அந்த 2 பேருக்கு மட்டும்தான் ரோல்ஸ் ராய்ஸ்! மீதி எல்லாரும் பஸ்ல ஏறி வாங்க! அம்பானி போட்ட அதிரடி உத்தரவு!

இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி (Mukesh Ambani), உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவரது மகன் ஆனந்த் அம்பானி (Anant Ambani), ராதிகா மெர்ச்ன்ட்டை (Radhika Merchant) திருமணம் செய்யவுள்ளார். அதற்கு முந்தைய கொண்டாட்டங்களால் (Pre-wedding Celebrations), குஜராத் மாநிலம் ஜாம்நகர் (Jamnagar) விழாக்கோலம் பூண்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரும் ஜாம்நகருக்கு படையெடுத்துள்ளனர். பாலிவுட் நட்சத்திரங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஜாம்நகர் விமான நிலையத்திற்கு வந்த பாலிவுட் நட்சத்திரங்களை அம்பானி குடும்பத்தினர் எப்படி வரவேற்றனர்? என்ற தகவல் தற்போது நமக்கு கிடைத்துள்ளது.

Rolls Royce Ghost-Bus

இதன்படி தங்களுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் பிரபலமான பாலிவுட் பிரபலங்களை வரவேற்பதற்கு அம்பானி குடும்பத்தினர், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost) காரை ஜாம்நகர் விமான நிலையத்திற்கு அனுப்பியுள்ளனர். இதில், ஷாருக்கான் (Shah Rukh Khan) மற்றும் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) ஆகியோரை ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வரவேற்று அழைத்து செல்லும் வைரல் வீடியோக்கள் (Viral Videos) சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

முதல் வீடியோவில் ஷாருக்கான் குடும்பம் பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. இந்த வீடியோவில் முதலில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை நாம் பார்க்கலாம். இந்த காரின் முன் பகுதியில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் (Suhana Khan) அமர்ந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த காரின் பின் பகுதியில் ஷாருக்கான் அமர்ந்திருந்தார்.

இந்த காருக்கு பின்னால் ரேஞ்ச் ரோவர் கார் ஒன்று வருவதை நீங்கள் பார்க்கலாம். அதன் முன் பகுதியில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் (Aaryan Khan) அமர்ந்துள்ளார். ஷாருக்கானின் மற்ற குடும்ப உறுப்பினர்கள் பின் இருக்கையில் அமர்ந்துள்ளனர். மற்றொரு வீடியோவில் இதே ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார், ரன்பீர் கபூரை அழைத்து செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

எனவே ஷாருக்கான் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோரை வரவேற்பதற்கு அம்பானி குடும்பத்தினர் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை அனுப்பியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். அம்பானி குடும்பத்தினரிடம் கோஸ்ட் மட்டுமல்லாது, இன்னும் நிறைய ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ளன.

இதில், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) மிகவும் முக்கியமானது. சரி, அடுத்த விஷயத்திற்கு வருவோம். ஷாருக்கான் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில் அழைத்து செல்லப்பட்ட நிலையில், பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் பஸ்ஸில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அந்த வீடியோவும், சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதில், வருண் தவான் (Varun Dhawan), ஆதித்யா ராய் கபூர் (Aditya Roy Kapoor) மற்றும் அனன்யா பாண்டே (Ananya Panday) போன்ற நடிகர், நடிகைகளை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த நிகழ்வுகள், சமூக வலை தளங்களில் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. அம்பானி குடும்பத்தினர் உச்ச நட்சத்திரங்களை ஒரு மாதிரியாகவும், மற்றவர்களை வேறு விதமாகவும் நடத்துவதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாலிவுட் நட்சத்திரங்கள் எப்படி அழைத்து செல்லப்பட்டனர்? என்ற ஒரு சில வீடியோக்கள் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளன. ஆனால் இந்த நிகழ்ச்சியில், இன்னும் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்கள் எல்லாம் எப்படி அழைத்து செல்லப்பட்டனர்? என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, March 4, 2024, 18:34 [IST]
English summary
Anant ambani radhika merchant pre wedding celebrations rolls royce ghost viral videos
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+