முகேஷ் அம்பானி மகனின் திருமண கொண்டாட்டம்... மொத்த பாலிவுட்டும் இங்கே தான் இருக்கு!! டிக்கெட் விலை எவ்வளவு?
முகேஷ் அம்பானி இல்ல திருமண விழாவை ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது. இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை இந்தியா மட்டுமின்றி, இந்த உலகமே பார்த்து வியங்கும் வகையில் நடத்த முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளார். ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட்டின் திருமணம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக பல்வேறு திருமண கொண்டாட்டங்கள் ஒன்றன் ஒன்றாக நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த கொண்டாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலின் பெயர், செலிபிரிட்டி அசெண்ட் (Celebrity Ascent) ஆகும். பெயருக்கேற்ப இந்த உல்லாச கப்பல் மிக பிரம்மாண்டமானது மற்றும் செல்வந்தர்களால் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒன்றாகும். இந்த கப்பலில் நடத்தப்பட்ட ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சியில் முன்னணி பாலிவுட் நடிகர், நடிகைகள் கலந்துக் கொண்டனர்.

சல்மான் கான், ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் ரன்வீர் சிங் உள்ளிட்ட நடிகர் & நடிகைகள் உள்பட மொத்தம் கிட்டத்தட்ட 800 விருந்தினர்கள் கப்பலில் நடந்த இந்த திருமண கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டனர். செலிபிரிட்டி அசெண்ட் உல்லாச கப்பலில் இத்தாலியில் துவங்கிய பயணம், கடந்த ஜூன் 1ஆம் தேதி தெற்கு பிரான்ஸில் நிறைவடைந்தது.
செலிபிரிட்டி அசெண்ட் கப்பலை பற்றி சொல்ல வேண்டுமென்றால், முன்னணி கப்பல் நிர்வாக நிறுவனமான ராயல் கரீபியனின் எட்ஜ் சீரிஸ் கப்பல்களில் நான்காவதாக உருவாக்கப்பட்ட கப்பல் இதுவாகும். 2022இல் செலிபிரிட்டி பியாண்ட் என்கிற உல்லாச கப்பலை உருவாக்கிய பின்னர் செலிபிரிட்டி அசெண்ட்டை ராயல் கரீபியன் அறிமுகப்படுத்தியது.
கடலில் மிதக்கும் பிரம்மாண்ட அரண்மனை போன்று காட்சியளிக்கும் செலிபிரிட்டி அசெண்ட் கப்பலின் முதல் பயணம் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் துவங்கியது. மொத்தம் 1,073 அடி, அதாவது 327மிமீ நீளமுள்ள இந்த உல்லாச கப்பலின் அகலம் மட்டும் 128 அடி ஆகும். இந்த கப்பலில் அதிகப்பட்சமாக 1 லட்சத்து 40,600 டன்கள் வரையிலான எடை கொண்ட பொருட்களை ஏற்றி செல்லலாம்.

அதிகப்பட்சமாக மணிக்கு 22 நாட்டிக்கல் மைல் வேகத்திற்கு இயங்கக்கூடிய செலிபிரிட்டி அசெண்ட் உல்லாச கப்பலில் ஒரே நேரத்தில் 3,260 விருந்தினர்கள் பயணிக்க முடியும். அதாவது, இந்த 3,260 எண்ணிக்கையில் கப்பலின் கேப்டன் உள்பட மாலுமிகளின் எண்ணிக்கை அடங்காது. கப்பலுக்கு மேற்பக்கத்தில் திறந்தவெளி பகுதி உள்ளது. இதனால், காருக்கு மேலே சில தோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
உணவகங்களில் இருந்து மசாஜ் ஸ்பா, முடி திருத்தம் நிலையம், உடற்பயிற்சி கூடங்கள் வரையில் என செலிபிரிட்டி அசெண்ட் கப்பலில் கிடைக்காத விஷயங்களே கிடையாது என சொல்லலாம். உயர்தரத்திலான மதுபானங்களில் இருந்து வை-ஃபை வரையில் எல்லாமே இங்கு கிடைக்கும். மாற்றுத்திறனாளி நபர்களுக்கு கப்பலுக்கான டிக்கெட்டை புக் செய்வதில் இருந்து தங்கும் அறைகளை வழங்குவதை வரையில் அனைத்தையும் செய்து தருவதற்கு உதவிக்கு ஆட்கள் இந்த கப்பலில் உள்ளனர்.
வழக்கமான 5-ஸ்டார் ஓட்டல்களை போன்று, இந்த செலிபிரிட்டி அசெண்ட் கப்பலிலும் விருந்தினர்கள் தங்கும் அறைகள் பல்வேறு விதமான வகைகளில் வழங்கப்படுகின்றன. இதில், உயர் தரத்திலான ஐகானிக் சூட் அறையை தேர்வு செய்பவர்களுக்கு சுமார் 1,892 சதுர மீட்டர் பரப்பளவில் நன்கு பிரம்மாண்ட அறை கிடைக்கும். இதுமட்டுமின்றி, பெண்ட் ஹவுஸ் சூட், 2-ஸ்டோரே எட்ஜ் வில்லாஸ், ராயல் சூட் மற்றும் செலிபிரிட்டி சூட் போன்ற சூட் ஆப்ஷன்களும் இந்த உல்லாச கப்பலின் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: செலிபிரிட்டி அசெண்ட் உல்லாச கப்பலில் இந்த சூட்கள் கிடைக்கும் என தகவல்கள் கிடைத்துள்ளதே தவிர்த்து, இவை ஒவ்வொன்றிற்கும் கட்டணம் எவ்வளவு என்பது போன்ற விபரங்கள் கிடைக்கவில்லை. ஆனால், அது எவ்வளவாக இருந்தாலும், முகேஷ் அம்பானி போன்றோர்க்கு பெரிய விஷயமே கிடையாது.
Image Courtesy: Celebrity Ascent


Click it and Unblock the Notifications








