10 கோடி ரூபாய் காரில் வந்து இறங்கியது அந்த குடும்பத்து பொண்ணா! சினிமா நடிகைகளை விட அழகா இருக்காங்களே...

உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani). இவரது மகன் ஆனந்த் அம்பானிக்கும் (Anant Ambani), ராதிகா மெர்ச்சென்ட்டிற்கும் (Radhika Merchant) சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள் என்று பலரும் கலந்து கொண்டனர். ஒட்டுமொத்த உலகையே திரும்பி பார்க்க வைக்கும் வகையில், ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சென்ட் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதனால் சமூக வலை தளங்கள் முழுக்க அவர்களின் திருமண வீடியோக்கள்தான் ஆக்கிரமித்திருந்தன.

இந்த வரிசையில் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் மற்றொரு வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இது அவர்களின் திருமண வீடியோ கிடையாது. இது பாரிஸ் நகரில் எடுக்கப்பட்ட வீடியோ ஆகும்.

Anant Ambani-Radhika Merchant Arrive In Rolls Royce Cullinan

பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் 2024 ஒலிம்பிக் போட்டிகள் (2024 Paris Olympics) கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. தற்போது பாரிஸில் உள்ள ஆனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சென்ட்டும் ஒலிம்பிக் திருவிழாவை ரசித்து வருகின்றனர். போட்டிகள் நடைபெறும் ஸ்டேடியம் ஒன்றுக்கு அவர்கள் சென்றபோதுதான், தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகிய இருவரும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) காரில் வந்து இறங்கி, ஸ்டேடியத்திற்கு செல்வதை இந்த வைரல் வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. முகேஷ் அம்பானி குடும்பத்தினர், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் ரசிகர்களாக கருதப்படுகின்றனர்.

Rolls Royce Cullinan Black Badge

அவர்களிடம் ஒட்டுமொத்தமாக 9 ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக முகேஷ் அம்பானி குடும்பம் தவிர, வேறு யாரிடமாவது இத்தனை ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்கள் இருக்குமா? என்பது சந்தேகம்தான்! கல்லினன்தான், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்த முதல் எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும்.

தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் நாம் பார்ப்பது, ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் பிளாக் பேட்ஜ் (Black Badge) எடிசன் ஆகும். ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் காரில், 6.75 லிட்டர் ட்வின் டர்போ வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 600 பிஹெச்பி பவர் மற்றும் 900 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இது ரெகுலர் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் பவர் அவுட்புட்டை விட, 29 பிஹெச்பி மற்றும் 50 என்எம் அதிகம் ஆகும். ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சென்ட் பயன்படுத்திய இந்த காரின் விலை (Price) 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் 9 ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்களில், ஒரு சில கார்கள் வெளிநாடுகளில் இருக்கின்றன. ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சென்ட் பயன்படுத்தியது, வெளிநாடுகளில் அவர்கள் வைத்துள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்களில் ஒன்றாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 3, 2024, 17:57 [IST]
English summary
Anant ambani radhika merchant arrive in rolls royce cullinan to watch paris olympics video
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+