இதான்டா உண்மையான சொர்க்கம்! உல்லாச கப்பலில் நடக்கப்போகும் அம்பானி மகனின் 2வது ஃப்ரீ வெட்டிங் நிகழ்வு!

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா ஆகியோரின் திருமணத்தின் இரண்டாவது ப்ரீ வெட்டிங் நிகழ்வு நடுக்கடலில் சொகுசு கப்பலில் வைத்து நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இதற்காக சுமார் 800 விருந்தினர்கள் இத்தாலிக்கு பயணம் செய்ய இருக்கிறார்கள். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் பல்வேறு விதமான தொழில்களை செய்து வருகிறார். இந்நிலையில் இவரது கடைசி மகனான ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா என்பவருக்கும் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் முதல் ப்ரீ வெட்டிங் நிகழ்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.

Anant Ambani and Radhika s pre-wedding cruise

இதில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு விதமான விருந்தினர்கள் கலந்து கொண்டனர். பல முக்கிய பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவர்களது திருமண விழாவை சிறப்பித்தனர். இந்நிலையில் இவர்களது திருமண விழாவின் முக்கிய கட்டமான இரண்டாவது ப்ரீ வெட்டிங் நிகழ்வு என்பது வெளிநாட்டில் நடுக்கடலில் சொகுசு கப்பலில் வைத்து நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

இதற்காக வரும் 28ம் தேதி இத்தாலியில் இருந்து தெற்கு ஃபிரான்ஸ் வரை பயணிக்கும் வகையில் ஒரு சொகுசு கப்பல் ஒன்றை புக் செய்துள்ளார்கள். இந்த சொகுசு கப்பல் என்பது உலகில் பல்வேறு விதமான அம்சங்களை கொண்ட சிறப்பான கப்பலாக இருக்கிறது. இந்த கப்பலில் 800 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த கப்பலிலேயே இருக்கிறது.

Anant Ambani and Radhika s pre-wedding cruise

இந்த கப்பலில் உள்ள 800 பயணிகளுக்கு வேலை செய்வதற்காக 600 ஊழியர்கள் இந்த கப்பலில் பணியாற்ற உள்ளார்கள். கப்பல் பயணம் முதல் விருந்தினர்களுக்கு தேவையான உதவிகள் செய்வது, உணவுகளை செய்வது, சுத்தப்படுத்துவது, உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இந்த ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மே 28ம் தேதி துவங்கும் இந்த கப்பல் பயணம் மே 30ம் தேதி தெற்கு பிரான்ஸ் பகுதியை சென்றடைகிறது.

இந்த இடைப்பட்ட நேரத்தில் தான் கப்பலில் வைத்து ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி என்பது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் உள்ள பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு விருந்தினர்கள் வருகின்றனர். இந்தியாவில் சல்மான்கான், ஷாரூக்கான், அமீர்கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், உள்ளிட்ட பல்வேறு விருந்தினர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த கப்பல் பயணம் என்பது சுமார் 2365 நாட்டிகல்மைல் அதாவது 4380 கிலோமீட்டர் தூரம் பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது இத்தாலி முதல் தெற்கு பிரான்ஸ் வரை உள்ள ரூட்டில் இவர்கள் தங்கள் இரண்டாவது ப்ரீ வெட்டிங் நிகழ்வை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டதற்கு முக்கியமான காரணம் உலகிலேயே மிக அழகான க்ரூஸ் ரூட் என்றால் அது இதுதான். கடல் வழி பயணம் செய்யும்போது இங்கு பல்வேறு விதமான அதிசய காட்சிகளை எல்லாம் காண முடியும்.

இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சியும் ஸ்பேஸ் தீமில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது விண்வெளியில் இவர்கள் திருமணம் நடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதற்காக கப்பலின் வடிவமைப்பு முதல் மணப்பெண்ணின் ஆடை வரை பல்வேறு விதமான டிசைன் ஏற்பாடுகள் எல்லாம் முன்னரே செய்யப்பட்டுள்ளன. இதுவரை உலகில் நடக்காத வகையில் ப்ரீ வெட்டிங் நிகழ்வு இதுவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஏற்கனவே முதல் ப்ரீ வெட்டிங் நிகழ்வு நடந்த நிலையில் தற்போது இரண்டாவது பிரைவேட் நிகழ்விற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் பிறகு நேரடியாக வரும் ஜூலை மாதம் 12ம் தேதி இவர்களது திருமணம் தான் நடக்க உள்ளது. அம்பானி குடும்பத்தினர் தங்கள் வீட்டு திருமணங்களை மிக விமர்சியாக நடத்துவது வழக்கமான விஷயம் தான். அதன்படியே இவர்களது இந்த திருமணமும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரும் பணக்காரர்களை தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இத்தாலியில் இருந்து தெற்கு பிரான்ஸ் வரை க்ரூஸ் கப்பலில் சொகுசு பயணம் செய்து விட வேண்டும் என்ற கனவில் இருக்கிறார்கள். அவர்களது கனவையும் நினைவு ஆக்கி அதை மிகப்பெரிய வாழ்வில் மறக்க முடியாத தருணமாக மாற்றுவதற்காக அம்பானி குடும்பத்தினர் இதை திட்டமிட்டுள்ளார்கள் என்பது இங்கு நாம் குறிப்பிட வேண்டியது.

More from DriveSpark

Article Published On: Friday, May 24, 2024, 12:07 [IST]
English summary
Anant ambani radhika pre wedding cruise what all we know about
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+