ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்த ஒற்றை ஆளுக்கா இவ்ளோ பாதுகாப்பு! போர் வீரர்களை போல அணிவகுத்த 10 ஃபார்ச்சூனர் கார்கள்!
ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்த ஒற்றை நபரின் பாதுகாப்பிற்காக 10 டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் பயன்படுத்தப்பட்ட நிகழ்வு இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. 10 டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் மட்டுமல்ல இரண்டு லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர்கள் உட்பட மேலும் பல கார்கள் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்த ஒற்றை நபரின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்தது வேறு யாருமல்ல, இந்தியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி-தான் அவர் ஆவார்.
இந்தியாவில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதன் காரணத்தினாலேயே முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் பயணிக்கும்போது இதுபோன்று பிரமாண்ட எண்ணிக்கையில் வாகனங்கள் பாதுகாப்பிற்காக அணிவகுக்கப்படுகின்றன. அந்தவகையிலேயே தற்போது ஆனந்த் அம்பானியின் பயணத்தின்போதும் மிகப் பெரிய எண்ணிக்கையில் வாகனங்கள் படையெடுக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த கான்வாயில் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு காரின் மதிப்பும் பல லட்சங்களாக உள்ளன. இந்தியாவில் ஒற்றை டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 34 லட்சம் ரூபாயாவது செலவிட வேண்டியிருக்கும். எக்ஸ்-ஷோரூமிலேயே இந்த விலையில் அக்கார் விற்கப்படுகின்றது. இத்தகைய அதிக காஸ்ட்லியான காரே முகேஷ் அம்பானியின் கான்வாயில் 10 யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
அதில், அவர் பயன்படுத்தி ரோல்ஸ் ராய்ஸ் காரின் மதிப்பு மிக மிக காஸ்ட்லியானதாக இருக்கின்றது. ரோல்ஸ் ராய்ஸ்-இன் முக்கிய தயாரிப்பாகக் காட்சியளிக்கும் கல்லினன் கார் மாடலேயே அவர் பயன்படுத்தி இருக்கின்றார். இதன் ஒரே ஒரு யூனிட்டின் மதிப்பு மட்டுமே ரூ. 10 கோடிக்கும் அதிகம் ஆகும்.
எனவே இந்த ஒரு கான்வாயில் மட்டும் பல கோடி ரூபாய்கள் மதிப்புள்ள கார்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன என்பது துள்ளியமாக தெரிகின்றது. இந்த கான்வாயில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களுடன் சேர்த்து வெள்ளை நிற லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் கார்கள் இரண்டு, மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் வேன் ஒன்றும் மற்றும் எம்ஜி குளோஸ்டர் இரண்டும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, ஃபோர்ஸ் அர்பேனியா மற்றும் பிஎம்டபிள்யூவின் நீல நிற எக்ஸ்7 மற்றும் இன்னும் பல எஸ்யூவி ரக கார்களும் ஆனந்த் அம்பானியின் இந்த கான்வாயில் அணி வகுத்திருக்கின்றன. இந்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இதற்கு முன்னரும் ஆனந்த் அம்பானி இதுபோன்று பெரும் வாகன அணிவகுப்புடன் இந்திய சாலைகளில் பயணித்திருக்கின்றார்.

ஆனால், இந்த பயணம் நாட்டில் மிகப் பெரிய அளவில் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. ஒரு முதல்வரின் கான்வாயில்கூட இந்த அளவு அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை. ஆனால், ஆனந்த் அம்பானியின் கான்வாயில் மிக மிக அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, மிகவும் காஸ்ட்லியான கார்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. இது போதாதென்றே அந்த குடும்பத்தினர் தங்கள் சார்பில் மிகப் பெரிய பாதுகாப்பு வளையத்தை வாகனங்கள் வாயிலாக உருவாக்கி இருக்கின்றனர். இதற்கு சான்றாகவே தற்போது வெளியாகி இருக்கும் முகேஷ் அம்பானியின் கான்வாய் வீடியோ உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அம்பானி குடும்பத்தினர் சார்ந்த மற்ற வீடியோக்களைக் காட்டிலும் இந்த வீடியோ சற்றே அதிக ஈர்ப்பை இந்தியர்களிடத்தில் பெற்றிருக்கின்றது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் இந்த வீடியோ மிகப் பெரிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கின்றது. இந்த குடும்பத்தினர் ஃபார்ச்சூனர் காரை மட்டுமல்ல பென்ஸ் ஜி-வேகன் எனும் காஸ்ட்லியான காரையும் கான்வாயில் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








