ஊர்வலத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார் மேலே இருந்தது தங்கமா? இந்தியாவின் பெரும் பணக்காரர் என்பத நிரூபிச்சுட்டாங்க
இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை பயன்படுத்தி வரும் குடும்பமாக அம்பானியின் குடும்பம் இருக்கின்றது. இவர்களிடத்தில் இல்லாத சொகுசு கார் மாடல்களே இல்லை என கூறிவிடலாம். அந்த அளவிற்கே மிக மிக அதிக எண்ணிக்கையில் இந்த குடும்பத்தினரிடத்தில் அரிய மற்றும் ஆடம்பர வகை கார் மாடல்கள் பயன்பாட்டில் உள்ளன. தோராயமாக இந்த குடும்பத்தினர் இடம் 200-க்கும் அதிகமான சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், துள்ளியமான எண்ணிக்கை விபரம் இதுவரை யாருமே அறியப்படாதக தகவலாக உள்ளது.
இந்த மாதிரியான சூழலிலேயே தன்னுடைய இளைய மகனின் திருமண நிகழ்வை வெகுவிமரிசையாக முகேஷ் அம்பானி குடும்பம் கொண்டாடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வண்ணம் இருக்கின்றன. மேலும், இந்தியாவில் இதுவரை எந்த திருமணத்திலும் அலங்கரிக்காத வகையில் சொகுசு கார்கள் அலங்கரிக்கப்பட்டு மணமகன்-மணமகள் ஊர்வலத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவின் மிகவும் பிரமாண்டமான திருமணம் என கூறும் அளவிற்கு முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்டின் திருமண நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. இப்படியும் யாராவது திருமணம் செய்வார்களா என்றே பலரையும் அவர்களின் திருமண நிகழ்வு வாயை பிளக்கச் செய்திருக்கின்றது.
இவர்களின் திருமண நிகழ்வில் உள்ளூர் பிரபலங்கள் மட்டுமின்றி சில வெளிநாட்டு பிரபலங்களும் கலந்து வருகின்றனர். குறிப்பாக, நடிகர் ரஜினிகாந்த் போன்ற முன்னணி திரை நட்சத்திரங்கள் பலர் இந்த திருமணத்தில் கலந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த திருமணத்திற்கு என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையிலேயே, பிரத்யேகமாக கார்கள் அலங்கரிக்கப்பட்டு மணமகன் மற்றும் மணமகள் ஊர்வலத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக, ரோல்ஸ் ராய்ஸ் போன்ற உலகின் மிக மிக காஸ்ட்லியான கார்களும் திருமணத்திற்காக அலங்கரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினனின் காரில் ஆனந்த் அம்பானி பயணிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி டிரெண்டாகிக் கொண்டிருக்கின்றது.
மிகவும் தனித்துவமான அலங்கரிப்பை அந்த கார் கொண்டிருக்கின்றது. உலகின் மிகவும் அரிய வகை பூக்கள் மற்றும் அலங்காரப் பொருட்களாலேயே அது அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பூக்களைத் தொடர்ந்து தங்க நிறம் கொண்ட விநோத பொருட்களாலும் இந்த கார் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அது தங்கமாகவே இருந்தாலும் சந்தேகம்பட ஒன்றுமில்லை.
ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். அம்பானி குடும்பத்தினரிடத்தில் இந்த சொகுசு கார் மாடல் மட்டுமே ஐந்திற்கும் மேற்பட்ட யூனிட்டுகள் பயன்பாட்டில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமில்லைங்க, இந்த குடும்பத்தினரிடத்தில் இன்னும் பல ரோல்ஸ் ராய்ஸின் தயாரிப்புகள் பயன்பாட்டில் இருக்கின்றன.
அந்தவகையில், பேந்தம் VIII இடபிள்யூபி (Phantom VIII EWB) போன்ற கார் மாடலும் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர, மெர்சிடிஸ் மேபேக் எஸ்680 (Mercedes Maybach S680), மெர்சிடிஸ் பென்ஸ் வி-கிளாஸ் (Mercedes-Benz V-Class) மற்றும் ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue) போன்ற பிற சொகுசு கார்களும் அம்பானி வீட்டில் உள்ளன.
இந்த அனைத்து கார்களும் முற்றிலும் தனித்துவமான அலங்கரிப்பைக் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காருடன் பயணிக்கும் வீடியோவே தற்போது வெளியாகி இருக்கின்றது. மேலும், திருமண ஊர்வலத்திற்காக தயார் செய்யப்பட்டு இருக்கும் அந்த ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன், அம்பானி குடும்பத்தினருக்கு ஏற்ப சில தனித்துவமான சொகுசு வசதிகளைப் பெற்ற கார் மாடல் என்பது தெரிய வந்திருக்கின்றது.
ஆகையால் மற்ற ரோல்ஸ் ராய்ஸ் கல்லினனைக் காட்டிலும் இந்த கார் மாடல் சற்றே கூடுதல் கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது. இத்துடன், அதிகப்படியான சொகுசு அம்சங்கள், இட வசதி என சொகுசை வாரி வழங்கக் கூடிய கார் மாடலாக இது இருக்கின்ற காரணத்தினாலேயே அடிக்கடி அம்பானி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கார் மாடலில் காட்சித் தந்துக் கொண்டிருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன், சில சிறப்பு எடிசன்களிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதில் சிலவும் இந்த அம்பானி குடம்பத்தினரிடத்தில் பயன்பாட்டில் இருப்பது கவனிக்கத்தகுந்தது. ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் மட்டுமல்ல ஃபெர்ராரி மற்றும் புகாட்டி போன்ற நிறுவனங்களின் கார்களும் அவர்களிடத்தில் உள்ளன. மேலும், திருமண ஊர்வலத்தில் இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான கார்களைப் பயன்படுத்தி இந்தியாவின் பெரும் பணக்காரர் என்பதை அவர்கள் நிரூபிச்சுட்டாங்க.


Click it and Unblock the Notifications









