்து 1,300 சார்ஜிங் பாயிண்டுகளை மட்டுமே தயார் செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு முடிவடைவதற்குள் அதை 5 ஆயிரமாக அவர்கள் உயர்த்தி இருக்கின்றனர்.

இதன் வாயிலாக ஜியோ - பிபி நாட்டில் சார்ஜிங் மையங்களை உருவாக்குவதில் மிக தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், இந்த 5000 சார்ஜிங் பாயிண்டுகளில் பெரும்பாலானவை அதிக வேகத்தில் சார்ஜ் செய்யும் கருவிகள் என நிறுவனம் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியே மும்பையின் 500ஆவது சார்ஜிங் ஸ்டேஷனை திறந்து வைத்திருக்கின்றார். அப்போது அவருடன் பாரத் பெட்ரோலியத்தின் சிஇஓ முரே அசின்க்ளாஸ்-ம் இருந்தார்.

ஆனந்த் அம்பானியின் இந்த செயல் வாயிலாக அவர் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை திறந்து வைப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டிருக்கின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது. அவர் சொகுசு கார்கள் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆனந்த் அம்பானி மற்றும் அவருடைய அப்பா முகேஷ் அம்பானி இவர்களிடத்தில் இல்லாத ஆடம்பர கார்களே இருக்க முடியாது என கூறலாம்.

அந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையில் சொகுசு வாகனங்களை அவர்கள் வைத்திருக்கின்றனர். ரோல்ஸ் ராய்ஸ், ஃபெர்ராரி, லம்போர்கினி மற்றும் பென்ட்லீ என உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களின் விலை உயர்ந்த கார் மாடல்கள் பல பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு மட்டுமே 10 யூனிட்டுகளுக்கும் அதிகமாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்கள் மிக வேகமாக வளர்ச்சியைச் சந்தித்து வருகின்றது. இதை பூஸ்ட் செய்யும் விதமாகவே ஜியோ-பிபி இருவர்களும் இணைந்து நாட்டில் சார்ஜிங் மையங்களை அதிகளவில் திறந்துக் கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு முடிவடைவதற்குள் இன்னும் சில நூறு அல்லது ஆயிரக் கணக்கான புதிய மையங்களை ஜியோ - பிபி திறக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, September 27, 2024, 13:05 [IST]
English summary
Anant ambani inaugurated 500th jio bp pulse ev charging station at jio world convention centre
மேலும்... #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X