நிச்சயதார்தத்திற்கு பரிசாக கிடைத்த காரில் வலம் வந்த பிரபலம்.. பாதுகாப்புக்கு இவ்ளோ போலீஸ் வண்டியா!

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட், நாடே மிரண்டு போகும் வகையிலேயே இவர்களின் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் உலகின் பெரும் பணக்காரர்கள் பலர் கலந்துக் கொண்டனர். அவர்கள் மட்டுமல்ல உலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலரும் இந்த திருமணத்தில் கலந்துக் கொண்டனர். திருமணத்தைப் போலவே அவர்களின் நிச்சயதார்த்த நிகழ்வும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. அப்போது மணமக்களுக்கு பல விலையுயர்ந்த பொருட்கள் பரிசாக கிடைத்தன.

அதில் ஒன்றே பென்ட்லீ கான்டினென்டல் ஜிடிசி ஸ்பீடு (Bentley Continental GTC Speed) ஆகும். இந்த காரிலேயே ஆனந்த் அம்பானி தற்போது வலம் வந்திருக்கின்றார். இந்த கார் அவருக்கு பரிசாக கிடைத்து பல மாதங்கள் ஆகின்றன. இருப்பினும், இப்போதே இந்த காரில் அவர் முதல் முறையாக காட்சி தந்திருக்கின்றார்.

Anant ambani drives his engagement gift bentley

2023 ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட காரில் முதல் முறையாக 2025 ஆம் ஆண்டில் அவர் காட்சி தந்திருக்கின்றார். ஆனந்த் அம்பானியே இந்த காரை ஓட்டி சென்றிருக்கின்றார். பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸ் வாகனங்கள் முன்னே செல்ல ஆனந்த் அம்பானி பென்ட்லீ கான்டினென்டல் ஜிடிசி ஸ்பீடு காரை ஓட்டிச் சென்றிருக்கின்றார்.

இது மிகவும் காஸ்ட்லியான கார் மாடல் ஆகும். இந்தியாவில் இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டே ரூ. 5 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இவ்ளோ காஸ்ட்லியான காரை யாருங்க இந்த மணமக்களுக்கு பரிசாக தந்தாங்க என நீங்கள் கேட்கலாம்.

ஆனந்த் அம்பானியின் அப்பா முகேஷ் அம்பானியே நிச்சயதார்த்த பரிசாக வழங்கினார். இந்த காரிலேயே இப்போது கெத்தாக வலம் வர தொடங்கி இருக்கின்றார் ஆனந்த் அம்பானி. இது ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த கார் மாடல் மட்டுமல்ல அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட காரும்கூட.

6.0 லிட்டர் டபிள்யூ 12 வகை எஞ்சினையே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 659 பிஎஸ் மற்றும் 900 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 335 கிமீ ஆகும். அதேவேளையில், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட இந்த காருக்கு வெறும் 3.7 செகண்டுகளே போதுமானது ஆகும்.

அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட கார் மட்டுமல்ல இது, அதீத ஆடம்பர அம்சங்களைத் தாங்கிய வாகனமும் கூட. மிக முக்கியமாக அடாஸ் அம்சம், இருக்கைகளில் மசாஜ் செய்யும் வசதி, மேற்கூரையை தேவைக்கேற்ப மடித்துக் கொள்ளும் வசதி உள்ளிட்டவற்றை இந்த காரில் பார்க்க முடியும்.

இதுமட்டுமல்ல இந்த காரில் சூடாகும் மற்றும் குளிர்ச்சியாகும் வசதிக் கொண்ட இருக்கைகளையும் பார்க்க முடியும். இத்துடன், பிரீமியம் ஸ்பீக்கர், மரத்தாலான பேனல்கள் உள்ளிட்ட அம்சங்களையும் இந்த காரில் காண முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமல்ல இதுபோன்று இன்னும் பல அம்சங்களை இந்த காரில் பென்ட்லீ வழங்கி இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடிசி ஸ்பீடு காரை குறைவான நபர்களே பயன்படுத்தி வருகின்றனர். இதன் விலை மிகவும் காஸ்ட்லி என்பதால் பெரும் செல்வந்தர்களுக்கே இந்த கார் எட்டாக் கனியாக உள்ளது. இத்தகைய காரே ஆனந்த் அம்பானிக்கு நிச்சயதார்த்த பரிசாக கிடைத்திருக்கின்றது. இதிலேயே அவர் தற்போது வலம் வரத் தொடங்கி இருக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 23, 2025, 18:15 [IST]
English summary
Anant ambani seen driving his engagement gift bentley continental gtc speed in mumbai
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+